அத்தியாயம்: 4, பாடம்: 11, ஹதீஸ் எண்: 601

َدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏عَنْ ‏ ‏حَبِيبٍ الْمُعَلِّمِ ‏ ‏عَنْ ‏ ‏عَطَاءٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏أَبُو هُرَيْرَةَ ‏
‏فِي كُلِّ صَلَاةٍ قِرَاءَةٌ فَمَا أَسْمَعَنَا النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَسْمَعْنَاكُمْ وَمَا أَخْفَى مِنَّا أَخْفَيْنَاهُ مِنْكُمْ وَمَنْ قَرَأَ ‏ ‏بِأُمِّ الْكِتَابِ ‏ ‏فَقَدْ أَجْزَأَتْ عَنْهُ وَمَنْ زَادَ فَهُوَ أَفْضَلُ ‏

“தொழுகையில் ஒவ்வொரு ரக்அத்திலும் குர்ஆன் வசங்களை ஓத வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குச் செவியுறுமாறு ஓதிய( ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறும்படி ஓதுகிறோம். அவர்கள் எங்களுக்குச் செவியுறாதவாறு ஓதிய( ரக்அத்)தில் நாங்களும் உங்களுக்குச் செவியுறாத வண்ணம் ஓதுகிறோம். ஒருவர் (தம் தொழுகையில்) குர்ஆனின் அன்னை (எனப்படும் அல்ஃபாத்திஹா) அத்தியாத்தை மட்டும் ஓதுவது அவருக்குப் போதுமானதாகும். அதைவிட அதிகமாக ஓதுவது சிறப்பிற்குரியதாகும்”.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment