அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 555

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏
‏أَنَّ رَجُلًا مَرَّ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَبُولُ فَسَلَّمَ فَلَمْ يَرُدَّ عَلَيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிறுநீர் கழித்துக் கொண்டிருந்தபோது அவர்களைக் கடந்து சென்ற மனிதர் ஒருவர் ஸலாம் சொன்னார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதில் ஸலாம் சொல்லவில்லை.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 554

قَالَ ‏ ‏مُسْلِم ‏ ‏وَرَوَى ‏ ‏اللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ هُرْمُزَ ‏ ‏عَنْ ‏ ‏عُمَيْرٍ ‏ ‏مَوْلَى ‏ ‏ابْنِ عَبَّاسٍ ‏ ‏أَنَّهُ سَمِعَهُ يَقُولُ ‏
‏أَقْبَلْتُ أَنَا ‏ ‏وَعَبْدُ الرَّحْمَنِ بْنُ يَسَارٍ ‏ ‏مَوْلَى ‏ ‏مَيْمُونَةَ زَوْجِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى دَخَلْنَا عَلَى ‏ ‏أَبِي الْجَهْمِ بْنِ الْحَارِثِ بْنِ الصِّمَّةِ الْأَنْصَارِيِّ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو الْجَهْمِ ‏ ‏أَقْبَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ نَحْوِ ‏ ‏بِئْرِ جَمَلٍ ‏ ‏فَلَقِيَهُ رَجُلٌ فَسَلَّمَ عَلَيْهِ فَلَمْ يَرُدَّ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَيْهِ حَتَّى أَقْبَلَ عَلَى الْجِدَارِ فَمَسَحَ وَجْهَهُ وَيَدَيْهِ ثُمَّ رَدَّ عَلَيْهِ السَّلَامَ ‏

நானும் நபி (ஸல்) அவர்களின் துணைவியார் மைமூனா (ரலி) அவர்களின் முன்னாள் அடிமையான அப்துர் ரஹ்மான் பின் யசார் (ரஹ்) அவர்களும் அபுல் ஜஹ்ம் பின் ஹாரிஸ் பின் ஸிம்மா அல்அன்ஸாரீ (ரலி) அவர்களிடம் சென்றிருந்தபோது, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவுக்கு அருகிலுள்ள) ‘பிஃரு ஜமல்’ எனும் இடத்திலிருந்து வந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களை ஒருவர் சந்தித்து, ஸலாம் சொன்னார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு உடனடியாக பதில் ஸலாம் சொல்லாமல் ஒரு சுவரை நோக்கிப் போய் (அதில் தம் கைகளை அடித்து) தமது முகத்தையும் இரு கைகளையும் தடவி (தயம்மும் செய்து) கொண்ட பின்னர் அவருக்குப் பதில் ஸலாம் சொன்னார்கள்” என்ற ஹதீஸை அபுல்ஜஹ்ம் (ரலி) கூறினார்கள்:

அறிவிப்பாளர் : அபுல்ஜஹ்ம் (ரலி) அவர்கள் வழியாக உமைர் பின் அப்தில்லாஹ் (ரஹ்).

அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 553

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمٍ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ الْقَطَّانَ ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏الْحَكَمُ ‏ ‏عَنْ ‏ ‏ذَرٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏
‏أَنَّ رَجُلًا أَتَى ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ ‏ ‏إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدْ مَاءً فَقَالَ لَا تُصَلِّ ‏ ‏فَقَالَ ‏ ‏عَمَّارٌ ‏ ‏أَمَا تَذْكُرُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِذْ أَنَا وَأَنْتَ فِي ‏ ‏سَرِيَّةٍ ‏ ‏فَأَجْنَبْنَا فَلَمْ نَجِدْ مَاءً فَأَمَّا أَنْتَ فَلَمْ تُصَلِّ وَأَمَّا أَنَا فَتَمَعَّكْتُ فِي التُّرَابِ وَصَلَّيْتُ فَقَالَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا كَانَ ‏ ‏يَكْفِيكَ أَنْ تَضْرِبَ بِيَدَيْكَ الْأَرْضَ ثُمَّ تَنْفُخَ ثُمَّ تَمْسَحَ بِهِمَا وَجْهَكَ وَكَفَّيْكَ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏اتَّقِ اللَّهَ يَا ‏ ‏عَمَّارُ ‏ ‏قَالَ إِنْ شِئْتَ لَمْ أُحَدِّثْ بِهِ ‏
‏قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏وَحَدَّثَنِيهِ ‏ ‏ابْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏مِثْلَ حَدِيثِ ‏ ‏ذَرٍّ ‏ ‏قَالَ وَحَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏ذَرٍّ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ الَّذِي ذَكَرَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏نُوَلِّيكَ مَا تَوَلَّيْتَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ مَنْصُورٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏النَّضْرُ بْنُ شُمَيْلٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏الْحَكَمِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ذَرًّا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ‏ ‏قَالَ قَالَ ‏ ‏الْحَكَمُ ‏ ‏وَقَدْ ‏ ‏سَمِعْتَهُ مِنْ ‏ ‏ابْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ رَجُلًا أَتَى ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ إِنِّي أَجْنَبْتُ فَلَمْ أَجِدْ مَاءً ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ وَزَادَ فِيهِ قَالَ ‏ ‏عَمَّارٌ ‏ ‏يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ إِنْ شِئْتَ ‏ ‏لِمَا جَعَلَ اللَّهُ عَلَيَّ مِنْ حَقِّكَ ‏ ‏لَا أُحَدِّثُ بِهِ أَحَدًا ‏ ‏وَلَمْ يَذْكُرْ حَدَّثَنِي ‏ ‏سَلَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏ذَرٍّ ‏

உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, “நான் பெருந்துடக்குடையவனாகி விட்டேன். ஆனால் (குளிப்பதற்கு) எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. (என்ன செய்ய?)” என்று கேட்டார். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “நீர் தொழ வேண்டியதில்லை” என்று கூறினார்கள். அப்போது (அங்கிருந்த) அம்மார் (ரலி) அவர்கள், “இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! நானும் நீங்களும் ஒரு படைப்பிரிவில் இருந்தோம். அப்போது நமக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடையாகி) விட்டது. நமக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. எனவே, நீங்கள் தொழவில்லை; நானோ (குளியலுக்குப் பகரமாக) மண்ணில் புரண்டெழுந்து பின்னர் தொழுதேன். (இதுபற்றி நான் தெரிவித்தபோது), நபி (ஸல்) அவர்கள், ‘உம்மிரு கைகளையும் தரையில் அடித்துப் பிறகு (கைகளை) ஊதிவிட்டுப் பின்னர் இரு கைகளால் உமது முகத்தையும் இரு முன் கைகளையும் தடவிக் கொண்டிருந்தால் போதுமே (ஏன் மண்ணில் புரண்டீர்கள்?)’ என்று கூறியது உங்களுக்கு நினைவில்லையா?” என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “அல்லாஹ்வை அஞ்சிக் கொள், அம்மாரே!” என்று சொன்னார்கள். உடனே அம்மார் (ரலி) அவர்கள், “நீங்கள் விரும்பினால் இதை நான் யாருக்கும் அறிவிக்கமாட்டேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ரலி).

குறிப்பு:

ஸலமா (ரஹ்) வழி அறிவிப்பில், “நீர் பொறுப்பேற்றுக் கொண்டதற்கு உம்மையே நாம் பொறுப்பாளியாக்கினோம்” என்று உமர் (ரலி) அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

“உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் வந்து, எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்டது…” என்றே தொடங்கும் நள்ரிப்னு அஷ்ஷுமைல் (ரஹ்) வழி அறிவிப்பில், அம்மார் (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர்களின் தலைவரே! உங்களுக்கு என் மீது இறைவன் விதியாக்கிய கடமையை முன்னிட்டு இதை நான் யாரிடமும் அறிவிக்கக் கூடாது என்று நீங்கள் விரும்பினால் நான் இதை யாருக்கும் அறிவிக்க மாட்டேன் என்று கூறினார்கள்” என அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 552

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏قَالَ ‏ ‏كُنْتُ جَالِسًا مَعَ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏وَأَبِي مُوسَى ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏
‏يَا ‏ ‏أَبَا عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَرَأَيْتَ لَوْ أَنَّ رَجُلًا أَجْنَبَ فَلَمْ يَجِدْ الْمَاءَ شَهْرًا كَيْفَ يَصْنَعُ بِالصَّلَاةِ فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَا يَتَيَمَّمُ وَإِنْ لَمْ يَجِدْ الْمَاءَ شَهْرًا فَقَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏فَكَيْفَ بِهَذِهِ الْآيَةِ فِي سُورَةِ ‏ ‏الْمَائِدَةِ ‏ ‏فَلَمْ تَجِدُوا مَاءً فَتَيَمَّمُوا صَعِيدًا طَيِّبًا ‏
‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏لَوْ رُخِّصَ لَهُمْ فِي هَذِهِ الْآيَةِ لَأَوْشَكَ إِذَا بَرَدَ عَلَيْهِمْ الْمَاءُ أَنْ يَتَيَمَّمُوا ‏ ‏بِالصَّعِيدِ ‏ ‏فَقَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏لِعَبْدِ اللَّهِ ‏ ‏أَلَمْ تَسْمَعْ قَوْلَ ‏ ‏عَمَّارٍ ‏ ‏بَعَثَنِي رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي حَاجَةٍ فَأَجْنَبْتُ فَلَمْ أَجِدْ الْمَاءَ فَتَمَرَّغْتُ فِي ‏ ‏الصَّعِيدِ ‏ ‏كَمَا تَمَرَّغُ الدَّابَّةُ ثُمَّ أَتَيْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَذَكَرْتُ ذَلِكَ لَهُ فَقَالَ إِنَّمَا كَانَ ‏ ‏يَكْفِيكَ أَنْ تَقُولَ بِيَدَيْكَ هَكَذَا ثُمَّ ضَرَبَ بِيَدَيْهِ الْأَرْضَ ضَرْبَةً وَاحِدَةً ثُمَّ مَسَحَ الشِّمَالَ عَلَى الْيَمِينِ وَظَاهِرَ كَفَّيْهِ وَوَجْهَهُ ‏
‏فَقَالَ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَوَلَمْ تَرَ ‏ ‏عُمَرَ ‏ ‏لَمْ يَقْنَعْ بِقَوْلِ ‏ ‏عَمَّارٍ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَاحِدِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏شَقِيقٍ ‏ ‏قَالَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏لِعَبْدِ اللَّهِ ‏ ‏وَسَاقَ الْحَدِيثَ بِقِصَّتِهِ نَحْوَ حَدِيثِ ‏ ‏أَبِي مُعَاوِيَةَ ‏ ‏غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا كَانَ يَكْفِيكَ أَنْ تَقُولَ هَكَذَا وَضَرَبَ بِيَدَيْهِ إِلَى الْأَرْضِ فَنَفَضَ يَدَيْهِ فَمَسَحَ وَجْهَهُ وَكَفَّيْهِ ‏

நான் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி) ஆகியோருடன் அமர்ந்திருந்தேன். அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள், “அபூஅப்திர் ரஹ்மான்! பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) விட்ட ஒருவருக்கு ஒருமாத காலம்வரை தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர் எவ்வாறு தொழுவார்?” என்று (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் அவர்களிடம்) கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், “ஒரு மாத காலம் தண்ணீர் கிடைக்காவிட்டாலும் சரியே, அவர் தயம்மும் செய்ய மாட்டார். (அவர் தொழவும் மாட்டார்)” என்று கூறினார்கள். “எனில், அல்மாயிதா அத்தியாயத்தில் வரும் ‘உங்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் சுத்தமான மண்ணில் தயம்மும் செய்து கொள்ளுங்கள்’ எனும் இந்த (5:6ஆவது) வசனத்தை என்ன செய்வது?” என்று அபூ மூஸா (ரலி) கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), “இந்த வசனத்தின் மூலம் மக்களுக்கு (நெகிழ்ச்சியான) அனுமதி அளிக்கப்பட்டு விடுமானால் தண்ணீர் அவர்களுக்குக் குளிராகத் தெரிந்தால்கூட மண்ணில் தயம்மும் செய்து கொள்ள முயலுவர்” என்றார்கள்.

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஒரு தேவை கருதி, (படைப்பிரிவொன்றில்) அனுப்பி வைத்தார்கள். அப்(பயணத்தின்)போது எனக்குப் பெருந்துடக்கு ஏற்பட்டது. அப்போது எனக்குத் தண்ணீர் கிடைக்கவில்லை. ஆகவே, நான் (குளியலுக்குப் பகரகாகத் தயம்மும் செய்வதற்காகப்) பிராணிகள் புரள்வதைப் போன்று மண்ணில் புரண்டேன். பிறகு (ஊர் திரும்பியதும்) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைச் சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ‘உங்களுடைய கரங்களால் இப்படிச் செய்திருந்தால் போதுமே!’ என்று கூறி, தம் கரங்களால் பூமியில் ஓர் அடி அடித்து, பின்னர் தமது இடக்கரத்தால் வலக்கரத்தையும் இரு புறங்கைகளையும் முகத்தையும் தடவிக் காட்டினார்கள்” என்று அம்மார் பின் யாசிர் (ரலி) அவர்கள் (உமர் (ரலி) அவர்களிடம்) சொன்ன செய்தியை நீங்கள் கேள்விப் படவில்லையா? என்று அபூமூஸா (ரலி) கேட்டார்கள்.

“அம்மார் (ரலி) அவர்கள் கூற்றில் உமர் (ரலி) அவர்களுக்கு மனநிறைவு ஏற்படவில்லை என்பதைத் தாங்கள் அறியவில்லையா?” என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) திருப்பிக் கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அம்மார் (ரலி) வழியாக ஷகீக் பின் சலமா (ரஹ்)

குறிப்பு:

இதே ஹதீஸ் அபூமுஆவியா (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) அவர்கள், இப்படிச் செய்திருந்தால் உங்களுக்குப் போதுமானதாகி இருந்திருக்குமே! என்று கூறி விட்டு, தம் கைகளை பூமியில் அடித்து, பின்னர் அவற்றை உதறிவிட்டு, தமது முகத்திலும் முன்கைகளிலும் தடவினார்கள்” என்று ‘முன்கைகள்’ எனும் சொல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

பெருந்துடக்கு என்பது தம்பதியர் உடலுறவு கொள்ளும்போதோ தூக்கத்திலோ விந்து வெளியேறி விடுவதைக் குறிப்பதாகும்.

அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 551

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏وَابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏
‏أَنَّهَا اسْتَعَارَتْ مِنْ ‏ ‏أَسْمَاءَ ‏ ‏قِلَادَةً ‏ ‏فَهَلَكَتْ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَاسًا مِنْ أَصْحَابِهِ فِي طَلَبِهَا فَأَدْرَكَتْهُمْ الصَّلَاةُ فَصَلَّوْا بِغَيْرِ وُضُوءٍ فَلَمَّا أَتَوْا النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏شَكَوْا ذَلِكَ إِلَيْهِ فَنَزَلَتْ آيَةُ التَّيَمُّمِ فَقَالَ ‏ ‏أُسَيْدُ بْنُ حُضَيْرٍ ‏ ‏جَزَاكِ اللَّهُ خَيْرًا فَوَاللَّهِ مَا نَزَلَ بِكِ أَمْرٌ قَطُّ إِلَّا جَعَلَ اللَّهُ لَكِ مِنْهُ مَخْرَجًا وَجَعَلَ لِلْمُسْلِمِينَ فِيهِ بَرَكَةً ‏

நான் (என் சகோதரி) அஸ்மாவிடம் கழுத்துமாலை ஒன்றை இரவல் வாங்கினேன். அது (பனூ முஸ்தலிக் போரின் பயணத்தில்) தொலைந்து விட்டது. ஆகவே, அதைத் தேடுவதற்காக தம் தோழர்களில் சிலரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். (அவர்கள் அதைத் தேடச் சென்றனர்). அப்போது (வழியில்) அவர்களுக்குத் தொழுகை நேரம் வந்து விட்டது. அந்த நேரம் (உளூச் செய்வதற்குத் தண்ணீர் கிடைக்காததால்) உளூச் செய்யாமலேயே அவர்கள் தொழுதார்கள். அவர்கள் திரும்பி வந்தபோது (உளூச் செய்யாமல் தொழுதது குறித்து) நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டனர். அப்போதுதான் ‘தயம்மும்’ தொடர்பான (5:6 ஆவது) இறைவசனம் அருளப் பெற்றது.

இதையடுத்து (என்னிடம்) உٍஸைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள், “தங்களுக்கு அல்லாஹ் நற்கூலி வழங்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! ஓர் (இக்கட்டான) சம்பவம் நேரும்போதெல்லாம் அதிலிருந்து விடுபடுவதற்கான வழிவகைகளைத் தங்களுக்கும் அதில் ஒரு வளமான பலனை முஸ்லிம்களுக்கும் அல்லாஹ் ஏற்படுத்தாமல் இருந்ததில்லை” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 3, பாடம்: 28, ஹதீஸ் எண்: 550

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَنَّهَا قَالَتْ ‏
‏خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَعْضِ أَسْفَارِهِ حَتَّى إِذَا كُنَّا ‏ ‏بِالْبَيْدَاءِ ‏ ‏أَوْ ‏ ‏بِذَاتِ الْجَيْشِ ‏ ‏انْقَطَعَ عِقْدٌ لِي فَأَقَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى الْتِمَاسِهِ وَأَقَامَ النَّاسُ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَأَتَى النَّاسُ إِلَى ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏فَقَالُوا أَلَا ‏ ‏تَرَى إِلَى مَا صَنَعَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏أَقَامَتْ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَبِالنَّاسِ مَعَهُ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ فَجَاءَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاضِعٌ رَأْسَهُ عَلَى فَخِذِي قَدْ نَامَ فَقَالَ حَبَسْتِ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالنَّاسَ وَلَيْسُوا عَلَى مَاءٍ وَلَيْسَ مَعَهُمْ مَاءٌ قَالَتْ فَعَاتَبَنِي ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَقَالَ مَا شَاءَ اللَّهُ أَنْ يَقُولَ وَجَعَلَ يَطْعُنُ بِيَدِهِ فِي خَاصِرَتِي فَلَا يَمْنَعُنِي مِنْ التَّحَرُّكِ إِلَّا مَكَانُ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَلَى فَخِذِي فَنَامَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى أَصْبَحَ عَلَى غَيْرِ مَاءٍ فَأَنْزَلَ اللَّهُ آيَةَ التَّيَمُّمِ فَتَيَمَّمُوا فَقَالَ ‏ ‏أُسَيْدُ بْنُ الْحُضَيْرِ ‏ ‏وَهُوَ أَحَدُ النُّقَبَاءِ مَا هِيَ بِأَوَّلِ بَرَكَتِكُمْ يَا آلَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَبَعَثْنَا الْبَعِيرَ الَّذِي كُنْتُ عَلَيْهِ فَوَجَدْنَا الْعِقْدَ تَحْتَهُ ‏

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேற்கொண்ட (பனூ முஸ்தலிக் போரின்) பயணத்தில் அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். நாங்கள் (மதீனாவுக்கும் கைபருக்கும் இடையே) ‘பைதா’ அல்லது ‘தாத்துல் ஜைஷ்’ எனுமிடத்தில் (வந்து கொண்டு) இருந்தபோது (என் சகோதரி அஸ்மாவிடம் நான் இரவல் வாங்கியிருந்த) எனது கழுத்துமாலை அறுந்து விழுந்து (காணாமற் போய்) விட்டது. அதைத் தேடுவதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்குத்) தங்கினார்கள். அவர்களுடன் மக்களும் தங்கினர். அப்போது அவர்கள் எந்த நீர் நிலை அருகிலும் இருக்கவில்லை; அவர்களிடமும் தண்ணீர் இருப்பு இல்லை.

அப்போது மக்கள் (என் தந்தை) அபூ பக்ரு (ரலி) அவர்களிடம் சென்று, ” (உங்கள் புதல்வி) ஆயிஷா செய்ததை நீங்கள் பார்த்தீர்களா? அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (இங்குத்) தங்கும்படி செய்து விட்டார். இங்குத் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று முறையிட்டனர். உடனே அபூபக்ரு (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் மடிமீது தலை வைத்து உறங்கிக் கொண்டிருந்தார்கள். என் தந்தை (என்னைப் பார்த்து), “அல்லாஹ்வின் தூதரையும் மக்களையும் (பயணத்தைத் தொடர முடியாமல்) தடுத்து விட்டாயே! இங்குத் தண்ணீர் இல்லை; மக்களிடமும் தண்ணீர் இல்லை” என்று கூறினார்கள். அவர்கள் எதைச் சொல்ல இறைவன் நாடினானோ அதையெல்லாம் சொல்லி என்னைக் கண்டித்தபடி தமது கரத்தால் எனது இடுப்பில் குத்தலானார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் மடிமீது (தலை வைத்துப் படுத்து) இருந்தது, என்னை அசைய விடாமல் (அடி வாங்கிக் கொண்டிருக்கும்படி) செய்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதிகாலையில் விழித்தெழுந்த போதும் தண்ணீர் கிட்டவில்லை. அப்போது தான் ‘தயம்மும்’ உடைய (5:6ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். மக்கள் ‘தயம்மும்’ செய்தனர்.

(இது குறித்து) ‘அல் அகபா’ உறுதிமொழி அளித்த தலைவர்களில் ஒருவரான உஸைத் பின் அல்ஹுளைர் (ரலி) அவர்கள், “அபூபக்ரின் குடும்பத்தாரே! உங்கள் மூலமாக ஏற்பட்ட பரக்கத்(சமுதாய நலன்)களுள் இ(ந்தத் தயம்மும் எனும் சலுகையான)து, முதலாவதன்று” என்று கூறினார்கள். (பிறகு) நானிருந்த ஒட்டகத்தைக் கிளப்பியபோது, அதன் அடியில் (காணாமற் போன) அந்தக் கழுத்துமாலை கிடந்தது.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)