அத்தியாயம்: 34, பாடம்: 12, ஹதீஸ் எண்: 3615

وَحَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ، وَأَبُو كَامِلٍ – وَاللَّفْظُ لأَبِي كَامِلٍ – قَالاَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِي بِشْرٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ قَالَ :‏

مَرَّ ابْنُ عُمَرَ بِنَفَرٍ قَدْ نَصَبُوا دَجَاجَةً يَتَرَامَوْنَهَا فَلَمَّا رَأَوُا ابْنَ عُمَرَ تَفَرَّقُوا عَنْهَا ‏.‏ فَقَالَ ابْنُ عُمَرَ مَنْ فَعَلَ هَذَا إِنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لَعَنَ مَنْ فَعَلَ هَذَا

இப்னு உமர் (ரலி), கோழி ஒன்றைக் கட்டிவைத்து அதன்மீது அம்பெய்துகொண்டிருந்த சிலரைக் கடந்து சென்றபோது,  அவர்களைக் கண்டவுடன் அதை அப்படியே விட்டுவிட்டு அவர்கள் சிதறியோடிவிட்டனர். இப்னு உமர் (ரலி), “இதைச் செய்தவர் யார்? இவ்வாறு செய்பவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சபித்தார்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் (ரலி) வழியாக ஸயீத் பின் ஜுபைர் (ரஹ்)