அத்தியாயம்: 39, பாடம்: 17, ஹதீஸ் எண்: 4048

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

سَحَرَ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَهُودِيٌّ مِنْ يَهُودِ بَنِي زُرَيْقٍ يُقَالُ لَهُ لَبِيدُ بْنُ الأَعْصَمِ – قَالَتْ – حَتَّى كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يُخَيَّلُ إِلَيْهِ أَنَّهُ يَفْعَلُ الشَّىْءَ وَمَا يَفْعَلُهُ حَتَّى إِذَا كَانَ ذَاتَ يَوْمٍ أَوْ ذَاتَ لَيْلَةٍ دَعَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ثُمَّ دَعَا ثُمَّ دَعَا ثُمَّ قَالَ ‏”‏ يَا عَائِشَةُ أَشَعَرْتِ أَنَّ اللَّهَ أَفْتَانِي فِيمَا اسْتَفْتَيْتُهُ فِيهِ جَاءَنِي رَجُلاَنِ فَقَعَدَ أَحَدُهُمَا عِنْدَ رَأْسِي وَالآخَرُ عِنْدَ رِجْلَىَّ ‏.‏ فَقَالَ الَّذِي عِنْدَ رَأْسِي لِلَّذِي عِنْدَ رِجْلَىَّ أَوِ الَّذِي عِنْدَ رِجْلَىَّ لِلَّذِي عِنْدَ رَأْسِي مَا وَجَعُ الرَّجُلِ قَالَ مَطْبُوبٌ ‏.‏ قَالَ مَنْ طَبَّهُ قَالَ لَبِيدُ بْنُ الأَعْصَمِ ‏.‏ قَالَ فِي أَىِّ شَىْءٍ قَالَ فِي مُشْطٍ وَمُشَاطَةٍ ‏.‏ قَالَ وَجُبِّ طَلْعَةِ ذَكَرٍ ‏.‏ قَالَ فَأَيْنَ هُوَ قَالَ فِي بِئْرِ ذِي أَرْوَانَ ‏” قَالَتْ فَأَتَاهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فِي أُنَاسٍ مِنْ أَصْحَابِهِ ثُمَّ قَالَ ‏”‏ يَا عَائِشَةُ وَاللَّهِ لَكَأَنَّ مَاءَهَا نُقَاعَةُ الْحِنَّاءِ وَلَكَأَنَّ نَخْلَهَا رُءُوسُ الشَّيَاطِينِ ‏” قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أَحْرَقْتَهُ قَالَ ‏”‏ لاَ أَمَّا أَنَا فَقَدْ عَافَانِي اللَّهُ وَكَرِهْتُ أَنْ أُثِيرَ عَلَى النَّاسِ شَرًّا فَأَمَرْتُ بِهَا فَدُفِنَتْ ‏”


حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ، قَالَتْ سُحِرَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَسَاقَ أَبُو كُرَيْبٍ الْحَدِيثَ بِقِصَّتِهِ نَحْوَ حَدِيثِ ابْنِ نُمَيْرٍ وَقَالَ فِيهِ فَذَهَبَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى الْبِئْرِ فَنَظَرَ إِلَيْهَا وَعَلَيْهَا نَخْلٌ ‏.‏ وَقَالَتْ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ فَأَخْرِجْهُ ‏.‏ وَلَمْ يَقُلْ أَفَلاَ أَحْرَقْتَهُ وَلَمْ يَذْكُرْ ‏ “‏ فَأَمَرْتُ بِهَا فَدُفِنَتْ ‏”

பனூ ஸுரைக் குலத்தைச் சேர்ந்த லபீத் பின் அல்அஃஸம் எனப்படும் யூதன், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சூனியம் செய்துவிட்டான். அதையடுத்துத் தாம் செய்யாத ஒன்றைச் செய்தது போன்ற பிரமை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்டது. ஒரு நாளில் அல்லது ஓர் இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பிரார்த்தித்தார்கள். பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள்; பிறகு (மீண்டும்) பிரார்த்தித்தார்கள்; பிறகு கூறினார்கள்:

ஆயிஷா! (விஷயம்) தெரியுமா? நான் எந்த விஷயத்தில் தெளிவைத் தரும்படி அல்லாஹ்விடம் கேட்டுக் கொண்டிருந்தேனோ அதில் அல்லாஹ் எனக்குத் தெளிவை வழங்கிவிட் டான். (கனவில் வானவர்கள்) இரண்டு பேர் என்னிடம் வந்து, ஒருவர் என்  தலைமாட்டிலும் இன்னொருவர் என் கால்மாட்டிலும் அமர்ந்துகொண்டனர்.

என் தலைமாட்டில் இருந்தவர் என் கால்மாட்டில் இருந்தவரிடம் அல்லது கால்மாட்டில் இருந்தவர் என் தலைமாட்டில் இருந்தவரிடம், “இந்தவருக்கு என்ன நோய்?” என்று கேட்டார். மற்றவர், “மருந்து (சூனியம்) வைக்கப்பட்டுள்ளார்” என்று சொன்னார். அதற்கு அவர், “அவருக்கு மருந்து (சூனியம்) வைத்தவர் யார்?” என்று கேட்டார். மற்றவர், “லபீத் பின் அல்அஃஸம்’ என்று பதிலளித்தார். அவர், “எதில் (வைக்கப்பட்டுள்ளது)?” என்று கேட்க, மற்றவர், “சீப்பிலும் சிக்கு முடியிலும்” என்று பதிலளித்தார். மேலும், ஆண் பேரீச்சம்பாளையின் உறையில் என்றும் கூறினார்.

அவர், “எங்கே வைக்கப்பட்டுள்ளது?” என்று கேட்க, மற்றவர், தூ-அர்வான் குலத்தாரின் கிணற்றி(லுள்ள கல் ஒன்றின் அடியி)ல் என்று பதிலளித்தார்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் தோழர்கள் சிலருடன் அங்குச் சென்றார்கள். 

பிறகு (என்னிடம்), “ஆயிஷா! அல்லாஹ் வின் மீதாணையாக! அந்தக் கிணற்றின் நீர் மருதாணிச் சாற்றைப் போன்று (கலங்கலாக) இருந்தது. அதன் பேரீச்ச மரங்கள் ஷைத்தான்களின் தலைகளைப் போன்று இருந்தன” என்று சொன்னார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே? அதை நீங்கள் (வெளியில் எடுத்துக்காட்டி) எரித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள், “இல்லை; அல்லாஹ் என்னைக் குணப்படுத்திவிட்டான். மக்களிடையே தீமையைப் பரப்ப நான் விரும்பவில்லை. எனவே, அதை நான் புதைத்துவிடும்படிக் கட்டளையிட்டுவிட்டேன். அவ்வாறே புதைக்கப்பட்டுவிட்டது” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அபூஉஸாமா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அங்குச் சென்று அந்தக் கிணற்றைப் பார்த்தார்கள். கிணற்றருகில் பேரீச்ச மரங்கள் இருந்தன” என்று இடம்பெற்றுள்ளது. மேலும் நான், “அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கட்டைப் பிரித்துக் காட்டுங்கள்” எனக் கேட்டேன் என்று காணப்படுகிறது.

“அதை நீங்கள் எரித்திருக்கக் கூடாதா?” என்று கேட்டதும் “அதை நான் புதைத்துவிடும்படிக் கட்டளையிட்டேன். அவ்வாறே அது புதைக்கப்பட்டுவிட்டது” என்று கூறியதும் இடம்பெறவில்லை.