அத்தியாயம்: 31, பாடம்: 0, ஹதீஸ் எண்: 3247

وَحَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالَ ابْنُ حُجْرٍ أَخْبَرَنَا وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهْوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ عَنْ زَيْدِ بْنِ خَالِدٍ الْجُهَنِيِّ :‏

أَنَّ رَجُلاً، سَأَلَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم عَنِ اللُّقَطَةِ فَقَالَ ‏”عَرِّفْهَا سَنَةً ثُمَّ اعْرِفْ وِكَاءَهَا وَعِفَاصَهَا ثُمَّ اسْتَنْفِقْ بِهَا فَإِنْ جَاءَ رَبُّهَا فَأَدِّهَا إِلَيْهِ ‏”‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الْغَنَمِ قَالَ ‏”‏ خُذْهَا فَإِنَّمَا هِيَ لَكَ أَوْ لأَخِيكَ أَوْ لِلذِّئْبِ ‏”‏ ‏.‏ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ فَضَالَّةُ الإِبِلِ قَالَ فَغَضِبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى احْمَرَّتْ وَجْنَتَاهُ – أَوِ احْمَرَّ وَجْهُهُ – ثُمَّ قَالَ ‏”‏ مَا لَكَ وَلَهَا مَعَهَا حِذَاؤُهَا وَسِقَاؤُهَا حَتَّى يَلْقَاهَا رَبُّهَا ‏”‏ ‏.‏


وَحَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي سُفْيَانُ الثَّوْرِيُّ، وَمَالِكُ بْنُ أَنَسٍ وَعَمْرُو بْنُ الْحَارِثِ وَغَيْرُهُمْ أَنَّ رَبِيعَةَ بْنَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، حَدَّثَهُمْ بِهَذَا الإِسْنَادِ، مِثْلَ حَدِيثِ مَالِكٍ غَيْرَ أَنَّهُ زَادَ قَالَ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنَا مَعَهُ فَسَأَلَهُ عَنِ اللُّقَطَةِ ‏.‏ قَالَ وَقَالَ عَمْرٌو فِي الْحَدِيثِ ‏ “‏ فَإِذَا لَمْ يَأْتِ لَهَا طَالِبٌ فَاسْتَنْفِقْهَا ‏”‏ ‏.‏

وَحَدَّثَنِي أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ الأَوْدِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنِي سُلَيْمَانُ، – وَهُوَ ابْنُ بِلاَلٍ – عَنْ رَبِيعَةَ بْنِ أَبِي عَبْدِ الرَّحْمَنِ، عَنْ يَزِيدَ، مَوْلَى الْمُنْبَعِثِ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ، يَقُولُ أَتَى رَجُلٌ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ ‏.‏ غَيْرَ أَنَّهُ قَالَ فَاحْمَارَّ وَجْهُهُ وَجَبِينُهُ وَغَضِبَ ‏.‏ وَزَادَ بَعْدَ قَوْلِهِ ‏”‏ ثُمَّ عَرِّفْهَا سَنَةً ‏”‏ ‏.‏ ‏”‏ فَإِنْ لَمْ يَجِئْ صَاحِبُهَا كَانَتْ وَدِيعَةً عِنْدَكَ ‏”‏ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றி ஒருவர் கேட்டார். அதற்கு, “ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்துகொண்டேயிரு. அதன் முடிச்சையும் பையையும் அடையாளம் பார்த்து வைத்துக்கொள். அதன் உரிமையாளர் வந்தால் அவரிடம் ஒப்படைத்துவிடு; வராவிட்டால் நீயே செலவழித்துக்கொள்” என்று கூறினார்கள்.

அவர் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! வுழிதவறி வந்த ஆட்டை என்ன செய்வது?” என்று கேட்டார். “அதை நீ பிடித்துக்கொள். ஏனெனில், அது உனக்குரியது அல்லது உன் சகோதரனுக்குரியது அல்லது ஓநாய்க்குரியது” என்று சொன்னார்கள்.

அவர் (மீண்டும்), “அல்லாஹ்வின் தூதரே! வுழிதவறி வந்த ஒட்டகத்தை என்ன செய்வது?” என்று கேட்டார். இதை கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் அவர்களின் இரு கன்னங்களும் / அவர்களது முகம் சிவந்து விடும் அளவுக்குக் கோபப்பட்டார்கள். பிறகு, “உனக்கு அதைப் பற்றிக் கவலைப்பட என்ன இருக்கிறது? அதை அதன் உரிமையாளர் சந்திக்கும்வரை (நடப்பதற்கு) அதனுடன் கால்குளம்பும் (குடிப்பதற்கு) அதன் திமிலும் உள்ளது. (அது சுயமாக வாழ்ந்துகொள்ளும்)” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி)


குறிப்புகள் :

மாலிக் பின் அனஸ் (ரலி) & ஸுஃப்யான் ஸவ்ரி (ரஹ்) வழி அறிவிப்பு, “ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது அவர்களுடன் நானும் இருந்தேன் அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கண்டெடுக்கப்பட்ட பொருளைப் பற்றிக் கேட்டார் …” என்று ஆரம்பமாகிறது.

அம்ரு பின் அல்ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், “ … அதைத் தேடிக்கொண்டு (ஓராண்டுக் காலத்திற்குள்) யாரும் வராவிட்டால் நீயே அதைச் செலவழித்துக்கொள்” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

ஸுலைமான் பின் பிலால் (ரஹ்) வழி அறிவிப்பு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒருவர் வந்து … ” என்று ஆரம்பமாகிறது. மற்ற தகவல்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

மேலும் அதில், “… இதைக் கேட்டதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகமும் நெற்றியும் சிவந்துவிட்டன. அவர்கள் கோபமடைந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது. மேலும், “ஓராண்டுக் காலத்திற்கு அதைப் பற்றி அறிவிப்புச் செய்” என்பதற்குப் பிறகு “அதன் உரிமையாளர் வராவிட்டால் உன்னிடம் அது அடைக்கலமாக இருக்கட்டும்!” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith: