அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 549

و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرِو بْنِ الرَّبِيعِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الْخَيْرِ ‏ ‏حَدَّثَهُ قَالَ حَدَّثَنِي ‏ ‏ابْنُ وَعْلَةَ السَّبَإِيُّ ‏ ‏قَالَ سَأَلْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏قُلْتُ ‏
‏إِنَّا نَكُونُ ‏ ‏بِالْمَغْرِبِ ‏ ‏فَيَأْتِينَا ‏ ‏الْمَجُوسُ ‏ ‏بِالْأَسْقِيَةِ ‏ ‏فِيهَا الْمَاءُ ‏ ‏وَالْوَدَكُ ‏ ‏فَقَالَ اشْرَبْ فَقُلْتُ أَرَأْيٌ تَرَاهُ فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏دِبَاغُهُ ‏ ‏طَهُورُهُ ‏

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், “நாங்கள் மேற்கே வசிக்கிறோம். (தீவணங்கிகளான) மஜூஸிகள் தோல் பைகளில் தண்ணீரையும் கொழுப்பையும் எங்களிடம் கொண்டு வருகின்றனர். (நாங்கள் அந்தத் தோல்பைகளிலிருந்து அருந்தலாமா?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “அருந்தலாம்” என்றார்கள். நான், “இது உங்களது சொந்தக் கருத்தா?” என்று கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அதைப் பதப்படுத்துவதே அதைத் தூய்மையாக்கி விடும்’ என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 548

حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا وَقَالَ ‏ ‏ابْنُ مَنْصُورٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الرَّبِيعِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ أَيُّوبَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا الْخَيْرِ ‏ ‏حَدَّثَهُ قَالَ ‏ ‏رَأَيْتُ عَلَى ‏ ‏ابْنِ وَعْلَةَ السَّبَإِيِّ ‏ ‏فَرْوًا فَمَسِسْتُهُ فَقَالَ مَا لَكَ تَمَسُّهُ قَدْ ‏ ‏سَأَلْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عَبَّاسٍ ‏ ‏قُلْتُ ‏
‏إِنَّا نَكُونُ ‏ ‏بِالْمَغْرِبِ ‏ ‏وَمَعَنَا ‏ ‏الْبَرْبَرُ ‏ ‏وَالْمَجُوسُ ‏ ‏نُؤْتَى بِالْكَبْشِ قَدْ ذَبَحُوهُ وَنَحْنُ لَا نَأْكُلُ ذَبَائِحَهُمْ وَيَأْتُونَا ‏ ‏بِالسِّقَاءِ ‏ ‏يَجْعَلُونَ فِيهِ ‏ ‏الْوَدَكَ ‏ ‏فَقَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏قَدْ سَأَلْنَا رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ذَلِكَ فَقَالَ ‏ ‏دِبَاغُهُ ‏ ‏طَهُورُهُ ‏

நான் அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்) அவர்கள் தோலாடை ஒன்றை அணிந்திருப்பதைக் கண்டேன். நான் அதைத் தடவிப்பார்த்தேன். அப்போது அவர்கள், “ஏன் இதைத் தடவிப் பார்க்கிறீர்கள்? நாங்கள் மேற்கே வசித்து வருகிறோம். எங்களுடன் (ஆப்பிரிக்கர்களான) பர்பர் இன மக்களும் (தீவணங்கிகளான) மஜூஸிகளும் வசித்து வருகின்றனர். அவர்கள் அறுத்த ஆடுகள் எங்களிடம் கொண்டு வரப்படுவதுண்டு. ஆனால், அவர்கள் அறுத்ததை நாங்கள் சாப்பிடுவதில்லை. மேலும், அவர்கள் தோல்பைகளில் கொழுப்புகளை வைத்து எங்களிடம் கொண்டு வருகின்றனரே (அந்தத் தோலை நாங்கள் பயன்படுத்தலாமா?) என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம்,கேட்டேன். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், நாங்கள் இதைக் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வினவி இருக்கிறோம். அதற்கு அவர்கள், ‘அதைப் பதனிடுவதே அதைத் தூய்மையாக்கி விடும்’ என்று பதிலளித்தார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி) வழியாக அப்துர் ரஹ்மான் பின் வஅலா அஸ்ஸபஇய்யீ (ரஹ்)

அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 547

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ الرَّحْمَنِ بْنَ وَعْلَةَ ‏ ‏أَخْبَرَهُ عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا ‏ ‏دُبِغَ ‏ ‏الْإِهَابُ ‏ ‏فَقَدْ طَهُرَ ‏
‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ عُيَيْنَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَعْلَةَ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏يَعْنِي حَدِيثَ ‏ ‏يَحْيَى بْنِ يَحْيَى

“(செத்த பிராணியின்) தோல் பதனிடப்பட்டு விட்டால் தூய்மை அடைந்து விடும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 546

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِشَاةٍ لِمَوْلَاةٍ ‏ ‏لِمَيْمُونَةَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَلَّا انْتَفَعْتُمْ ‏ ‏بِإِهَابِهَا ‏

(என் சிற்றன்னை) மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குரிய ஆடு ஒன்று (செத்து விட்டது. அது) கிடந்த வழியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றார்கள். அப்போது, “நீங்கள் இதன் தோலால் பயனடையக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 545

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَاصِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَمْرُو بْنُ دِينَارٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَطَاءٌ ‏ ‏مُنْذُ حِينٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏أَنَّ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏أَخْبَرَتْهُ ‏
‏أَنَّ ‏ ‏دَاجِنَةً ‏ ‏كَانَتْ لِبَعْضِ نِسَاءِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَمَاتَتْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَلَّا أَخَذْتُمْ ‏ ‏إِهَابَهَا ‏ ‏فَاسْتَمْتَعْتُمْ بِهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருள் ஒருவருக்கு வளர்ப்புப் பிராணி (ஆடு) ஒன்று இருந்தது. அது செத்து விட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “நீங்கள் இதன் தோலை எடுத்து (பதனிட்டு)ப் பயனடையக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : மைமூனா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 544

و حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏وَعَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ الزُّهْرِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ أَبِي عُمَرَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَّ بِشَاةٍ مَطْرُوحَةٍ أُعْطِيَتْهَا مَوْلَاةٌ ‏ ‏لِمَيْمُونَةَ ‏ ‏مِنْ الصَّدَقَةِ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَلَّا أَخَذُوا ‏ ‏إِهَابَهَا ‏ ‏فَدَبَغُوهُ ‏ ‏فَانْتَفَعُوا بِهِ ‏

மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப் பெண்ணுக்குத் தர்மமாக வழங்கப்பட்ட ஆடு ஒன்று செத்துக் கிடந்தது. அந்த வழியாகக் கடந்து சென்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “இதன் தோலை எடுத்துப் பதனிட்டு அவர்கள் பயனடையக் கூடாதா?” என்று கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 27, ஹதீஸ் எண்: 542

و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏قَالَ ‏
‏تُصُدِّقَ عَلَى مَوْلَاةٍ ‏ ‏لِمَيْمُونَةَ ‏ ‏بِشَاةٍ فَمَاتَتْ فَمَرَّ بِهَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏هَلَّا أَخَذْتُمْ ‏ ‏إِهَابَهَا ‏ ‏فَدَبَغْتُمُوهُ ‏ ‏فَانْتَفَعْتُمْ بِهِ فَقَالُوا إِنَّهَا مَيْتَةٌ فَقَالَ إِنَّمَا حَرُمَ أَكْلُهَا ‏
‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏فِي حَدِيثِهِمَا ‏ ‏عَنْ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهَا ‏

மைமூனா (ரலி) அவர்களின் அடிமைப்பெண் ஒருவருக்குத் தர்மமாக வழங்கப்பட்ட ஓர் ஆடு செத்து விட்டது. அந்த வழியாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, “நீங்கள் இதன் தோலை எடுத்துப் பதனிட்டுப் பயனடையக் கூடாதா?” என்று கேட்டார்கள். மக்கள், “இது செத்துப் போனதாயிற்றே?” என்று கேட்க, அதற்கு அவர்கள், “செத்ததை உண்பதுதான் தடை செய்யப்பட்டுள்ளது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் (ரலி)

குறிப்பு:

மற்றொரு அறிவிப்பில், அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்), இப்னு அபீ உமர் (ரஹ்) ஆகியோர் இந்த ஹதீஸை மைமூனா (ரலி) அவர்களே அறிவித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.