அத்தியாயம்: 33, பாடம்: 42, ஹதீஸ் எண்: 3521

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، قَالَ سَمِعْتُ أَبَا وَائِلٍ قَالَ حَدَّثَنَا أَبُو مُوسَى الأَشْعَرِيُّ :‏ ‏

أَنَّ رَجُلاً، أَعْرَابِيًّا أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ يُقَاتِلُ لِلْمَغْنَمِ وَالرَّجُلُ يُقَاتِلُ لِيُذْكَرَ وَالرَّجُلُ يُقَاتِلُ لِيُرَى مَكَانُهُ فَمَنْ فِي سَبِيلِ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَنْ قَاتَلَ لِتَكُونَ كَلِمَةُ اللَّهِ أَعْلَى فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ ‏”‏

ஒரு கிராமவாசி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் போரில் கிடைக்கும் செல்வங்களுக்காகப் போரிடுகின்றார்; மற்றொருவர் புகழப்படுவதற்காகப் போரிடுகின்றார்; இன்னொருவர் தமது தகுதியைப் பிறர் பார்க்கட்டும் என்பதற்காகப் போரிடுகின்றார் – இவர்களில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் யார்?” என்று கேட்டார்.

அல்லாஹ் வின் தூதர் (ஸல்), “அல்லாஹ்வின் மார்க்கம் மேலோங்க வேண்டும் என்பதற்காகப் போரிட்டவரே அல்லாஹ்வின் பாதையில் போரிட்டவர் ஆவார்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

Share this Hadith:

Leave a Comment