அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4020

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – يَعْنِي الدَّرَاوَرْدِيَّ – عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ لاَ تَبْدَءُوا الْيَهُودَ وَلاَ النَّصَارَى بِالسَّلاَمِ فَإِذَا لَقِيتُمْ أَحَدَهُمْ فِي طَرِيقٍ فَاضْطَرُّوهُ إِلَى أَضْيَقِهِ” ‏


وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا وَكِيعٌ، عَنْ سُفْيَانَ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، كُلُّهُمْ عَنْ سُهَيْلٍ، بِهَذَا الإِسْنَادِ وَفِي حَدِيثِ وَكِيعٍ ‏”‏ إِذَا لَقِيتُمُ الْيَهُودَ ‏” وَفِي حَدِيثِ ابْنِ جَعْفَرٍ عَنْ شُعْبَةَ قَالَ فِي أَهْلِ الْكِتَابِ ‏.‏ وَفِي حَدِيثِ جَرِيرٍ ‏”‏ إِذَا لَقِيتُمُوهُمْ ‏” وَلَمْ يُسَمِّ أَحَدًا مِنَ الْمُشْرِكِينَ

“யூதர்களுக்கும் கிறித்தவர்களுக்கும் நீங்கள் முதலில் முகமன் கூறாதீர்கள். அவர்களில் ஒருவரை நீங்கள் வழியில் சந்தித்தால், அவரை ஓரமாக ஒதுங்கிப்போகச் செய்யுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)


குறிப்பு :

வகீஉ (ரஹ்) வழி அறிவிப்பில், “யூதர்களை நீங்கள் சந்தித்தால் …” என்றும், முஹம்மது பின் ஜஅஃபர் (ரஹ்) வழி அறிவிப்பில், “வேதக்காரர்களை நீங்கள் சந்தித்தால் …” என்று  ஷுஅபா (ரஹ்)  குறிப்பிட்டதாகவும் இடம்பெற்றுள்ளது.

ஜரீர் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர்களை நீங்கள் சந்தித்தால் …“ என்று இணைவைப்பாளர்களில் எவரையும் குறிப்பிடாமல் அறிவிக்கப்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4019

حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ، وَحَجَّاجُ بْنُ الشَّاعِرِ، قَالاَ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ، قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ :‏

سَلَّمَ نَاسٌ مِنْ يَهُودَ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ ‏.‏ فَقَالَ ‏”‏ وَعَلَيْكُمْ ‏” فَقَالَتْ عَائِشَةُ وَغَضِبَتْ أَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ ‏”‏ بَلَى قَدْ سَمِعْتُ فَرَدَدْتُ عَلَيْهِمْ وَإِنَّا نُجَابُ عَلَيْهِمْ وَلاَ يُجَابُونَ عَلَيْنَا” ‏

யூதர்களில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு, “அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க” (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று முகமன் கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) “வ அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) கோபப்பட்டு, “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆம்; நான் கேட்டுவிட்டு அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேனே! அவர்களுக்கு எதிராக நாம் செய்த பிரார்த்தனை ஏற்கப்படும். நமக்கெதிராக அவர்கள் செய்த பிரார்த்தனை ஏற்கப்படாது” என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4018

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنِ الأَعْمَشِ، عَنْ مُسْلِمٍ، عَنْ مَسْرُوقٍ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏

أَتَى النَّبِيَّ صلى الله عليه وسلم أُنَاسٌ مِنَ الْيَهُودِ فَقَالُوا السَّامُ عَلَيْكَ يَا أَبَا الْقَاسِمِ ‏‏ قَالَ ‏”‏ وَعَلَيْكُمْ ‏” قَالَتْ عَائِشَةُ قُلْتُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَالذَّامُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا عَائِشَةُ لاَ تَكُونِي فَاحِشَةً ‏” فَقَالَتْ مَا سَمِعْتَ مَا قَالُوا فَقَالَ ‏”‏ أَوَلَيْسَ قَدْ رَدَدْتُ عَلَيْهِمُ الَّذِي قَالُوا قُلْتُ وَعَلَيْكُمْ” ‏


حَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا يَعْلَى بْنُ عُبَيْدٍ، حَدَّثَنَا الأَعْمَشُ، بِهَذَا الإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ فَفَطِنَتْ بِهِمْ عَائِشَةُ فَسَبَّتْهُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ مَهْ يَا عَائِشَةُ فَإِنَّ اللَّهَ لاَ يُحِبُّ الْفُحْشَ وَالتَّفَحُّشَ ‏” وَزَادَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَإِذَا جَاءُوكَ حَيَّوْكَ بِمَا لَمْ يُحَيِّكَ بِهِ اللَّهُ‏}‏ إِلَى آخِرِ الآيَةِ ‏

யூதர்களில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, “அபுல்காசிமே! அஸ்ஸாமு அலைக்க'” (உமக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (மாற்றி முகமன்) கூறினர். நபி (ஸல்) “வ அலைக்கும்“ (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று (பதில்) சொன்னார்கள். நான் “அலைக்குமுஸ்ஸாமு வத்தாமு” (உங்களுக்கு மரணமும் இழிவும் உண்டாகட்டும்) என்று பதில் (முகமன்) கூறினேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆயிஷா! அருவருப்பாகப் பேசுபவளாக ஆகிவிடாதே!” என்று கூறினார்கள். நான், “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான்தான் அவர்கள் சொன்னதற்கு “வ அலைக்கும்“ (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று பதில் சொல்லி விட்டேனே (அதை நீ கவனிக்கவில்லையா)?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்) வழி அறிவிப்பில், “ஆயிஷா (ரலி), யூதர்கள் கூறியதைப் புரிந்துகொண்டு (பதிலுக்கு) யூதர்களை ஏசினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆயிஷா! நிதானம்! ஏனெனில், அல்லாஹ் விரும்பியோ விரும்பாமலோ அருவருப்பாகப் பேசுவதை விரும்புவதில்லை” என்று கூறினார்கள் என இடம்பெற்றுள்ளது.

மேலும், அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், “(நபியே!) அவர்கள் உம்மிடம் வரும்போது அல்லாஹ் எதை உமக்கு முகமனாக ஆக்கவில்லையோ அதை உமக்கு முகமனாகக் கூறுகின்றனர்” எனும் (58:8) வசனத்தை முழுமையாக அருளினான் என்று கூடுதலாகக் காணப்படுகிறது.

அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4017

وَحَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، – وَاللَّفْظُ لِزُهَيْرٍ – قَالاَ حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتِ :‏

اسْتَأْذَنَ رَهْطٌ مِنَ الْيَهُودِ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا السَّامُ عَلَيْكُمْ ‏.‏ فَقَالَتْ عَائِشَةُ بَلْ عَلَيْكُمُ السَّامُ وَاللَّعْنَةُ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ يَا عَائِشَةُ إِنَّ اللَّهَ يُحِبُّ الرِّفْقَ فِي الأَمْرِ كُلِّهِ ‏” قَالَتْ أَلَمْ تَسْمَعْ مَا قَالُوا قَالَ ‏”‏ قَدْ قُلْتُ وَعَلَيْكُمْ” ‏


حَدَّثَنَاهُ حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، جَمِيعًا عَنْ يَعْقُوبَ بْنِ إِبْرَاهِيمَ، بْنِ سَعْدٍ حَدَّثَنَا أَبِي، عَنْ صَالِحٍ، ح وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، كِلاَهُمَا عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ وَفِي حَدِيثِهِمَا جَمِيعًا قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ قَدْ قُلْتُ عَلَيْكُمْ ‏” وَلَمْ يَذْكُرُوا الْوَاوَ ‏

யூதர்களில் ஒரு குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து (உள்ளே வர) அனுமதி கேட்டு, “அஸ்ஸாமு அலைக்கும்“ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (மாற்றி முகமன்) கூறினர். உடனே நான் “அலைக்குமுஸ்ஸாமு வல் லஅனா“ (உங்களுக்கு மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்று பதில் சொன்னேன்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “ஆயிஷா! (நிதானம்!) அல்லாஹ் எல்லாக் காரியங்களிலும் நளினத்தைக் கையாள்வதையே விரும்புகின்றான்” என்று கூறினார்கள்.

நான் “அவர்கள் சொன்னதை நீங்கள் செவியுறவில்லையா?” என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நான்தான், வ அலைக்கும் (நீங்கள்  சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே (அதை நீ கவனிக்க வில்லையா)?” என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

ஸாலிஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான்தான்,.அலைக்கும் (நீங்கள் சொன்னது உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல்லிவிட்டேனே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (திருப்பிக்) கேட்டார்கள்” என இடம்பெற்றுள்ளது. அவற்றில் (“அலைக்கும்” என்பதற்கு முன்) “வ” எனும் (இடைச்)சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4016

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَيَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ – وَاللَّفْظُ لِيَحْيَى بْنِ يَحْيَى – قَالَ يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الآخَرُونَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، – وَهُوَ ابْنُ جَعْفَرٍ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، أَنَّهُ سَمِعَ ابْنَ عُمَرَ يَقُولُ :‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ الْيَهُودَ إِذَا سَلَّمُوا عَلَيْكُمْ يَقُولُ أَحَدُهُمُ السَّامُ عَلَيْكُمْ فَقُلْ عَلَيْكَ” ‏


وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، عَنْ سُفْيَانَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم بِمِثْلِهِ غَيْرَ أَنَّهُ قَالَ فَقُولُوا وَعَلَيْكَ

உங்களுக்கு முகமன் கூறும் (சில) யூதர்கள், ‘அஸ்ஸாமு அலைக்க’ (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று கூறுவர். ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) ‘அலைக்க‘ (உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக! என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

ஸுஃப்யான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஆகவே, (அவர்களுக்குப் பதிலாக) “வ அலைக்க’ (நீ சொன்னது உனக்கு உண்டாகட்டும்) என்று கூறுவீராக” என்று நபி (ஸல்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4015

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنِي يَحْيَى بْنُ حَبِيبٍ، حَدَّثَنَا خَالِدٌ – يَعْنِي ابْنَ الْحَارِثِ – قَالاَ حَدَّثَنَا شُعْبَةُ، ح وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لَهُمَا – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ، حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ قَتَادَةَ، يُحَدِّثُ عَنْ أَنَسٍ :‏

أَنَّ  أَصْحَابَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالُوا لِلنَّبِيِّ صلى الله عليه وسلم إِنَّ أَهْلَ الْكِتَابِ يُسَلِّمُونَ عَلَيْنَا فَكَيْفَ نَرُدُّ عَلَيْهِمْ قَالَ ‏ “‏ قُولُوا وَعَلَيْكُمْ” ‏

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்களிடம், “வேதக்காரர்கள் எங்களுக்கு ஸலாம் கூறினால், நாங்கள் அவர்களுக்கு எவ்வாறு பதில் கூற வேண்டும்?” என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்), “வ அலைக்கும் (உங்களுக்கும்) என்று (பதில்) கூறுங்கள்” என விடையளித்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 39, பாடம்: 4, ஹதீஸ் எண்: 4014

حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا هُشَيْمٌ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ، قَالَ سَمِعْتُ أَنَسًا يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ح

وَحَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ سَالِمٍ، حَدَّثَنَا هُشَيْمٌ، أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي بَكْرٍ، عَنْ جَدِّهِ أَنَسِ بْنِ مَالِكٍ :‏

أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ إِذَا سَلَّمَ عَلَيْكُمْ أَهْلُ الْكِتَابِ فَقُولُوا وَعَلَيْكُمْ ‏”

“வேதக்காரர்கள் உங்களுக்கு ஸலாம் கூறினால், ‘வ அலைக்கும்’ (உங்களுக்கும்) என்று (பதில்) கூறுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)