அத்தியாயம்: 35, பாடம்: 4, ஹதீஸ் எண்: 3635

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ، عَنْ سُفْيَانَ، حَدَّثَنِي أَبِي، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قُلْتُ :‏

‏يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَتْ مَعَنَا مُدًى قَالَ صلى الله عليه وسلم ‏”‏ أَعْجِلْ أَوْ أَرْنِي مَا أَنْهَرَ الدَّمَ وَذُكِرَ اسْمُ اللَّهِ فَكُلْ لَيْسَ السِّنَّ وَالظُّفُرَ وَسَأُحَدِّثُكَ أَمَّا السِّنُّ فَعَظْمٌ وَأَمَّا الظُّفُرُ فَمُدَى الْحَبَشَةِ ‏”‏ ‏.‏ قَالَ وَأَصَبْنَا نَهْبَ إِبِلٍ وَغَنَمٍ فَنَدَّ مِنْهَا بَعِيرٌ فَرَمَاهُ رَجُلٌ بِسَهْمٍ فَحَبَسَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ لِهَذِهِ الإِبِلِ أَوَابِدَ كَأَوَابِدِ الْوَحْشِ فَإِذَا غَلَبَكُمْ مِنْهَا شَىْءٌ فَاصْنَعُوا بِهِ هَكَذَا ‏”‏


وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا وَكِيعٌ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم بِذِي الْحُلَيْفَةِ مِنْ تِهَامَةَ فَأَصَبْنَا غَنَمًا وَإِبِلاً فَعَجِلَ الْقَوْمُ فَأَغْلَوْا بِهَا الْقُدُورَ فَأَمَرَ بِهَا فَكُفِئَتْ ثُمَّ عَدَلَ عَشْرًا مِنَ الْغَنَمِ بِجَزُورٍ ‏.‏ وَذَكَرَ بَاقِيَ الْحَدِيثِ كَنَحْوِ حَدِيثِ يَحْيَى بْنِ سَعِيدٍ ‏.‏

وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ مُسْلِمٍ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ، عَنْ جَدِّهِ رَافِعٍ ثُمَّ حَدَّثَنِيهِ عُمَرُ بْنُ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ جَدِّهِ قَالَ قُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى فَنُذَكِّي بِاللِّيطِ وَذَكَرَ الْحَدِيثَ بِقِصَّتِهِ وَقَالَ فَنَدَّ عَلَيْنَا بَعِيرٌ مِنْهَا فَرَمَيْنَاهُ بِالنَّبْلِ حَتَّى وَهَصْنَاهُ ‏.‏

وَحَدَّثَنِيهِ الْقَاسِمُ بْنُ زَكَرِيَّاءَ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، بِهَذَا الإِسْنَادِ الْحَدِيثَ إِلَى آخِرِهِ بِتَمَامِهِ وَقَالَ فِيهِ وَلَيْسَتْ مَعَنَا مُدًى أَفَنَذْبَحُ بِالْقَصَبِ

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْوَلِيدِ بْنِ عَبْدِ الْحَمِيدِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعِيدِ بْنِ مَسْرُوقٍ، عَنْ عَبَايَةَ بْنِ رِفَاعَةَ بْنِ رَافِعٍ، عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ، أَنَّهُ قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّا لاَقُو الْعَدُوِّ غَدًا وَلَيْسَ مَعَنَا مُدًى وَسَاقَ الْحَدِيثَ وَلَمْ يَذْكُرْ فَعَجِلَ الْقَوْمُ فَأَغْلَوْا بِهَا الْقُدُورَ فَأَمَرَ بِهَا فَكُفِئَتْ وَذَكَرَ سَائِرَ الْقِصَّةِ ‏.‏

நான் (நபியவர்களிடம்), “அல்லாஹ்வின் தூதரே! (ஒட்டகங்களை அறுக்கக்  கத்திகளைப் பயன்படுத்திவிட்டால்) நாளை எதிரிகளைச் சந்திக்கும்போது (கூரான) கத்திகள் எங்களுக்கு இல்லாமல் போய்விடும்” என்று கேட்டேன்.

அதற்கு நபி (ஸல்), “விரைவாக அறுத்துவிடுங்கள். (கூர்மையான ஏதேனும் ஒன்றால்) உயிரிழக்கச் செய்துவிடுங்கள். இரத்தத்தை வழிந்தோடச் செய்யும் எதைக் கொண்டும் அறுக்கும்போது அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டிருந்தால், அதை நீங்கள் உண்ணலாம். நான் உங்களுக்குத் தெரிவிக்கிறேன்: பல்லாலும் நகத்தாலும் (அறுத்தல்) கூடாது. பற்கள் எலும்பு இனமாகும். நகங்களோ அபிசீனிய(இறைமறுப்பாள)ர்களின் கத்திகளாகும்” என்று கூறினார்கள்.

எங்களுக்கு (அந்தப் போரில்) சில ஒட்டகங்களும் ஆடுகளும் போர்ச் செல்வமாகக் கிடைத்தன. அவற்றிலிருந்து ஓர் ஒட்டகம் மிரண்டு ஓடிவிட்டது. உடனே (நபித்தோழர்களில்) ஒருவர் அந்த ஒட்டகத்தைக் குறிவைத்து அம்பெய்து, அதை ஓடவிடாமல் தடுத்து நிறுத்தினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “வனவிலங்குகளில் கட்டுக்கடங்காதவை இருப்பதைப் போன்றே, இந்த(வளர்ப்பு)ப் பிராணிகளிலும் கட்டுக்கடங்காதவை சில உள்ளன. அவற்றில் உங்களை மீறிச் செல்பவற்றை இவ்வாறே (அம்பெய்து நிற்கச்) செய்யுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ராஃபிஉ பின் கதீஜ் (ரலி)


குறிப்புகள் :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பு, “நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் திஹாமா பகுதியிலுள்ள துல்ஹுலைஃபாவில் இருந்தோம். அப்போது நாங்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) சில ஆடுகளையும் ஒட்டகங்களையும் பெற்றோம். மக்கள் அவசரப்பட்டு(அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்து)ப் பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி (சமைக்கத் தொடங்கி)விட்டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) பாத்திரங்களைக் கவிழ்த்துவிடும்படி உத்தரவிட, அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்(டு அவற்றிலிருந்த இறைச்சிகள் வெளியே கொட்டப்பட்)டன. பிறகு பத்து ஆடுகளை ஓர் ஒட்டகத்திற்குச் சமமாக்கி(பங்கிடலா)னார்கள் …” என்று ஆரம்பமாகிறது.

இஸ்மாயீல் பின் முஸ்லிம் (ரஹ்) அறிவிப்பில், “நாங்கள் (நபி (ஸல்) அவர்களிடம்), அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (ஒட்டகங்களை அறுக்க வாட்களை இன்று பயன்படுத்திவிட்டால்) நாளை எங்களிடம் (கூரான) வாட்களே இல்லாத நிலையில் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே! ஆகவே, (கூர்மையான) மூங்கில் கழியால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா? என்று கேட்டோம்” என்று இடம்பெற்றுள்ளது.

“அப்போது (போர்ச் செல்வமாக நாங்கள் பெற்ற) ஒட்டகங்களிலிருந்து ஒன்று மிரண்டு ஓடியது. நாங்கள் அம்பெய்து அதை (ஓடவிடாமல்) தடுத்து நிறுத்தினோம்” என்றும் இந்த அறிவிப்பில் இடம்பெற்றுள்ளது. மற்ற விவரங்கள் மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம்பெற்றுள்ளன.

ஹுஸைன் பின் அலீ (ரஹ்) வழி அறிவிப்பில், “எங்களிடம் (கூரான) வாட்கள் இல்லாத நிலையில் (நாங்கள் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே!) நாங்கள் (கூரான) மூங்கில் கழியால் (ஒட்டகங்களை) அறுக்கலாமா?” என்று கேட்டதாக இடம்பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பு, “நான், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (இன்று ஒட்டகங்களை அறுக்க வாட்களைப் பயன் படுத்திவிட்டால்) நாளை எங்களிடம் (கூரான) வாட்கள் இல்லாத நிலையில் எதிரிகளைச் சந்திக்க நேரிடுமே! …” என்று  கேட்டேன் என ஆரம்பமாகிறது. மேலும், “மக்கள் அவசரப்பட்டு(அவற்றைப் பங்கிடுவதற்கு முன்பாகவே அறுத்து)ப் பாத்திரங்களை (அடுப்புகளில்) ஏற்றி(சமைக்கத் தொடங்கி)விட்டனர். அப்போது நபி (ஸல்) பாத்திரங்களைக் கவிழ்க்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை கவிழ்க்கப்பட்டன” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.