அத்தியாயம்: 39, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4030

وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ، – وَتَقَارَبَا فِي اللَّفْظِ – قَالاَ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عَلِيِّ بْنِ حُسَيْنٍ، عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَىٍّ قَالَتْ :‏ ‏

كَانَ النَّبِيُّ صلى الله عليه وسلم مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلاً فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ لأَنْقَلِبَ فَقَامَ مَعِيَ لِيَقْلِبَنِي ‏.‏ وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلاَنِ مِنَ الأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صلى الله عليه وسلم أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَىٍّ ‏” فَقَالاَ سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ ‏.‏ قَالَ ‏”‏ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا شَرًّا ‏ أَوْ قَالَ ‏ شَيْئًا ‏


وَحَدَّثَنِيهِ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُسَيْنٍ، أَنَّ صَفِيَّةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم أَخْبَرَتْهُ أَنَّهَا جَاءَتْ إِلَى النَّبِيِّ صلى الله عليه وسلم تَزُورُهُ فِي اعْتِكَافِهِ فِي الْمَسْجِدِ فِي الْعَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ فَتَحَدَّثَتْ عِنْدَهُ سَاعَةً ثُمَّ قَامَتْ تَنْقَلِبُ وَقَامَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَقْلِبُهَا ‏.‏ ثُمَّ ذَكَرَ بِمَعْنَى حَدِيثِ مَعْمَرٍ غَيْرَ أَنَّهُ قَالَ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ الشَّيْطَانَ يَبْلُغُ مِنَ الإِنْسَانِ مَبْلَغَ الدَّمِ ‏” وَلَمْ يَقُلْ ‏”‏ يَجْرِي ‏”

நபி (ஸல்) (ரமளானின் இறுதிப் பத்து நாட்களில்) ‘இஃதிகாஃபி’ல் இருந்தபோது, அவர்களைச் சந்திப்பதற்காக இரவு நேரத்தில் நான் சென்றேன். அவர்களிடம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தபோது, என்னை வழி அனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள். அப்போது உஸாமா பின் ஸைத் (ரலி) இல்லத்திலேயே என் வசிப்பிடம் இருந்தது.

அப்போது அன்ஸாரிகளில் இருவர் (எங்களைக்) கடந்து சென்றனர். அவ்விருவரும் நபி (ஸல்) அவர்களைக் கண்டதும் விரைவாக நடந்தனர். அப்போது நபி (ஸல்), “சற்று நில்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்தி ஹுயை ஆவார்” என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள் இருவரும், “அல்லாஹ் தூயவன்! அல்லாஹ்வின் தூதரே! (உங்களையா நாங்கள் சந்தேகிப்போம்!)” என்று கூறினர்.

நபி (ஸல்), “ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகின்றான். அவன் உங்கள் உள்ளங்களில் தீய எண்ணத்தை / எதையேனும்  போட்டுவிடுவானோ என்று நான் ஐயமுற்றேன்”

அறிவிப்பாளர் : அன்னை ஸஃபிய்யா பின்த்தி ஹுயை (ரலி)


குறிப்பு :

ஷுஐப் (ரஹ்) வழி அறிவிப்பில்,

“நபி (ஸல்) ரமளான் மாதத்தின் இறுதிப் பத்து நாட்களில் பள்ளிவாசலில் ‘இஃதி காஃப்‘ இருந்தபோது, அவர்களைச் சந்திப்பதற்காக நான் (பள்ளிவாசலுக்குச்) சென்றேன். (அந்த இரவில்) சிறிது நேரம் பேசிவிட்டு நான் திரும்பிச் செல்வதற்காக எழுந்தேன். என்னை வழியனுப்புவதற்காக நபி (ஸல்) அவர்களும் எழுந்தார்கள்… “ எனத் தொடங்கி மேற்கண்ட ஹதீஸில் உள்ளதைப் போன்றே இடம் பெற்றுள்ளது.

ஆனால், “ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களை எல்லாம் சென்றடைந்துவிடுகின்றான்” என்று இடம்பெற்றுள்ளது. “ஓடுகின்றான்” எனும் சொல் இடம்பெறவில்லை.

அத்தியாயம்: 39, பாடம்: 9, ஹதீஸ் எண்: 4029

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ أَنَسٍ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم كَانَ مَعَ إِحْدَى نِسَائِهِ فَمَرَّ بِهِ رَجُلٌ فَدَعَاهُ فَجَاءَ فَقَالَ ‏”‏ يَا فُلاَنُ هَذِهِ زَوْجَتِي فُلاَنَةُ ‏” فَقَالَ يَا رَسُولَ اللَّهِ مَنْ كُنْتُ أَظُنُّ بِهِ فَلَمْ أَكُنْ أَظُنُّ بِكَ ‏.‏ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنَ الإِنْسَانِ مَجْرَى الدَّمِ ‏”

நபி (ஸல்) தம் மனைவி ஒருவருடன் (தனித்து) இருந்தபோது அவர்களைக் கடந்து ஒருவர் சென்றார். நபி (ஸல்) அவரை அழைத்தார்கள். அவர் வந்ததும், “இவர் என்னுடைய மனைவி இன்னவர் ஆவார்” என்று கூறினார்கள். அப்போது அவர், “அல்லாஹ்வின் தூதரே! நான் யாரைச் சந்தேகித்தாலும் உங்களைச் சந்தேகிக்க மாட்டேன்” என்று கூறினார்.

அப்போது நபி (ஸல்), “ஷைத்தான், மனிதனின் இரத்த நாளங்களில் எல்லாம் ஓடுகின்றான்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)