அத்தியாயம்: 39, பாடம்: 20, ஹதீஸ் எண்: 4054

حَدَّثَنِي سُرَيْجُ بْنُ يُونُسَ، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، قَالاَ حَدَّثَنَا عَبَّادُ بْنُ عَبَّادٍ، عَنْ هِشَامِ، بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا مَرِضَ أَحَدٌ مِنْ أَهْلِهِ نَفَثَ عَلَيْهِ بِالْمُعَوِّذَاتِ فَلَمَّا مَرِضَ مَرَضَهُ الَّذِي مَاتَ فِيهِ جَعَلْتُ أَنْفُثُ عَلَيْهِ وَأَمْسَحُهُ بِيَدِ نَفْسِهِ لأَنَّهَا كَانَتْ أَعْظَمَ بَرَكَةً مِنْ يَدِي ‏.‏ وَفِي رِوَايَةِ يَحْيَى بْنِ أَيُّوبَ بِمُعَوِّذَاتٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் குடும்பத்தாரில் யாரேனும் நோயுற்றால், அவருக்காகப் பாதுகாப்புக் கோரும் (இறைமறை) அத்தியாயங்களை ஓதி ஊதுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின்போது, நான் அவர்கள்மீது ஊதி, அவர்களது கையாலேயே அவர்கள்மேல் தடவிவிட்டேன். ஏனெனில், அவர்களது கரம் எனது கரத்தைவிட வளம் (பரக்கத்) வாய்ந்ததாக இருந்தது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)