அத்தியாயம்: 12, பாடம்: 27, ஹதீஸ் எண்: 1707

حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عُمَرَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مَرْوَانُ يَعْنِي الْفَزَارِيَّ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ وَهُوَ ابْنُ كَيْسَانَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي حَازِمٍ الْأَشْجَعِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏

‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَنْ أَصْبَحَ مِنْكُمْ الْيَوْمَ صَائِمًا قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَا قَالَ فَمَنْ تَبِعَ مِنْكُمْ الْيَوْمَ جَنَازَةً قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَا قَالَ فَمَنْ أَطْعَمَ مِنْكُمْ الْيَوْمَ مِسْكِينًا قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَا قَالَ فَمَنْ عَادَ مِنْكُمْ الْيَوْمَ ‏ ‏مَرِيضًا ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏رَضِيَ اللَّهُ عَنْهُ ‏ ‏أَنَا فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا اجْتَمَعْنَ فِي امْرِئٍ إِلَّا دَخَلَ الْجَنَّةَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள் எங்களிடம்), “இன்று உங்களுள் நோன்பு நோற்றிருப்பவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ரு (ரலி), ‘நான்’ என்றார்கள். “இன்றைய தினம் உங்களுள் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து சென்றவர் யார்?” என்று கேட்டார்கள். அபூபக்ரு (ரலி), ‘நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஓர் ஏழைக்கு உணவளித்தவர் உங்களுள் யார்?” என்று அவர்கள் கேட்க, அதற்கும் அபூபக்ரு (ரலி), ‘நான்’ என்றார்கள். “இன்றைய தினம் ஒரு நோயாளியை உடல் நலம் விசாரித்தவர் உங்களுள் யார்?” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கேட்க, அதற்கும் அபூபக்ரு (ரலி), ‘நான்’ என்றார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “எவர் (நல்லறங்களான) இவை அனைத்தையும் மொத்தமாகச் செய்தாரோ அவர் சொர்க்கத்தில் நுழையாமல் இருப்பதில்லை” என்றார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 20, ஹதீஸ் எண்: 628

حَدَّثَنِي ‏ ‏أَبُو الطَّاهِرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏عَنْ ‏ ‏حَيْوَةَ ‏ ‏أَنَّ ‏ ‏أَبَا يُونُسَ ‏ ‏مَوْلَى ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏حَدَّثَهُ قَالَ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏
‏عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِنَّمَا جُعِلَ الْإِمَامُ لِيُؤْتَمَّ بِهِ فَإِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ وَإِذَا صَلَّى قَائِمًا فَصَلُّوا قِيَامًا وَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلَّوْا قُعُودًا أَجْمَعُونَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

“இமாம் ஏற்படுத்தப் படுவது அவரைப் பின்பற்றுவதற்கே! எனவே, அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் குனிந்(து ருகூஉச்செய்)தால் நீங்களும் குனியுங்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று சொல்லுங்கள். அவர் நின்று தொழுதால் நீங்களும் நின்று தொழுங்கள். அவர் உட்கார்ந்து தொழுதால் நீங்கள் அனைவரும் உட்கார்ந்து தொழுங்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 20, ஹதீஸ் எண்: 627

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏يَعْلَى وَهُوَ ابْنُ عَطَاءٍ ‏ ‏سَمِعَ ‏ ‏أَبَا عَلْقَمَةَ ‏ ‏سَمِعَ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏
‏قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّمَا الْإِمَامُ ‏ ‏جُنَّةٌ ‏ ‏فَإِذَا صَلَّى قَاعِدًا فَصَلُّوا قُعُودًا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ فَإِذَا وَافَقَ قَوْلُ أَهْلِ الْأَرْضِ قَوْلَ أَهْلِ السَّمَاءِ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ

“இமாம் என்பவர் கேடயமாவார். எனவே, அவர் உட்கார்நது தொழுதால் நீங்களும் உட்கார்ந்து தொழுங்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று கூறினால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று கூறுங்கள். பூமியில் உள்ளோரின் கூற்று(வேளை), வானிலுள்ளோரின் கூற்றோடு பொருந்தி விட்டால் அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடுகின்றன” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 20, ஹதீஸ் எண்: 626

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏وَابْنُ خَشْرَمٍ ‏ ‏قَالَا أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُعَلِّمُنَا يَقُولُ ‏ ‏لَا ‏ ‏تُبَادِرُوا ‏ ‏الْإِمَامَ إِذَا كَبَّرَ فَكَبِّرُوا وَإِذَا قَالَ ‏ ‏وَلَا الضَّالِّينَ ‏‏فَقُولُوا آمِينَ وَإِذَا رَكَعَ فَارْكَعُوا وَإِذَا قَالَ سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَقُولُوا اللَّهُمَّ رَبَّنَا لَكَ الْحَمْدُ ‏‏حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ يَعْنِي الدَّرَاوَرْدِيَّ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلِ بْنِ أَبِي صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِنَحْوِهِ إِلَّا قَوْلَهُ ‏‏وَلَا الضَّالِّينَ ‏‏فَقُولُوا آمِينَ وَزَادَ وَلَا تَرْفَعُوا قَبْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களுக்கு (த் தொழுகை முறையை)க் கற்றுக் கொடுத்தபோது, “நீங்கள் இமாமை முந்தாதீர்கள். அவர் தக்பீர் கூறினால் நீங்களும் தக்பீர் கூறுங்கள். அவர் (அல்ஹம்தின் இறுதியில்) வலள்ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள். அவர் ருகூஉச் செய்தால் நீங்களும் ருகூஉச் செய்யுங்கள். அவர் ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ் என்று சொன்னால் நீங்கள் அல்லாஹும்ம ரப்பனா ல(க்)கல் ஹம்து என்று சொல்லுங்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

ஸுஹைல் பின் அபீஸாலிஹ் (ரஹ்) வழி அறிவிப்பில், “அவர் (அல்ஹம்தின் இறுதியில்) வலள் ளால்லீன் என்று கூறினால் நீங்கள் ஆமீன் என்று கூறுங்கள்” என்பது இடம்பெறவில்லை. ஆனால், “இமாமுக்கு முன்பாக நீங்கள் தலையை உயர்த்தாதீர்கள்” என்று அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.