அத்தியாயம்: 38, பாடம்: 7, ஹதீஸ் எண்: 3999

وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمٍ، حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ، عَنِ ابْنِ جُرَيْجٍ، حَدَّثَنَا عَطَاءٌ، عَنْ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ :‏

أَنَّ أَبَا مُوسَى، اسْتَأْذَنَ عَلَى عُمَرَ ثَلاَثًا فَكَأَنَّهُ وَجَدَهُ مَشْغُولاً فَرَجَعَ فَقَالَ عُمَرُ أَلَمْ تَسْمَعْ صَوْتَ عَبْدِ اللَّهِ بْنِ قَيْسٍ ائْذَنُوا لَهُ ‏.‏ فَدُعِيَ لَهُ فَقَالَ مَا حَمَلَكَ عَلَى مَا صَنَعْتَ قَالَ إِنَّا كُنَّا نُؤْمَرُ بِهَذَا ‏.‏ قَالَ لَتُقِيمَنَّ عَلَى هَذَا بَيِّنَةً أَوْ لأَفْعَلَنَّ ‏.‏ فَخَرَجَ فَانْطَلَقَ إِلَى مَجْلِسٍ مِنَ الأَنْصَارِ فَقَالُوا لاَ يَشْهَدُ لَكَ عَلَى هَذَا إِلاَّ أَصْغَرُنَا ‏.‏ فَقَامَ أَبُو سَعِيدٍ فَقَالَ كُنَّا نُؤْمَرُ بِهَذَا ‏.‏ فَقَالَ عُمَرُ خَفِيَ عَلَىَّ هَذَا مِنْ أَمْرِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم أَلْهَانِي عَنْهُ الصَّفْقُ بِالأَسْوَاقِ ‏


حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، حَدَّثَنَا أَبُو عَاصِمٍ، ح وَحَدَّثَنَا حُسَيْنُ بْنُ حُرَيْثٍ، حَدَّثَنَا النَّضْرُ، – يَعْنِي ابْنَ شُمَيْلٍ – قَالاَ جَمِيعًا حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ وَلَمْ يَذْكُرْ فِي حَدِيثِ النَّضْرِ أَلْهَانِي عَنْهُ الصَّفْقُ بِالأَسْوَاقِ ‏

அபூமூஸா (ரலி), (கலீஃபா) உமர் (ரலி) அவர்களிடம் (சென்று அவர்களது இல்லத்திற்குள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டார்கள். (ஆனால், அவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை) உமர் (ரலி) அலுவலில் மூழ்கியிருப்பதாக நினைத்துக்கொண்டு அபூமூஸா (ரலி) திரும்பிவிட்டார்கள்.

(அலுவலை முடித்த) பிறகு உமர் (ரலி), “ (அபூமூஸா) அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்களின் குரலை நீங்கள் கேட்கவில்லையா? அவருக்கு அனுமதி அளியுங்கள்” என்றார்கள். பிறகு அபூமூஸா (ரலி) அழைக்கப்பட்டார்கள். அப்போது உமர் (ரலி), “நீங்கள் திரும்பிச் சென்றதற்கு என்ன காரணம்?” என்று கேட்டார்கள்.

அபூமூஸா (ரலி), “இவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்” என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி), “நீங்கள் இதற்குரிய சான்றை நிறுவ வேண்டும். இல்லையெனில், நான் (இன்னின்னவாறு) நடவடிக்கை எடுப்பேன்” என்றார்கள்.

எனவே, அபூமூஸா (ரலி) அன்ஸாரிகளின் அவையை நோக்கிப் புறப்பட்டார்கள். அன்ஸாரிகள், “எங்களில் சிறியவரே இதற்காக உமக்குச் சாட்சியமளிப்பார்” என்று கூறினர். ஆகவே, அபூஸயீத் (ரலி) எழுந்து (உமர் (ரலி) அவர்களிடம் சென்று), “அவ்வாறே நாங்கள் கட்டளையிடப்பட்டிருந்தோம்” என்று (சாட்சியம்) கூற, உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த விவரம் எனக்குத் தெரியாமல் போய் விட்டதே! (நபி (ஸல்) அவ்வாறு கூறிய நாளில்) கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது (போலும்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக உபைத் பின் உமைர் (ரஹ்)


குறிப்பு :

நள்ரு பின் ஷுமைல் (ரஹ்) வழி அறிவிப்பில், “கடைவீதிகளில் நான் வணிகத்தில் ஈடுபட்டிருந்தது எனது கவனத்தைத் திசை திருப்பிவிட்டது” எனும் குறிப்பு இடம்பெறவில்லை.

Share this Hadith:

Leave a Comment