அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3397

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ قَالاَ حَدَّثَنَا حَاتِمٌ،  – وَهُوَ ابْنُ إِسْمَاعِيلَ – عَنِ الْمُهَاجِرِ بْنِ مِسْمَارٍ، عَنْ عَامِرِ بْنِ سَعْدِ بْنِ أَبِي وَقَّاصٍ، قَالَ كَتَبْتُ إِلَى جَابِرِ بْنِ سَمُرَةَ مَعَ غُلاَمِي نَافِعٍ أَنْ أَخْبِرْنِي بِشَىْءٍ، سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ فَكَتَبَ إِلَىَّ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَوْمَ جُمُعَةٍ عَشِيَّةَ رُجِمَ الأَسْلَمِيُّ يَقُولُ ‏”‏ لاَ يَزَالُ الدِّينُ قَائِمًا حَتَّى تَقُومَ السَّاعَةُ أَوْ يَكُونَ عَلَيْكُمُ اثْنَا عَشَرَ خَلِيفَةً كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ ‏”‏ ‏.‏ وَسَمِعْتُهُ يَقُولُ ‏”‏ عُصَيْبَةٌ مِنَ الْمُسْلِمِينَ يَفْتَتِحُونَ الْبَيْتَ الأَبْيَضَ بَيْتَ كِسْرَى أَوْ آلِ كِسْرَى ‏”‏ ‏.‏ وَسَمِعْتُهُ يَقُولُ ‏”‏ إِنَّ بَيْنَ يَدَىِ السَّاعَةِ كَذَّابِينَ فَاحْذَرُوهُمْ ‏”‏ ‏.‏ وَسَمِعْتُهُ يَقُولُ ‏”‏ إِذَا أَعْطَى اللَّهُ أَحَدَكُمْ خَيْرًا فَلْيَبْدَأْ بِنَفْسِهِ وَأَهْلِ بَيْتِهِ ‏”‏ ‏.‏ وَسَمِعْتُهُ يَقُولُ ‏”‏ أَنَا الْفَرَطُ عَلَى الْحَوْضِ ‏”‏ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي فُدَيْكٍ، حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ، عَنْ مُهَاجِرِ بْنِ مِسْمَارٍ عَنْ عَامِرِ بْنِ سَعْدٍ، أَنَّهُ أَرْسَلَ إِلَى ابْنِ سَمُرَةَ الْعَدَوِيِّ حَدِّثْنَا مَا، سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏.‏ فَذَكَرَ نَحْوَ حَدِيثِ حَاتِمٍ

நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதி, அதை என் பணியாள் நாஃபிஉ மூலம் கொடுத்தனுப்பினேன். அதில் “நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எனக்குத் தெரிவியுங்கள்” என்று கேட்டிருந்தேன். அவர்கள் எனக்குப் (பின்வருமாறு) பதில் கடிதம் எழுதினார்கள்:

ஒரு வெள்ளிக்கிழமை தினத்தன்று மாஇஸ் அல்அஸ்லமீ (ரலி) (விபசாரக் குற்றத்திற்காக) கல்லெறிந்து கொல்லப்பட்ட மாலைப் பொழுதில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “மறுமை நாள் நிகழ்வதற்கு முன் உங்களைப் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் ஆளும்வரை இந்த மார்க்கம் (வலிமையுடன்) நிலைபெற்றிருக்கும். அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள்” என்று கூறினார்கள்.

மேலும், முஸ்லிம்களில் ஒரு சிறு குழுவினர் (பாரசீக மன்னன்) குஸ்ரூவின் அல்லது குஸ்ரூ குடும்பத்தாரின் கோட்டையான வெள்ளை மாளிகையை வெற்றிகொள்வார்கள்.

மேலும், மறுமை நிகழ்வதற்கு முன் பெரும் பெரும் பொய்யர்கள் தோன்றுவார்கள். அவர்கள் விஷயத்தில் எச்சரிக்கையாக இருந்துகொள்ளுங்கள்.

மேலும், அல்லாஹ் உங்களில் ஒருவருக்குச் செல்வத்தை வழங்கினால் முதலில் தமக்கும் தம் குடும்பத்தாருக்கும் செவழிக்கட்டும்! மேலும், நான் உங்களை (‘அல் கவ்ஸர்’) தடாகத்தின் அருகில் எதிர்பார்த்துக் காத்திருப்பேன் என்று கூறியதை நான் கேட்டேன்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி) வழியாக ஆமிர் பின் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரஹ்)


குறிப்பு :

இப்னு அபீ திஃபு (ரஹ்) வழி அறிவிப்பு, “நான் ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற ஹதீஸை எனக்கு அறிவியுங்கள் என்று கேட்டிருந்தேன் …” எனத் தொடங்குகின்றது.

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3396

حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ الْجَهْضَمِيُّ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، ح وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ النَّوْفَلِيُّ،  – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا أَزْهَرُ، حَدَّثَنَا ابْنُ عَوْنٍ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ :‏

انْطَلَقْتُ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَمَعِي أَبِي فَسَمِعْتُهُ يَقُولُ ‏”‏ لاَ يَزَالُ هَذَا الدِّينُ عَزِيزًا مَنِيعًا إِلَى اثْنَىْ عَشَرَ خَلِيفَةً ‏”‏ ‏.‏ فَقَالَ كَلِمَةً صَمَّنِيهَا النَّاسُ فَقُلْتُ لأَبِي مَا قَالَ قَالَ ‏”‏ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ”‏

நான் என் தந்தையுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இந்த மார்க்கம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாகவும் பாதுகாப்போடும் இருந்துவரும்” என்று சொல்லக் கேட்டேன். பிறகு ஏதோ சொன்னார்கள். மக்கள் (சளசளவெனப் பேசிக் கொண்டிருந்ததால்) அதைக் (கவனமாகக்) கேட்கவிடாமல் என்னைச் செவிடாக்கிவிட்டார்கள். எனவே, நான் என் தந்தையிடம், “நபி (ஸல்) என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3395

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ دَاوُدَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ :‏

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ لاَ يَزَالُ هَذَا الأَمْرُ عَزِيزًا إِلَى اثْنَىْ عَشَرَ خَلِيفَةً ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ تَكَلَّمَ بِشَىْءٍ لَمْ أَفْهَمْهُ فَقُلْتُ لأَبِي مَا قَالَ فَقَالَ ‏”‏ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ ‏”‏‏

நபி (ஸல்), “இந்த ஆட்சியதிகாரம் பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்” என்று கூறிவிட்டுப் பிறகு ஏதோ சொன்னார்கள். அதை நான் புரிந்துகொள்ளவில்லை. எனவே, நான் என் தந்தையிடம், “என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3394

حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ الأَزْدِيُّ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ سِمَاكِ بْنِ حَرْبٍ، قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ سَمُرَةَ، يَقُولُ :‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ لاَ يَزَالُ الإِسْلاَمُ عَزِيزًا إِلَى اثْنَىْ عَشَرَ خَلِيفَةً ‏”‏ ‏.‏ ثُمَّ قَالَ كَلِمَةً لَمْ أَفْهَمْهَا فَقُلْتُ لأَبِي مَا قَالَ فَقَالَ ‏”‏ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இஸ்லாம், பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள்வரை வலிமையானதாக இருந்துவரும்” என்று சொல்லக் கேட்டேன். பிறகு, நான் புரிந்துகொள்ள முடியாத தொனியில் ஏதோ சொன்னார்கள். எனவே, நான் என் தந்தையிடம், “என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை, “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3393

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ:‏

سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ‏”‏ لاَ يَزَالُ أَمْرُ النَّاسِ مَاضِيًا مَا وَلِيَهُمُ اثْنَا عَشَرَ رَجُلاً ‏”‏ ‏.‏ ثُمَّ تَكَلَّمَ النَّبِيُّ صلى الله عليه وسلم بِكَلِمَةٍ خَفِيَتْ عَلَىَّ فَسَأَلْتُ أَبِي مَاذَا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ ‏”‏ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ ‏”‏


وَحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا أَبُو عَوَانَةَ، عَنْ سِمَاكِ بْنِ جَابِرِ بْنِ سَمُرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِهَذَا الْحَدِيثِ وَلَمْ يَذْكُرْ ‏ “‏ لاَ يَزَالُ أَمْرُ النَّاسِ مَاضِيًا ‏”‏ ‏.‏

நபி (ஸல்), “பன்னிரண்டு ஆட்சித் தலைவர்கள் மக்களை ஆளும்வரை இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்” என்று (ஒரு முறை) சொல்லக் கேட்டேன். பிறகு எனக்குக் கேட்காத விதத்தில் ஏதோ (என் தந்தையிடம்) நபி (ஸல்) மெதுவாகக் கூறினார்கள். நான் என் தந்தையிடம், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு, “அவர்கள் அனைவரும் குறைஷியராக இருப்பார்கள் என்று (நபி (ஸல்) கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)


குறிப்பு :

அறிவிப்பாளர் ஜாபிர் (ரலி) மகன் ஸிமாக் (ரஹ்) வழி அறிவிப்பில், “… இந்த ஆட்சியமைப்பு நீடிக்கும்“ என்பது இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3392

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ، قَالَ سَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم يَقُولُ ح وَحَدَّثَنَا رِفَاعَةُ بْنُ الْهَيْثَمِ الْوَاسِطِيُّ، – وَاللَّفْظُ لَهُ – حَدَّثَنَا خَالِدٌ – يَعْنِي ابْنَ عَبْدِ اللَّهِ الطَّحَّانَ – عَنْ حُصَيْنٍ، عَنْ جَابِرِ بْنِ سَمُرَةَ قَالَ :‏

دَخَلْتُ مَعَ أَبِي عَلَى النَّبِيِّ صلى الله عليه وسلم فَسَمِعْتُهُ يَقُولُ ‏”‏ إِنَّ هَذَا الأَمْرَ لاَ يَنْقَضِي حَتَّى يَمْضِيَ فِيهِمُ اثْنَا عَشَرَ خَلِيفَةً ‏”‏ ‏.‏ قَالَ ثُمَّ تَكَلَّمَ بِكَلاَمٍ خَفِيَ عَلَىَّ – قَالَ – فَقُلْتُ لأَبِي مَا قَالَ قَالَ ‏”‏ كُلُّهُمْ مِنْ قُرَيْشٍ ‏”‏

நான் என் தந்தையுடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். அப்போது நபி (ஸல்), “பன்னிரண்டு கலீஃபாக்கள் மக்களை ஆளாத வரை இந்த ஆட்சியதிகாரம் முடிவடையாது” என்று கூறிவிட்டு, எனக்குக் கேட்காமல் இரகசியமாக ஏதோ (என் தந்தையிடம்) சொன்னார்கள்.

நான் என் தந்தையிடம், “நபி (ஸல்) என்ன சொன்னார்கள்?” என்று கேட்டேன். அதற்கு என் தந்தை “அவர்கள் அனைவரும் குறைஷியர் ஆவர் என்று கூறினார்கள்” என்றார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3391

وَحَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ، حَدَّثَنَا عَاصِمُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ، عَنْ أَبِيهِ، قَالَ قَالَ عَبْدُ اللَّهِ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ لاَ يَزَالُ هَذَا الأَمْرُ فِي قُرَيْشٍ مَا بَقِيَ مِنَ النَّاسِ اثْنَانِ ‏”‏ ‏

“குரைஷியருள் இருவர் எஞ்சியிருக்கும்வரை இந்த ஆட்சியதிகாரம் குறைஷியரிடையேதான் இருந்துவரும்“ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3390

وَحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا رَوْحٌ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ :‏

قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي الْخَيْرِ وَالشَّرِّ ‏”‏

“நன்மையி(இஸ்லாத்தி)லும் தீமையி(அறியாமைக் காலத்தி)லும், மக்கள் குறைஷியரைப் பின்பற்றுவர்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3389

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذَا الشَّأْنِ مُسْلِمُهُمْ تَبَعٌ لِمُسْلِمِهِمْ وَكَافِرُهُمْ تَبَعٌ لِكَافِرِهِمْ ‏”‏

“எல்லா (அரபு) மக்களும் இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; அவர்களில் (அரபு) முஸ்லிம்,  குறைஷி முஸ்லிமைப் பின்பற்றுவார். அவர்களில் (அரபு) இறைமறுப்பாளர், குறைஷி இறைமறுப்பாளரைப் பின்பற்றுவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

அத்தியாயம்: 33, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3388

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا الْمُغِيرَةُ، – يَعْنِيَانِ الْحِزَامِيَّ ح وَحَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ، وَعَمْرٌو النَّاقِدُ، قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، كِلاَهُمَا عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَفِي حَدِيثِ زُهَيْرٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏ وَقَالَ عَمْرٌو رِوَايَةً ‏ “‏ النَّاسُ تَبَعٌ لِقُرَيْشٍ فِي هَذَا الشَّأْنِ مُسْلِمُهُمْ لِمُسْلِمِهِمْ وَكَافِرُهُمْ لِكَافِرِهِمْ ‏”‏

“எல்லா (அரபு) மக்களும் இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் குறைஷியரைப் பின்பற்றுபவர் ஆவர்; அவர்களில் (அரபு) முஸ்லிம்,  குறைஷி முஸ்லிமைப் பின்பற்றுவார். அவர்களில் (அரபு) இறைமறுப்பாளர், குறைஷி இறைமறுப்பாளரைப் பின்பற்றுவார்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

ஸகர் எனும் இயற்பெயருடைய அபூஸுஃப்யான் பின் ஹர்பு, குரைஷிகளின் தலைவராவார். தம் வாழ்நாளின் பெரும்பகுதியை இறைமறுப்பாளராகக் கழித்தவர். இவர்தாம் மக்கா குரைஷிகளுக்குத் தலைவராகத் திகழ்ந்தவர்.
சுட்டி : https://en.wikipedia.org/wiki/Abu_Sufyan_ibn_Harb