அத்தியாயம்: 38, பாடம்: 1, ஹதீஸ் எண்: 3968

حَدَّثَنَا هَنَّادُ بْنُ السَّرِيِّ، حَدَّثَنَا عَبْثَرٌ، عَنْ حُصَيْنٍ، عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ :‏

وُلِدَ لِرَجُلٍ مِنَّا غُلاَمٌ فَسَمَّاهُ مُحَمَّدًا فَقُلْنَا لاَ نَكْنِيكَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم حَتَّى تَسْتَأْمِرَهُ ‏.‏ قَالَ فَأَتَاهُ فَقَالَ إِنَّهُ وُلِدَ لِي غُلاَمٌ فَسَمَّيْتُهُ بِرَسُولِ اللَّهِ وَإِنَّ قَوْمِي أَبَوْا أَنْ يَكْنُونِي بِهِ حَتَّى تَسْتَأْذِنَ النَّبِيَّ صلى الله عليه وسلم فَقَالَ ‏ “‏ سَمُّوا بِاسْمِي وَلاَ تَكَنَّوْا بِكُنْيَتِي فَإِنَّمَا بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ ‏”‏ ‏


حَدَّثَنَا رِفَاعَةُ بْنُ الْهَيْثَمِ الْوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، – يَعْنِي الطَّحَّانَ – عَنْ حُصَيْنٍ بِهَذَا الإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ ‏ “‏ فَإِنَّمَا بُعِثْتُ قَاسِمًا أَقْسِمُ بَيْنَكُمْ ‏”‏ ‏

எங்க(ள் அன்ஸாரிக)ளில் ஒருவருக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு அவர், ‘முஹம்மது’ எனப் பெயர் சூட்டினார். அப்போது நாங்கள் “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இதற்கு அனுமதி பெறாத வரை உம்மை நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் குறிப்புப் பெயரால் (‘அபூமுஹம்மது’ என) அழைக்க மாட்டோம்” என்று சொன்னோம்.

அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, “எனக்கு ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அதற்கு நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பெயரைச் சூட்டினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி பெறாத வரை என் சமுதாயத்தார் அக்குறிப்புப் பெயரால் என்னை அழைக்கமாட்டோம் என மறுத்துவிட்டனர்” என்று சொன்னார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், “என் பெயரைச் சூட்டிக்கொள்ளுங்கள்; (அபுல்காஸிம் எனும்) என் குறிப்புப் பெயரைச் சூட்டிக்கொள்ளாதீர்கள். ஏனெனில், உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)


குறிப்பு :

ஹுஸைன் (ரஹ்) வழி அறிவிப்பில், “உங்களிடையே பங்கிடுபவனாகவே நான் அனுப்பப்பட்டுள்ளேன்” எனும் குறிப்பு இல்லை.

Share this Hadith:

Leave a Comment