அத்தியாயம்: 37, பாடம்: 17, ஹதீஸ் எண்: 3904

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ قَالَ قَالَ عَلِيٌّ :‏

نَهَانِي رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم أَنْ أَتَخَتَّمَ فِي إِصْبَعِي هَذِهِ أَوْ هَذِهِ ‏.‏ قَالَ فَأَوْمَأَ إِلَى الْوُسْطَى وَالَّتِي تَلِيهَا‏

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இந்தயிந்த விரல்களில் மோதிரம் அணிய வேண்டாம் என்று என்னைத் தடை செய்தார்கள்” என்று அலீ (ரலி) கூறி, நடு விரலையும் அதற்கடுத்த (ஆட்காட்டி) விரலையும் சுட்டிக் காட்டினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபூபுர்தா (ரஹ்)

அத்தியாயம்: 37, பாடம்: 17, ஹதீஸ் எண்: 3903

حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَأَبُو كُرَيْبٍ جَمِيعًا عَنِ ابْنِ إِدْرِيسَ، – وَاللَّفْظُ لأَبِي كُرَيْبٍ – حَدَّثَنَا ابْنُ إِدْرِيسَ، قَالَ سَمِعْتُ عَاصِمَ بْنَ كُلَيْبٍ، عَنْ أَبِي بُرْدَةَ، عَنْ عَلِيٍّ قَالَ :‏

نَهَانِي – يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم – أَنْ أَجْعَلَ خَاتَمِي فِي هَذِهِ أَوِ الَّتِي تَلِيهَا – لَمْ يَدْرِ عَاصِمٌ فِي أَىِّ الثِّنْتَيْنِ – وَنَهَانِي عَنْ لُبْسِ الْقَسِّيِّ وَعَنْ جُلُوسٍ عَلَى الْمَيَاثِرِ ‏.‏ قَالَ فَأَمَّا الْقَسِّيُّ فَثِيَابٌ مُضَلَّعَةٌ يُؤْتَى بِهَا مِنْ مِصْرَ وَالشَّامِ فِيهَا شِبْهُ كَذَا وَأَمَّا الْمَيَاثِرُ فَشَىْءٌ كَانَتْ تَجْعَلُهُ النِّسَاءُ لِبُعُولَتِهِنَّ عَلَى الرَّحْلِ كَالْقَطَائِفِ الأُرْجُوَانِ


وَحَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، عَنِ ابْنٍ لأَبِي مُوسَى قَالَ سَمِعْتُ عَلِيًّا، ‏.‏ فَذَكَرَ هَذَا الْحَدِيثَ عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِنَحْوِهِ

وَحَدَّثَنَا ابْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ، قَالَ سَمِعْتُ أَبَا بُرْدَةَ، قَالَ سَمِعْتُ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ، قَالَ نَهَى أَوْ نَهَانِي يَعْنِي النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرَ نَحْوَهُ ‏‏

“நபி (ஸல்) இந்த விரலில் அல்லது அதற்கடுத்த விரலில் மோதிரம் அணிய வேண்டாம் என என்னைத் தடை செய்தார்கள்” என்று அலீ (ரலி)  கூறினார்கள்.*

மேலும், ‘கஸ்’ **வகைத் துணியை அணிய வேண்டாம் என்றும் மென்பட்டு மீஸரா*** விரிப்புகளில் அமர வேண்டாமென்றும் என்னைத் தடை செய்தார்கள்.

அறிவிப்பாளர் : அலீ (ரலி) வழியாக அபூபுர்தா ஆமிர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)****


குறிப்புகள் :

* அது எந்த இரு விரல்கள் என அறிவிப்பாளர் ஆஸிம் பின் குலைப் (ரஹ்) அவர்களுக்குத் தெரியவில்லை.

**‘கஸ்’ வகைத் துணி என்பது, எகிப்து அல்லது சிரியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட ஒரு வகைத் துணியாகும். அதில் விலா எலும்புகளைப் போல வரிவரியாகக் கோடுகள் இருக்கும். இன்னவற்றுக்கு அது ஒப்பாயிருக்கும்.

***‘மீஸரா’ என்பது, பெண்கள் தம் கணவர்களுக்காக ஒட்டகச் சேணத்தில் அமைக்கும் சிவப்பு நிற மென்பட்டுத் திண்டுகளைப் போன்ற விரிப்புகளாகும்.

****ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில்,  “அபூமூசாவின் புதல்வர் (அபூபுர்தா) கூறினார்” என அறிவிப்பாளர்தொடரில் இடம் பெற்றுள்ளது.

ஷுஅபா (ரஹ்) வழி அறிவிப்பில், “நபி (ஸல்) தடை செய்தார்கள். அல்லது நபி (ஸல்) என்னைத் தடை செய்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.