அத்தியாயம்: 4, பாடம்: 13, ஹதீஸ் எண்: 606

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ الرَّازِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَوْزَاعِيُّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ الْخَطَّابِ ‏ ‏كَانَ يَجْهَرُ بِهَؤُلَاءِ الْكَلِمَاتِ يَقُولُ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ تَبَارَكَ اسْمُكَ وَتَعَالَى ‏ ‏جَدُّكَ ‏ ‏وَلَا إِلَهَ غَيْرُكَ ‏ ‏وَعَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏أَنَّهُ كَتَبَ إِلَيْهِ يُخْبِرُهُ عَنْ ‏ ‏أَنَسِ بْنِ مَالِكٍ ‏ ‏أَنَّهُ حَدَّثَهُ ‏
‏قَالَ صَلَّيْتُ خَلْفَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَأَبِي بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏وَعُثْمَانَ ‏ ‏فَكَانُوا يَسْتَفْتِحُونَ ‏ ‏ب‏الْحَمْد لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

‏لَا يَذْكُرُونَ ‏ ‏بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ ‏ ‏فِي أَوَّلِ قِرَاءَةٍ وَلَا فِي آخِرِهَا ‏

‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ مِهْرَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏الْأَوْزَاعِيِّ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏إِسْحَقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ ‏ ‏أَنَّهُ سَمِعَ ‏ ‏أَنَسَ بْنَ مَالِكٍ ‏ ‏يَذْكُرُ ذَلِكَ ‏

நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரு (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருக்குப் பின்னால் (நின்று) நான் தொழுதிருக்கிறேன். அவர்கள் (அனைவரும்) “அல்ஹம்து … ” ஓதியே (தொழுகையைத்) தொடங்குவார்கள். அல்ஹம்துக்கு முன்னோ பின்னோ பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று கூறமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி) வழியாக கத்தாதா (ரஹ்).

குறிப்பு:

இஸ்ஹாக் பின் அப்தில்லாஹ் பின் அபீ தல்ஹா (ரஹ்) வழி அறிவிப்பில், “இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து செவியேற்றேன்” எனக் கூறியுள்ளது பதிவாகியுள்ளது.

அப்தா பின் அபீலுபாபா (ரஹ்) வழி அறிவிப்பில், “உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் (தொழுகையின் தொடக்க தக்பீருக்குப்பின்) சுப்ஹானக்கல்லாஹும்ம வபி ஹம்திக்க, தபாரக்கஸ்முக்க, வதஆலா ஜத்துக்க, வலா இலாஹ ஃகைருக்க [இறைவா! உன்னைத் துதித்துப் போற்றுகிறேன். உனது பெயர் வளம் வாய்ந்தது; உனது பெருமை உயர்வானது. உன்னைத் தவிர வேறு இறைவனில்லை] என்று உரத்துக் கூறுவார்கள்” என்பதாக இடம்பெற்றுள்ளது. ஆனால், “உமர் (ரலி) அவர்களிடமிருந்து அப்தா (ரஹ்) எதையுமே செவியுற்றவரல்லர்” என்று அபூஅலீ கஸ்ஸானீ (ரஹ்) கூறியிருப்பதை இமாம் நவவீ (ரஹ்) பதிவு செய்திருக்கிறார்.

Share this Hadith:

Leave a Comment