அத்தியாயம்: 32, பாடம்: 37, ஹதீஸ் எண்: 3346

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، حَدَّثَنَا وَكِيعٌ، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ قَالَ :‏

كَأَنِّي أَنْظُرُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَحْكِي نَبِيًّا مِنَ الأَنْبِيَاءِ ضَرَبَهُ قَوْمُهُ وَهُوَ يَمْسَحُ الدَّمَ عَنْ وَجْهِهِ وَيَقُولُ ‏ “‏ رَبِّ اغْفِرْ لِقَوْمِي فَإِنَّهُمْ لاَ يَعْلَمُونَ ‏”‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، وَمُحَمَّدُ بْنُ بِشْرٍ، عَنِ الأَعْمَشِ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ فَهُوَ يَنْضِحُ الدَّمَ عَنْ جَبِينِهِ ‏.‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), இறைத்தூதர்களுள் ஒருவரின் நிலையை (ஒருமுறை) விவரித்த நிகழ்வை நான் இப்போதும் (மனக்கண்களால்) பார்ப்பதைப் போன்றுள்ளது:

அந்த இறைத் தூதரை அவருடைய சமுதாயத்தார் அடித்தனர். அவரோ தமது முகத்திலிருந்து இரத்தத்தைத் துடைத்தபடி, “இறைவா! என் சமுதாயத்தாரை மன்னித்துவிடு. ஏனெனில், அவர்கள் அறியாதவர்களாக இருக்கிறார்கள்” என்று சொல்லிக்கொண்டிருந்தார் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)


குறிப்பு :

அபூபக்ரு பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர் தமது நெற்றியிலிருந்து இரத்தத்தை வழித்துக்கொண்டிருந்தார்“ என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 32, பாடம்: 37, ஹதீஸ் எண்: 3345

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم كُسِرَتْ رَبَاعِيَتُهُ يَوْمَ أُحُدٍ وَشُجَّ فِي رَأْسِهِ فَجَعَلَ يَسْلُتُ الدَّمَ عَنْهُ وَيَقُولُ ‏”‏ كَيْفَ يُفْلِحُ قَوْمٌ شَجُّوا نَبِيَّهُمْ وَكَسَرُوا رَبَاعِيَتَهُ وَهُوَ يَدْعُوهُمْ إِلَى اللَّهِ ‏”‏ ‏.‏ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ لَيْسَ لَكَ مِنَ الأَمْرِ شَىْءٌ‏}‏

உஹுதுப் போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முன்பற்களில் (கீழ் வரிசையில் வலப்புறப் பல்) ஒன்று உடைக்கப்பட்டது. அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) காயத்திலிருந்து வழிந்த இரத்தத்தைத் துடைத்தபடியே, “தங்களை அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக்கொண்டிக்கும் தங்களுடைய நபியைக் காயப்படுத்தி, அவரது பல்லை உடைத்த ஒரு சமுதாயம் எப்படி உருப்படும்?” என்று கூறலானார்கள்.

அப்போதுதான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அதிகாரத்தில் உமக்கு எந்தப் பங்கும் இல்லை” (3:128) எனும் வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 32, பாடம்: 37, ஹதீஸ் எண்: 3344

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ :‏

يُسْأَلُ عَنْ جُرْحِ، رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ أُحُدٍ فَقَالَ جُرِحَ وَجْهُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَكُسِرَتْ رَبَاعِيَتُهُ وَهُشِمَتِ الْبَيْضَةُ عَلَى رَأْسِهِ فَكَانَتْ فَاطِمَةُ بِنْتُ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم تَغْسِلُ الدَّمَ وَكَانَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ يَسْكُبُ عَلَيْهَا بِالْمِجَنِّ فَلَمَّا رَأَتْ فَاطِمَةُ أَنَّ الْمَاءَ لاَ يَزِيدُ الدَّمَ إِلاَّ كَثْرَةً أَخَذَتْ قِطْعَةَ حَصِيرٍ فَأَحْرَقَتْهُ حَتَّى صَارَ رَمَادًا ثُمَّ أَلْصَقَتْهُ بِالْجُرْحِ فَاسْتَمْسَكَ الدَّمُ ‏


حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا يَعْقُوبُ، – يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ – عَنْ أَبِي حَازِمٍ، أَنَّهُ سَمِعَ سَهْلَ بْنَ سَعْدٍ، وَهُوَ يُسْأَلُ عَنْ جُرْحِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ أَمَ وَاللَّهِ إِنِّي لأَعْرِفُ مَنْ كَانَ يَغْسِلُ جُرْحَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَنْ كَانَ يَسْكُبُ الْمَاءَ ‏.‏ وَبِمَاذَا دُووِيَ جُرْحُهُ ‏.‏ ثُمَّ ذَكَرَ نَحْوَ حَدِيثِ عَبْدِ الْعَزِيزِ غَيْرَ أَنَّهُ زَادَ وَجُرِحَ وَجْهُهُ وَقَالَ مَكَانَ هُشِمَتْ كُسِرَتْ ‏.‏

وَحَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَابْنُ أَبِي عُمَرَ جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، ح وَحَدَّثَنَا عَمْرُو بْنُ سَوَّادٍ الْعَامِرِيُّ، أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي هِلاَلٍ، ح وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ سَهْلٍ التَّمِيمِيُّ، حَدَّثَنِي ابْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا مُحَمَّدٌ، – يَعْنِي ابْنَ مُطَرِّفٍ – كُلُّهُمْ عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ ‏.‏ بِهَذَا الْحَدِيثِ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ فِي حَدِيثِ ابْنِ أَبِي هِلاَلٍ أُصِيبَ وَجْهُهُ ‏.‏ وَفِي حَدِيثِ ابْنِ مُطَرِّفٍ جُرِحَ وَجْهُهُ ‏.‏

ஸஹ்லு பின் ஸஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு உஹுதுப் போர் நாளில் ஏற்பட்ட காயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. அவர்களின் முன்பற்களில் (கீழ் வரிசையில் வலப் புறப்பல்) ஒன்று உடைக்கப்பட்டது. தலைக் கவசம் அவர்களது தலையில் வைத்தே நொறுக்கப்பட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் ஃபாத்திமா (ரலி) (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முகத்திலிருந்து வழிந்த) இரத்தத்தைக் கழுவிக்கொண்டிருந்தார்கள். அலீ பின் அபீ தாலிப் (ரலி) (தமது) கேடயத்தில் தண்ணீர் (நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) ஊற்றிக்கொண்டிருந்தார்கள்.

தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிகமாக்குவதைக் கண்ட ஃபாத்திமா (ரலி), ஒரு பாய்த் துண்டை எடுத்து வந்து சாம்பலாகும்வரை அதைக் கரித்து, அதைக் காயத்தில் வைத்து அழுத்தினார்கள். இரத்தம் (வழிவது) நின்றுவிட்டது.

அறிவிப்பாளர் : ஸஹ்லு பின் ஸஅத் (ரலி) வழியாக அபூஹாஸிம் ஸலமா பின் தீனார் (ரஹ்)


குறிப்பு :

யஃகூப் (ரஹ்) வழி அறிவிப்பு, “ஸஹ்லு பின் ஸஅத் (ரலி) அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுதுப் போரில்) ஏற்பட்ட காயங்கள் குறித்துக் கேட்கப்பட்டது …” என்று தொடங்கி, ஸஹ்லு (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவிவிட்டவரையும், (கழுவுவதற்காகத்) தண்ணீரை ஊற்றிக்கொண்டிருந்தவரையும், மருந்துக்குப் பயன்படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன் …” என்று தொடர்கிறது. இந்த அறிவிப்பில் “அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது” எனும் தகவல் (ஹதீஸின் இறுதியில்) இடம்பெற்றுள்ளது

ஸயீத் பின் அபீஹிலால் (ரஹ்) வழி அறிவிப்பில் “அவர்களுடைய முகம் தாக்கப்பட்டது” என்றும், முஹம்மது பின் முதர்ரிஃப் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்களுடைய முகம் காயப்படுத்தப்பட்டது” என்றும் இடம்பெற்றுள்ளது.