அத்தியாயம்: 4, பாடம்: 16, ஹதீஸ் எண்: 612

حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَأَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ عَبْدِ الْمَلِكِ الْأُمَوِيُّ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِأَبِي كَامِلٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏يُونُسَ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏حِطَّانَ بْنِ عَبْدِ اللَّهِ الرَّقَاشِيِّ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّيْتُ مَعَ ‏ ‏أَبِي مُوسَى الْأَشْعَرِيِّ ‏ ‏صَلَاةً فَلَمَّا كَانَ عِنْدَ الْقَعْدَةِ قَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أُقِرَّتْ الصَّلَاةُ ‏ ‏بِالْبِرِّ ‏ ‏وَالزَّكَاةِ قَالَ فَلَمَّا قَضَى ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏الصَّلَاةَ وَسَلَّمَ انْصَرَفَ فَقَالَ أَيُّكُمْ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا قَالَ ‏ ‏فَأَرَمَّ ‏ ‏الْقَوْمُ ثُمَّ قَالَ أَيُّكُمْ الْقَائِلُ كَلِمَةَ كَذَا وَكَذَا ‏ ‏فَأَرَمَّ ‏ ‏الْقَوْمُ فَقَالَ لَعَلَّكَ يَا ‏ ‏حِطَّانُ ‏ ‏قُلْتَهَا قَالَ مَا قُلْتُهَا وَلَقَدْ رَهِبْتُ أَنْ ‏ ‏تَبْكَعَنِي ‏ ‏بِهَا فَقَالَ رَجُلٌ مِنْ الْقَوْمِ أَنَا قُلْتُهَا وَلَمْ أُرِدْ بِهَا إِلَّا الْخَيْرَ فَقَالَ ‏ ‏أَبُو مُوسَى ‏ ‏أَمَا تَعْلَمُونَ كَيْفَ تَقُولُونَ فِي صَلَاتِكُمْ ‏
‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَطَبَنَا فَبَيَّنَ لَنَا سُنَّتَنَا وَعَلَّمَنَا صَلَاتَنَا فَقَالَ ‏ ‏إِذَا صَلَّيْتُمْ فَأَقِيمُوا صُفُوفَكُمْ ثُمَّ ‏ ‏لْيَؤُمَّكُمْ أَحَدُكُمْ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذْ قَالَ ‏‏غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ‏
فَقُولُوا آمِينَ يُجِبْكُمْ اللَّهُ فَإِذَا كَبَّرَ وَرَكَعَ فَكَبِّرُوا وَارْكَعُوا فَإِنَّ الْإِمَامَ يَرْكَعُ قَبْلَكُمْ وَيَرْفَعُ قَبْلَكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتِلْكَ بِتِلْكَ وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ يَسْمَعُ اللَّهُ لَكُمْ فَإِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَالَ عَلَى لِسَانِ نَبِيِّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ وَإِذَا كَبَّرَ وَسَجَدَ فَكَبِّرُوا وَاسْجُدُوا فَإِنَّ الْإِمَامَ يَسْجُدُ قَبْلَكُمْ وَيَرْفَعُ قَبْلَكُمْ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَتِلْكَ بِتِلْكَ وَإِذَا كَانَ عِنْدَ الْقَعْدَةِ فَلْيَكُنْ مِنْ أَوَّلِ قَوْلِ أَحَدِكُمْ التَّحِيَّاتُ الطَّيِّبَاتُ الصَّلَوَاتُ لِلَّهِ السَّلَامُ عَلَيْكَ أَيُّهَا النَّبِيُّ وَرَحْمَةُ اللَّهِ وَبَرَكَاتُهُ السَّلَامُ عَلَيْنَا وَعَلَى عِبَادِ اللَّهِ الصَّالِحِينَ أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَشْهَدُ أَنَّ ‏ ‏مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ ‏
‏حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدُ بْنُ أَبِي عَرُوبَةَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُعَاذُ بْنُ هِشَامٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ التَّيْمِيِّ ‏ ‏كُلُّ هَؤُلَاءِ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏فِي هَذَا الْإِسْنَادِ ‏ ‏بِمِثْلِهِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏جَرِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏مِنْ الزِّيَادَةِ وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا وَلَيْسَ فِي حَدِيثِ أَحَدٍ مِنْهُمْ فَإِنَّ اللَّهَ قَالَ عَلَى لِسَانِ نَبِيِّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏ ‏إِلَّا فِي رِوَايَةِ ‏ ‏أَبِي كَامِلٍ ‏ ‏وَحْدَهُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوَانَةَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرِ ‏ ‏ابْنُ أُخْتِ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏فِي هَذَا الْحَدِيثِ ‏ ‏فَقَالَ ‏ ‏مُسْلِمٌ ‏ ‏تُرِيدُ أَحْفَظَ مِنْ ‏ ‏سُلَيْمَانَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَحَدِيثُ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏فَقَالَ هُوَ صَحِيحٌ ‏ ‏يَعْنِي ‏ ‏وَإِذَا قَرَأَ فَأَنْصِتُوا ‏ ‏فَقَالَ هُوَ عِنْدِي صَحِيحٌ ‏ ‏فَقَالَ لِمَ لَمْ تَضَعْهُ هَا هُنَا ‏ ‏قَالَ لَيْسَ كُلُّ شَيْءٍ عِنْدِي صَحِيحٍ وَضَعْتُهُ هَا هُنَا إِنَّمَا وَضَعْتُ هَا هُنَا مَا أَجْمَعُوا عَلَيْهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ أَبِي عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏عَنْ ‏ ‏مَعْمَرٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ وَقَالَ فِي الْحَدِيثِ ‏ ‏فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ قَضَى عَلَى لِسَانِ نَبِيِّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ ‏

நான் அபூமுஸா அல்அஷ்அரீ (ரலி) அவர்களுடன் ஒரு தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் (தொழுகையில் அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்த ஒருவர், “உகிர்ரத்திஸ் ஸலாத்து பில்பிர்ரி வஸ்ஸகாத்தி [பொருள்: நன்மை, தானதருமம் ஆகியவற்றுடன் சேர்ந்து தொழுகையும் ஒரு கடமையாக ஏற்கப்பட்டுவிட்டது]” என்று கூறினார். அபூமூஸா (ரலி) அவர்கள் தொழுகையை முடித்து ஸலாம் கொடுத்துத் திரும்பியதும் “உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போது அனைவரும் மௌனம் காத்தனர். மீண்டும் “உங்களில் இன்னின்ன வார்த்தையைக் கூறியவர் யார்?” என்று கேட்டார்கள். அப்போதும் அனைவரும் மௌனம் காத்தனர். பிறகு அவர்கள் (என்னிடம்), “ஹித்தான்! நீங்கள்தான் அதைக் கூறியிருக்கக் கூடும்” என்று சொல்ல, “அதை நான் கூறவில்லை. (குரல் ஒற்றுமையால்) அதை நான் சொன்னதாக நினைத்துக்கொண்டு நீங்கள் என்னைக் கண்டிக்கக் கூடும் என்ற அச்ச உணர்வுடன் நானிருக்கிறேன்” என்றேன். அப்போது மக்களில் ஒருவர் முன்வந்து, “நான்தான் அவ்வாறு கூறினேன். அதன் மூலம் நல்லதையே நாடினேன்” என்று சொன்னார்.

அப்போது அபூமூஸா (ரலி) அவர்கள், “உங்களுடைய தொழுகையி(ன் அமர்வி)ல் என்ன கூற வேண்டும் என்று உங்களுக்குத் தெரியாதா? நிச்சயமாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களுக்கு உரையாற்றி, தொழுகையில் நாம் பின்பற்ற வேண்டிய வழிமுறையை எங்களுக்கு விளக்கிச் சொன்னார்கள். நாம் தொழ வேண்டிய முறையைக் கற்றுக் கொடுத்தார்கள். அப்போது அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் தொழ ஆரம்பித்தால் உங்களுடைய தொழுகை வரிசைகளை ஒழுங்கு படுத்திக் கொள்ளுங்கள். பிறகு உங்களில் ஒருவர் உங்களுக்கு(தலைமை தாங்கி இமாமாக)த் தொழுவிக்கட்டும். அவர் தக்பீர் கூறினால், நீங்களும் தக்பீர் கூறுங்கள். (ஸூரத்துல் ஃபாத்திஹாவின் முடிவில்) அவர் ‘ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்’ என்று கூறினால் நீங்கள் ‘ஆமீன்’ என்று சொல்லுங்கள். (அவ்வாறு கூறினால்) அல்லாஹ் உங்களு(டைய பிரார்த்தனை)க்கு பதிலளிப்பான். பிறகு அவர் தக்பீர் கூறி ருகூஉச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி ருகூஉச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன்னதாக ருகூஉச் செய்வார். உங்களுக்கு முன்னதாக (ருகூஉவிலிருந்து) எழுந்துவிடுவார். எனவே, அவரும் நீங்களும் ருகூஉச் செய்யும் நேரம் சமமாகிவிடும்.

மேலும், ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ [தன்னைப் புகழ்வோரின் புகழுரையை அல்லாஹ் செவியேற்கிறான்] என்று இமாம் கூறினால், ‘அல்லாஹும்ம ரப்பனா லக்கல் ஹம்து’ [அல்லாஹ்வே! எங்கள் இறைவா! உனக்கே எல்லாப் புகழும்] என்று நீங்கள் கூறுங்கள். (அவ்வாறு கூறினால்) அல்லாஹ் உங்களுடைய புகழுரையைச் செவியேற்பான். ஏனெனில், திண்ணமாக ‘ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்’ என்ற கூற்று, அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் கூறியதாகும்.

மேலும், இமாம் தக்பீர் கூறி ஸஜ்தாச் செய்தால் நீங்களும் தக்பீர் கூறி, ஸஜ்தாச் செய்யுங்கள். நிச்சயமாக இமாம் உங்களுக்கு முன்னதாக ஸஜ்தாச் செய்வார். உங்களுக்கு முன்னதாக ஸஜ்தாலிருந்து எழுவார். எனவே, அவரும் நீங்களும் ஸஜ்தாச் செய்யும் நேரம் சமமாகிவிடும்.

மேலும், நீங்கள் அத்தஹிய்யாத் இருப்பில் அமர்ந்தால் உங்கள் ஒவ்வொருவரின் தொடக்கச்சொல், ‘அத்தஹிய்யாத்துத் தய்யிபாத்துஸ் ஸலவாத்து லில்லாஹி. அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந் நபிய்யு, வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. அஸ்ஸலாமு அலைனா வஅலா இபாதில்லாஹிஸ் ஸாலிஹீன். அஷ்ஹது அல் லாயிலாஹ இல்லல்லாஹு, வஅஷ்ஹது அன்ன முஹம்மதன் அப்துஹு வரசூலுஹு [பொருள்: அர்ப்பண வாழ்த்துகள் அனைத்தும் அல்லாஹ்வுக்கே! போற்றலும் புகழ்ச்சியும் அவனுக்கே உரியன. நபியே! உங்கள்மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் வளநலனும் உண்டாகட்டுமாக! எங்கள்மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள்மீதும் சாந்தி உண்டாகட்டும்! அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை என்று நான் உறுதிமொழிகிறேன். மேலும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் உறுதிமொழிகிறேன்]’ என்பதாக இருக்கட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்”.

அறிவிப்பாளர் : அபூமுஸா அல்அஷ்அரீ (ரலி) வழியாக ஹித்தான் பின் அப்தில்லாஹ் அர்ரகாஷீ (ரஹ்)

குறிப்பு :

ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) வழி அறிவிப்பில், “இமாம் ஓது(வதைக் கேட்கு)ம்போது நீங்கள் வாய்மூடி இருங்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

அபூகாமில் (ரஹ்) வழி அறிவிப்பில் மட்டுமே “திண்ணமாக அல்லாஹ் தன்னுடைய தூதரின் நாவின் மூலம் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினான்” எனும் சொற்றொடர் இடம்பெறுகிறது.

ஸுலைமான் அத்தைமீ (ரஹ்) வழி அறிவிப்பைக் குறித்து, அபூநஸ்ரு (ரஹ்) அவர்களின் சகோதரி மகன் அபூபக்ரு (ரஹ்) மாற்றுக் கருத்துக் கொண்டிருந்தார். அவரிடம் (என் ஆசிரியர்) இமாம் முஸ்லிம் (ரஹ்) “ஸுலைமான் அத்தைமீயை விடவும் நினைவாற்றல் உள்ளவரது அறிவிப்பு வேண்டுமென்பது உங்கள் விருப்பமா?” எனக் கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரஹ்) அவர்கள், “அபூஹுரைரா (ரலி) வழி அறிவிக்கப்படும் ஹதீஸ் இருக்கிறதே!” என்று பதிலளித்தார்கள். “அதுவும் என்னால் ஏற்கப்பட்ட சரியான ஹதீஸ்தான்” என்று இமாம் முஸ்லிம் கூறியபோது, “எனில், அபூஹுரைரா (ரலி) வழிவந்த ஹதீஸை (ஸஹீஹ் முஸ்லிமில்) நீங்கள் இடம்பெறச் செய்யாதது ஏன்?” என்று அபூபக்ரு (ரஹ்) கேட்டார்கள். அதற்கு முஸ்லிம் (ரஹ்) அவர்கள், “எனது மதிப்பீட்டில் மட்டும் சரியானதாக உள்ள எல்லா ஹதீஸ்களையும் நான் எனது தொகுப்பில் இடம்பெறச்செய்து விடுவதில்லை. (பிற அறிஞர்களின்) ஒருமித்தக் கருத்துப்படி சரியாக உள்ள ஹதீஸ்களையே இங்கு இடம்பெறச் செய்துள்ளேன்” என்று பதிலளித்தார்கள் என்பதாக இமாம் முஸ்லிம் (ரஹ்) அவர்களின் மாணவர் அபூஇஸ்ஹாக் (ரஹ்) குறிப்பிடுவது இங்குப் பதிவுபெற்றுள்ளது.

மஃமர் (ரஹ்) வழி அறிவிப்பில், “மாண்புமிக்கவனான அல்லாஹ், திண்ணமாக தன்னுடைய தூதரின் நாவின் மூலம் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக்கொள்ள முடிவு செய்துவிட்டான்” என்று இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment