அத்தியாயம்: 37, பாடம்: 2, ஹதீஸ் எண்: 3855

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَيَحْيَى بْنُ حَبِيبٍ، وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ – وَاللَّفْظُ لاِبْنِ حَبِيبٍ – قَالَ إِسْحَاقُ أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا رَوْحُ بْنُ عُبَادَةَ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

لَبِسَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا قَبَاءً مِنْ دِيبَاجٍ أُهْدِيَ لَهُ ثُمَّ أَوْشَكَ أَنْ نَزَعَهُ فَأَرْسَلَ بِهِ إِلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ فَقِيلَ لَهُ قَدْ أَوْشَكَ مَا نَزَعْتَهُ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ فَقَالَ ‏”‏ نَهَانِي عَنْهُ جِبْرِيلُ ‏”‏ ‏.‏ فَجَاءَهُ عُمَرُ يَبْكِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ كَرِهْتَ أَمْرًا وَأَعْطَيْتَنِيهِ فَمَا لِي قَالَ ‏”‏ إِنِّي لَمْ أُعْطِكَهُ لِتَلْبَسَهُ إِنَّمَا أَعْطَيْتُكَهُ تَبِيعُهُ ‏”‏ ‏.‏ فَبَاعَهُ بِأَلْفَىْ دِرْهَمٍ

ஒரு நாள் நபி (ஸல்) தமக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட அலங்காரப் பட்டாலான ஆளுயர அங்கி ஒன்றை அணிந்தார்கள். பின்னர் விரைவாக அதைக் கழற்றி உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களுக்குக் கொடுத்தனுப்பினார்கள். அப்போது அவர்களிடம், “ஏன் விரைவாக அதைக் கழற்றி விட்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு அவர்கள், “அதை அணிய வேண்டாம் என (வானவர்) ஜிப்ரீல் என்னைத் தடுத்துவிட்டார்” என்று பதிலளித்தார்கள். பிறகு உமர் (ரலி) அழுதுகொண்டே வந்து, “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வெறுத்த ஒன்றை எனக்குக் கொடுத்துள்ளீர்களே? எனக்கு மட்டும் இது கூடுமா?” என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இதை நீங்கள் அணிந்து கொள்வதற்காக உங்களுக்கு நான் வழங்கவில்லை. இதை நீங்கள் விற்று(க் காசாக்கி)க் கொள்வதற்காகவே உங்களுக்கு வழங்கினேன்” என்று சொன்னார்கள். எனவே, அதை உமர் (ரலி) இரண்டாயிரம் திர்ஹங்களுக்கு விற்றுவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

Share this Hadith:

Leave a Comment