அத்தியாயம்: 3, பாடம்: 04, ஹதீஸ் எண்: 456

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏وَأَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَهُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُنْذِرِ بْنِ يَعْلَى وَيُكْنَى أَبَا يَعْلَى ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ الْحَنَفِيَّةِ ‏ ‏عَنْ ‏ ‏عَلِيٍّ ‏ ‏قَالَ ‏
‏كُنْتُ رَجُلًا مَذَّاءً وَكُنْتُ ‏ ‏أَسْتَحْيِي أَنْ أَسْأَلَ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِمَكَانِ ابْنَتِهِ فَأَمَرْتُ ‏ ‏الْمِقْدَادَ بْنَ الْأَسْوَدِ ‏ ‏فَسَأَلَهُ فَقَالَ ‏ ‏يَغْسِلُ ذَكَرَهُ وَيَتَوَضَّأُ ‏

அடிக்கடி இச்சை நீர் (மதீ) வெளிப்படுபவனாக நானிருந்தேன். நபி (ஸல்) அவர்களின் மகள் என் மனைவியாதலால் இதுபற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்க வெட்கப்பட்டதால் மிக்தாத் பின் அல்அஸ்வத் (ரலி) அவர்களிடம் (இதைக் குறித்து நபியவர்களிடம் கேட்குமாறு) கூறினேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “ஆணுறுப்பைக் கழுவிக் கொண்டு அங்கத் தூய்மை (உளூ) செய்து கொள்ளலாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ பின் அபீதாலிப் (ரலி).

Share this Hadith:

Leave a Comment