அத்தியாயம்: 39, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4038

وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، عَنْ مَعْمَرٍ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

كَانَ يَدْخُلُ عَلَى أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم مُخَنَّثٌ فَكَانُوا يَعُدُّونَهُ مِنْ غَيْرِ أُولِي الإِرْبَةِ – قَالَ – فَدَخَلَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَوْمًا وَهُوَ عِنْدَ بَعْضِ نِسَائِهِ وَهُوَ يَنْعَتُ امْرَأَةً قَالَ إِذَا أَقْبَلَتْ أَقْبَلَتْ بِأَرْبَعٍ وَإِذَا أَدْبَرَتْ أَدْبَرَتْ بِثَمَانٍ ‏.‏ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏ “‏ أَلاَ أَرَى هَذَا يَعْرِفُ مَا هَا هُنَا لاَ يَدْخُلَنَّ عَلَيْكُنَّ ‏” قَالَتْ فَحَجَبُوهُ

நபி (ஸல்) அவர்களின் மனைவியரின் இல்லங்களுக்கு (ஆணுமல்லாத பெண்ணுமல்லாத) அலி ஒருவர் வருவது வழக்கம். அவர் பாலுறவுத் தேவையில்லாதவர்களில் ஒருவர் என்று கருதப்பட்டவர். ஒரு நாள் அவர் நபி (ஸல்) அவர்களின் மனைவி ஒருவரின் இல்லத்தில் இருந்தபோது, அங்கு நபி (ஸல்) வந்தார்கள். அந்த அலி ஒரு பெண்ணைப் பற்றி, “அவள் வந்தால் நாலு(சதை மடிப்புகளு)டன் வருவாள். போனால் எட்டு(சதை மடிப்புகளு)டன் போவாள்” என்று வர்ணித்துக் கொண்டிருந்தார்.

நபி (ஸல்), “இவர் இங்குள்ள (பெண்களின்) நிலைமை பற்றியும் (பிறரிடம்) வர்ணிப்பார் என்று நான் ஏன் கருதக் கூடாது? (அலிகளான) இவர்கள் உங்களிடம் ஒருபோதும் வரக்கூடாது” என்று கட்டளையுட்டு, அவரை(ப் பெண்களைவிட்டு)த் தடுத்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)