அத்தியாயம்: 39, பாடம்: 23, ஹதீஸ் எண்: 4070

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، أَخْبَرَنَا هِشَامُ بْنُ حَسَّانَ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ، عَنْ أَخِيهِ، مَعْبَدِ بْنِ سِيرِينَ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ :‏ ‏

نَزَلْنَا مَنْزِلاً فَأَتَتْنَا امْرَأَةٌ فَقَالَتْ إِنَّ سَيِّدَ الْحَىِّ سَلِيمٌ لُدِغَ فَهَلْ فِيكُمْ مِنْ رَاقٍ فَقَامَ مَعَهَا رَجُلٌ مِنَّا مَا كُنَّا نَظُنُّهُ يُحْسِنُ رُقْيَةً فَرَقَاهُ بِفَاتِحَةِ الْكِتَابِ فَبَرَأَ فَأَعْطَوْهُ غَنَمًا وَسَقَوْنَا لَبَنًا فَقُلْنَا أَكُنْتَ تُحْسِنُ رُقْيَةً فَقَالَ مَا رَقَيْتُهُ إِلاَّ بِفَاتِحَةِ الْكِتَابِ ‏.‏ قَالَ فَقُلْتُ لاَ تُحَرِّكُوهَا حَتَّى نَأْتِيَ النَّبِيَّ صلى الله عليه وسلم ‏.‏ فَأَتَيْنَا النَّبِيَّ صلى الله عليه وسلم فَذَكَرْنَا ذَلِكَ لَهُ ‏.‏ فَقَالَ ‏ “‏ مَا كَانَ يُدْرِيهِ أَنَّهَا رُقْيَةٌ اقْسِمُوا وَاضْرِبُوا لِي بِسَهْمٍ مَعَكُمْ” ‏


وَحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا وَهْبُ بْنُ جَرِيرٍ، حَدَّثَنَا هِشَامٌ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ نَحْوَهُ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَامَ مَعَهَا رَجُلٌ مِنَّا مَا كُنَّا نَأْبِنُهُ بِرُقْيَةٍ

நாங்கள் (ஒரு பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கினோம். அப்போது ஒரு பெண் எங்களிடம் வந்து, “எங்கள் கூட்டத் தலைவரைத் தேள் கொட்டிவிட்டது. அவர் உடல் நலிவுற்றுள்ளார்.  ஓதிப் பார்ப்பவர் எவரேனும் உங்களிடையே இருக்கின்றாரா?” என்று கேட்டாள். அவளுடன் எங்களில் ஒருவர் சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததில்லை. அவர் ‘அல்ஃபாத்திஹா’ அத்தியாயத்தைக் கொண்டு ஓதிப்பார்த்ததில், அந்தத் தலைவர் குணமடைந்துவிட்டார். ஆகவே, அவருக்குச் சில ஆடுகளை  வழங்கியதோடு எங்களுக்குப் பருகுவதற்குப் பாலும் கொடுத்தனர்.

(அந்த நண்பர் திரும்பி வந்தபோது) அவரிடம், “உமக்கு நன்றாக ஓதிப்பார்க்கத் தெரியுமா?” என்று கேட்டோம். அவர், “அவருக்கு நான் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தைத்தான் ஓதிப் பார்த்தேன்” என்று சொன்னார். அவரிடம் நான், “நபி (ஸல்) அவர்களிடம் செல்லும்வரை (ஆடுகளை) எதுவும் செய்துவிடாதீர்கள்” என்று சொன்னேன்.

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது, அதைப் பற்றி அவர்களிடம் சொன்னோம். அப்போது அவர்கள் “அது, ஓதிப்பார்க்கத் தக்க அத்தியாயம் என்று உமக்கு எப்படித் தெரியும்? அந்த ஆடுகளைப் பங்கிட்டுக்கொள்ளுங்கள்; அதில் ஒரு பங்கை எனக்கும் ஒதுக்குங்கள்” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல் குத்ரீ (ரலி)


குறிப்பு :

ஹிஷாம் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவளுடன் எங்களில் ஒருவர் எழுந்து சென்றார். அவருக்கு ஓதிப்பார்க்கத் தெரியும் என்று நாங்கள் நினைத்ததுகூட இல்லை” என இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment