33.9 ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர் ...

باب الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ
ஆட்சித் தலைவர் கேடயம் போன்றவர்; அவரோடுதான் எதிரிகள் போரிடுகின்றனர்; அவர் மூலமே மக்கள் பாதுகாக்கப்படுகின்றனர்

அத்தியாயம்: 33, பாடம்: 9, ஹதீஸ் எண்: 3426

حَدَّثَنَا إِبْرَاهِيمُ، عَنْ مُسْلِمٍ، حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا شَبَابَةُ، حَدَّثَنِي وَرْقَاءُ، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ :‏

‏ “‏ إِنَّمَا الإِمَامُ جُنَّةٌ يُقَاتَلُ مِنْ وَرَائِهِ وَيُتَّقَى بِهِ فَإِنْ أَمَرَ بِتَقْوَى اللَّهِ عَزَّ وَجَلَّ وَعَدَلَ كَانَ لَهُ بِذَلِكَ أَجْرٌ وَإِنْ يَأْمُرْ بِغَيْرِهِ كَانَ عَلَيْهِ مِنْهُ ‏”‏‏

“ஆட்சித் தலைவர் ஒரு கேடயம் போன்றவர். போர் நடப்பது அவருடன்தான். பாதுகாப்புப் பெறப்படுவதும் அவர் மூலமே. அவர் (தமது தலைமையின் கீழுள்ள குடிமக்களுக்கு) இறையச்ச உணர்வைக் கைக்கொள்ளும்படிக் கட்டளையிட்டு நீதியுடன் நடந்துகொண்டால், அவருக்கு அதன் காரணமாக (பெரும்) நற்பலன் உண்டு. அதற்கு மாற்றமாக (தீமையானவற்றை) அவர் கட்டளை இட்டால் அதனால் ஏற்படும் பாவம் அவர்மீது(ம்) சாரும்” என்று நபி (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)