அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 638

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ

مَرِضَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاشْتَدَّ مَرَضُهُ فَقَالَ ‏ ‏مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَجُلٌ رَقِيقٌ مَتَى يَقُمْ مَقَامَكَ لَا يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَقَالَ مُرِي ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ فَإِنَّكُنَّ ‏ ‏صَوَاحِبُ ‏ ‏يُوسُفَ ‏ ‏قَالَ فَصَلَّى بِهِمْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَيَاةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோய்வாய்ப்பட்டு, அவர்களது நோய் கடுமையானபோது, “மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரு அவர்களிடம் கூறுங்கள்!” என்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ரு அவர்கள் இளகிய மனமுடையவர்; உங்களுடைய இடத்தில் நின்று, அவரால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூபக்ரிடம் சொல்லுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்!” என்று கூறிவிட்டு, “நீங்களெல்லாம் (நபி) யூசுஃப் (அலை) அவர்களுடைய (வரலாற்றுத்) தோழியரைப் போன்ற(விவரமில்லாத)வர்கள்தாம்” என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உயிருடன் இருக்கும்போதே அபூபக்ரு (ரலி) (இமாமாக நின்று) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 637

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الصَّمَدِ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏أَبِي ‏ ‏يُحَدِّثُ قَالَ حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ

لَمْ يَخْرُجْ إِلَيْنَا نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ثَلَاثًا فَأُقِيمَتْ الصَّلَاةُ فَذَهَبَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يَتَقَدَّمُ فَقَالَ نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِالْحِجَابِ فَرَفَعَهُ فَلَمَّا وَضَحَ لَنَا وَجْهُ نَبِيِّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا نَظَرْنَا مَنْظَرًا قَطُّ كَانَ أَعْجَبَ إِلَيْنَا مِنْ وَجْهِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِينَ وَضَحَ لَنَا قَالَ ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ إِلَى ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏أَنْ يَتَقَدَّمَ وَأَرْخَى نَبِيُّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الْحِجَابَ فَلَمْ نَقْدِرْ عَلَيْهِ حَتَّى مَاتَ

நபி (ஸல்) (தொடர்ச்சியாக) மூன்று நாட்கள் (எங்களுக்குத் தொழுவிக்க) எங்களிடம் வரவில்லை. (மூன்றாம் நாள்) தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டபோது அபூபக்ரு (ரலி) தொழுகை நடத்த முன்சென்றார்கள். அப்போது நபி (ஸல்) (தமது இல்லத்தின்) திரைச் சீலையை உயர்த்தினார்கள். நபி (ஸல்) அவர்களின் முகம் எங்களுக்குக் காட்சியளித்தபோது, அவர்களது முகத்தைவிடவும் மகிழ்வூட்டுகின்ற காட்சி எங்களுக்கு எதுவுமில்லை என்றானது. அப்போது நபி (ஸல்) அபூபக்ரு (ரலி) அவர்களிடம் (தொழுகையைத் தொடர) முன்னே செல்லுமாறு தமது கரத்தால் சைகை செய்துவிட்டு, திரைச் சீலையை இறக்கி (இல்லத்தினுள் சென்று) விட்டார்கள். அதற்குப் பிறகு இறக்கும்வரை நபி (ஸல்) அவர்களை எங்களால் பார்க்க முடியவில்லை.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 636

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ

أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي لَهُمْ فِي وَجَعِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الَّذِي تُوُفِّيَ فِيهِ حَتَّى إِذَا كَانَ يَوْمُ ‏ ‏الِاثْنَيْنِ وَهُمْ صُفُوفٌ فِي الصَّلَاةِ كَشَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سِتْرَ الْحُجْرَةِ فَنَظَرَ إِلَيْنَا وَهُوَ قَائِمٌ كَأَنَّ وَجْهَهُ وَرَقَةُ مُصْحَفٍ ثُمَّ تَبَسَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَاحِكًا قَالَ فَبُهِتْنَا وَنَحْنُ فِي الصَّلَاةِ مِنْ فَرَحٍ بِخُرُوجِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَكَصَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ وَظَنَّ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَارِجٌ لِلصَّلَاةِ فَأَشَارَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ أَنْ أَتِمُّوا صَلَاتَكُمْ قَالَ ثُمَّ دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرْخَى السِّتْرَ قَالَ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ يَوْمِهِ ذَلِكَ

و حَدَّثَنِيهِ ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ آخِرُ نَظْرَةٍ نَظَرْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَشَفَ السِّتَارَةَ يَوْمَ ‏ ‏الِاثْنَيْنِ بِهَذِهِ الْقِصَّةِ ‏ ‏وَحَدِيثُ ‏ ‏صَالِحٍ ‏ ‏أَتَمُّ وَأَشْبَعُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا كَانَ يَوْمُ ‏ ‏الِاثْنَيْنِ بِنَحْوِ حَدِيثِهِمَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறப்பதற்கு முன் அவர்களைப் பீடித்த நோயின்போது அபூபக்ரு (ரலி) மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். இவ்வாறிருக்க, (ஒரு) திங்கள் கிழமையன்று மக்கள் தொழுகை வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (ஆயிஷா (ரலி) அவர்களது) அறையின் திரைச் சீலையை விலக்கி நின்றுகொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் இறைமறையின் ஏடுபோன்று (தெளிவாக) இருந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களைப் பார்த்து (மகிழ்ச்சியோடு) புன்னகைத்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நோயிலிருந்து விடுபட்டு) வெளியே வந்ததைக் கண்டு மகிழ்ச்சியால் தொழுகையிலிருக்கும்போதே (இன்ப) அதிர்ச்சியடைந்தோம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைக்காகப் புறப்பட்டு வரப்போகிறார்கள் என்று நினைத்து, அபூபக்ரு (ரலி), பின்வரிசையி(ன் நடுவி)ல் சேர்ந்து கொள்வதற்காக (இமாம் நிலையிலிருந்து) பின்வாங்கினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களை நோக்கி ‘உங்கள் தொழுகையை நிறைவுசெய்யுங்கள்’ என்பதுபோல் தமது கையால் சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அறைக்குள்) நுழைந்து திரைச் சீலையைத் தொங்கவிட்டார்கள். அன்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களை அறிவிப்பாளராகக் கொண்டதும் இபுனு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) வழியாக ஸாலிஹ் (ரஹ்) வழி வந்ததுமான மேற்காணும் அறிவிப்பு நிறைவானதாகும்.

ஸுஃப்யான் பின் உஐனா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரைச் சீலையை விலக்கிய அந்தத் திங்கள் கிழமைதான் நான் அவர்களை (உயிருடன்) இறுதியாகப் பார்த்த நாளாகும்” என்று அனஸ் (ரலி) கூறியது இடம்பெற்றுள்ளது.

அன்னை ஆயிஷா (ரல்) அவர்களின் இல்லத்தை ஒட்டியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியான மஸ்ஜிதுந்நபவீ அமைந்திருந்தது.

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 635

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏وَأَلْفَاظُهُمْ مُتَقَارِبَةٌ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏هِشَامٌ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ

أَمَرَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فِي مَرَضِهِ فَكَانَ ‏ ‏يُصَلِّي بِهِمْ قَالَ ‏ ‏عُرْوَةُ ‏ ‏فَوَجَدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ نَفْسِهِ خِفَّةً فَخَرَجَ وَإِذَا ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يَؤُمُّ النَّاسَ فَلَمَّا رَآهُ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏اسْتَأْخَرَ فَأَشَارَ إِلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيْ كَمَا أَنْتَ فَجَلَسَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حِذَاءَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏إِلَى جَنْبِهِ فَكَانَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يُصَلِّي بِصَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ ‏ ‏أَبِي بَكْرٍ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் இறுதி நாட்களில்) நோயுற்றிருந்தபோது அபூபக்ரு (ரலி) அவர்களை மக்களுக்குத் தொழுவிக்குமாறு கூறினார்கள். அவ்வாறே அபூபக்ரு (ரலி) மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். இதனிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமக்குச் சற்று உடல்நலம் தேறியிருப்பதை உணர்ந்தார்கள். எனவே, (பள்ளிவாசலுக்குப்) புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ரு (ரலி) மக்களுக்குத் தொழுவித்துக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்ட அபூபக்ரு (ரலி) (தொழுமிடத்திலிருந்து) பின்வாங்க முயன்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அங்கேயே நில்லுங்கள்” என்று அபூபக்ரு (ரலி) அவர்களுக்குச் சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு நேராக அவர்களது பக்கவாட்டில் அமர்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ரு (ரலி) தொழ, அபூபக்ரு (ரலி) அவர்களைப் பின்பற்றி மக்கள் தொழலானார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 634

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ

لَمَّا ثَقُلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏جَاءَ ‏ ‏بِلَالٌ ‏ ‏يُؤْذِنُهُ بِالصَّلَاةِ فَقَالَ ‏ ‏مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَجُلٌ ‏ ‏أَسِيفٌ ‏ ‏وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لَا يُسْمِعْ النَّاسَ فَلَوْ أَمَرْتَ ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَ مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ قَالَتْ فَقُلْتُ ‏ ‏لِحَفْصَةَ ‏ ‏قُولِي لَهُ إِنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَجُلٌ أَسِيفٌ وَإِنَّهُ مَتَى يَقُمْ مَقَامَكَ لَا يُسْمِعْ النَّاسَ فَلَوْ أَمَرْتَ ‏ ‏عُمَرَ ‏ ‏فَقَالَتْ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِنَّكُنَّ لَأَنْتُنَّ ‏ ‏صَوَاحِبُ ‏ ‏يُوسُفَ ‏ ‏مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ قَالَتْ فَأَمَرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ قَالَتْ فَلَمَّا دَخَلَ فِي الصَّلَاةِ وَجَدَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ نَفْسِهِ خِفَّةً فَقَامَ ‏ ‏يُهَادَى ‏ ‏بَيْنَ رَجُلَيْنِ وَرِجْلَاهُ ‏ ‏تَخُطَّانِ ‏ ‏فِي الْأَرْضِ قَالَتْ فَلَمَّا دَخَلَ الْمَسْجِدَ سَمِعَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حِسَّهُ ذَهَبَ يَتَأَخَّرُ ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏إِلَيْهِ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قُمْ مَكَانَكَ فَجَاءَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى جَلَسَ عَنْ يَسَارِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏قَالَتْ فَكَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ جَالِسًا ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏قَائِمًا ‏ ‏يَقْتَدِي ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏بِصَلَاةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَيَقْتَدِي النَّاسُ بِصَلَاةِ ‏ ‏أَبِي بَكْرٍ

حَدَّثَنَا ‏ ‏مِنْجَابُ بْنُ الْحَارِثِ التَّمِيمِيُّ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ مُسْهِرٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏نَحْوَهُ وَفِي حَدِيثِهِمَا لَمَّا مَرِضَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَرَضَهُ الَّذِي تُوُفِّيَ فِيهِ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏ابْنِ مُسْهِرٍ ‏ ‏فَأُتِيَ بِرَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏حَتَّى أُجْلِسَ إِلَى جَنْبِهِ وَكَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏يُسْمِعُهُمْ التَّكْبِيرَ ‏ ‏وَفِي حَدِيثِ ‏ ‏عِيسَى ‏ ‏فَجَلَسَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏إِلَى جَنْبِهِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏يُسْمِعُ النَّاسَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாயிருந்தபோது அவர்களைத் தொழுகைத் தலைமைக்கு அழைப்பதற்காக பிலால் (ரலி) வந்தார்கள். அப்போது “அபூபக்ரு அவர்களை மக்களுக்குத் தொழுவிக்கச் சொல்லுங்கள்!” என்று நபியவர்கள் கூறினார்கள். உடனே நான், “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ரு (ரலி) சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்; நீங்கள் (தொழ) நின்ற இடத்தில் அவர் நின்றால் (உணர்ச்சிப் பெருக்கால் அழுது விடுவார்) அவரால் (உரக்கு ஓதி) மக்கள் கேட்கும்படி செய்ய முடியாது. எனவே, உமர் (ரலி) அவர்களுக்குக் கட்டளையிட்டால் நன்றாயிருக்குமே!” என்று சொன்னேன். அப்போது, “அபூபக்ரிடம் சொல்லுங்கள்; அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று (மீண்டும்) நபியவர்கள் சொன்னார்கள். உடனே நான் (மற்றொரு துணைவியாரான) ஹஃப்ஸாவிடம் “அபூபக்ரு (ரலி) சட்டென உணர்ச்சி வசப்படக் கூடியவர்; உங்களது இடத்தில் அவர் நின்று, அவரால் மக்களுக்கு (குர்ஆன் ஓதுவதை)க் கேட்கும்படி செய்ய முடியாது; (தந்தை) உமர் (ரலி) அவர்களுக்கு நீங்கள் கட்டளையிட்டால் என்ன? என்று நபியவர்களிடம் கூறுங்கள்” என்றேன். ஹஃப்ஸாவும் அவ்வாறே சொன்னார். அதற்கு “நீங்களெல்லாம் (நபி) யூசுஃப் (அலை) அவர்களுடைய (வரலாற்றுத்) தோழியரைப் போன்ற(விவரமில்லாத)வர்கள்தாம்” என நபியவர்கள் கூறிவிட்டு, “மக்களுக்குத் தொழுவிக்கும்படி அபூபக்ரிடம் சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அவ்வாறே தங்களுக்குத் தொழுவிக்குமாறு அபூபக்ரு (ரலி) அவர்களிடம் மக்கள் கூறினர். அபூபக்ரு (ரலி) தொழுவிக்க ஆரம்பித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர்(ஸல்) தமது உடல்நலம் சற்றுத் தேறியிருப்பதை உணர்ந்து, எழுந்து இருவரு(டைய கைத்தாங்கலு)க்கிடையே தொங்கியபடி தம் கால்கள் பூமியில் இழுபட(தொழ)ப் புறப்பட்டார்கள். அவர்கள் பள்ளிவாசலுக்குள் வருவதை அறிந்த அபூபக்ரு (ரலி) பின்வாங்க முயன்றனர். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் இடத்திலேயே இருங்கள்” என்று அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு சைகை செய்துவிட்டு, அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு இடப் பக்கத்தில் வந்து அமர்ந்தார்கள். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமர்ந்துகொண்டு மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ரு (ரலி) நின்றுகொண்டு தொழலானார்கள். நபி (ஸல்) அவர்களைப் பின்பற்றி அபூபக்ரும், அபூபக்ரு (ரலி) அவர்களைப் பின்பற்றி மக்களும் தொழுதார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் (ரஹ்), ஈஸா பின் யூனுஸ் (ரஹ்) ஆகிய இருவரின் அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்த அந்த (இறுதி) நோயின் போது…” என்று இடம்பெற்றுள்ளது.

இப்னு முஸ்ஹிர் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், “அப்போது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அழைத்துவரப்பட்டு அபூபக்ரு (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தப்பட்டார்கள். நபி (ஸல்) மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ரு (ரலி), (அல்லாஹு அக்பர் எனும்) தக்பீரை மக்களுக்குக் கேட்கும்படி உரத்துக் கூறிக்கொண்டிருந்தார்கள்” என்று இடம்பெற்றுள்ளது.

ஈசா பின் யூனுஸ் (ரஹ்) அவர்களது அறிவிப்பில் “அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அமர்ந்து மக்களுக்குத் தொழுவிக்க, அபூபக்ரு (ரலி) நபி (ஸல்) அவர்களுக்குப் பக்கத்தில் நின்று கொண்டு மக்களுக்குக் கேட்கும் விதமாக (தக்பீர்) கூறிக்கொண்டிருந்தார்கள்” என்று இடம் பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 633

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنَا وَقَالَ ‏ ‏ابْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏حَمْزَةُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏
‏لَمَّا دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بَيْتِي قَالَ ‏ ‏مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَجُلٌ رَقِيقٌ إِذَا قَرَأَ الْقُرْآنَ لَا يَمْلِكُ دَمْعَهُ فَلَوْ أَمَرْتَ غَيْرَ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏قَالَتْ وَاللَّهِ مَا بِي إِلَّا كَرَاهِيَةُ أَنْ يَتَشَاءَمَ النَّاسُ بِأَوَّلِ مَنْ يَقُومُ فِي مَقَامِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ فَرَاجَعْتُهُ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا فَقَالَ لِيُصَلِّ بِالنَّاسِ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فَإِنَّكُنَّ ‏ ‏صَوَاحِبُ ‏ ‏يُوسُفَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (சிகிச்சைக்காக) எனது இல்லத்துக்கு வந்தபோது, “மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரு அவர்களிடம் கூறுங்கள்!” என்றார்கள். நான் “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ரு அவர்கள் இளகிய மனமுடையவர்; அவர் குர்ஆனை ஓதினால் அவரால் கண்ணீரைக் கட்டுப்படுத்த முடியாது. எனவே, அபூபக்ரு (ரலி) அவர்களை விடுத்து வேறு யாருக்காவது நீங்கள் கட்டளையிட்டால் நன்றாக இருக்குமே!” என்று கூறினேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இடத்தில் முதன் முதலாக நிற்பவர் (ஆக என் தந்தை), மக்களால் வேண்டா வெறுப்புடன் பார்க்கப் படுவதை நான் விரும்பாததே இவ்வாறு நான் கூறியதற்குக் காரணமாகும். இரண்டு அல்லது மூன்று முறை நான் அதைத் திரும்பத் திரும்ப வலியுறுத்தினேன். ஆனால் நபியவர்கள், “அபூபக்ரு மக்களுக்குத் தொழுவிக்கட்டும்” என்று கூறிவிட்டு, “நீங்களெல்லாம் (நபி) யூசுஃப் (அலை) அவர்களுடைய (வரலாற்றுத்) தோழியரைப் போன்ற(விவரமில்லாத)வர்கள்தாம்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 632

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ

لَقَدْ ‏ ‏رَاجَعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي ذَلِكَ وَمَا حَمَلَنِي عَلَى كَثْرَةِ مُرَاجَعَتِهِ إِلَّا أَنَّهُ لَمْ يَقَعْ فِي قَلْبِي أَنْ يُحِبَّ النَّاسُ بَعْدَهُ رَجُلًا قَامَ مَقَامَهُ أَبَدًا وَإِلَّا أَنِّي كُنْتُ أَرَى أَنَّهُ لَنْ يَقُومَ مَقَامَهُ أَحَدٌ إِلَّا تَشَاءَمَ النَّاسُ بِهِ فَأَرَدْتُ أَنْ يَعْدِلَ ذَلِكَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرٍ

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (என் தந்தையை விடுத்து) வேறு ஒருவரைத் தொழுவிக்க ஏற்பாடு செய்யும்படி மீண்டும் மீண்டும் வலியுறுத்தினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின் அவர்களுடைய இடத்தில் (இமாமாக) நிற்கும் எவரையும் மக்கள் நேசிப்பார்கள் என்று என் மனதில் தோன்றவில்லை; மாறாக, அவர்களது இடத்தில் யார் வந்தாலும் அவரை வேண்டா வெறுப்புடன் நடத்துவார்கள் என்பதால்தான் திரும்பத் திரும்ப (அவ்வாறு) நான் வலியுறுத்தினேன். அந்த (இமாமத்) பொறுப்பை என் தந்தை அபூபக்ரு அவர்களைத் தவிர்த்து (வேறு யாரிடமாவது ஒப்படைத்து)விட வேண்டும் என்று நான் விரும்பினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 631

حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏جَدِّي ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏عُقَيْلُ بْنُ خَالِدٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏
‏لَمَّا ‏ ‏ثَقُلَ ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَاشْتَدَّ بِهِ وَجَعُهُ اسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِي فَأَذِنَّ لَهُ فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ ‏ ‏تَخُطُّ ‏ ‏رِجْلَاهُ فِي الْأَرْضِ بَيْنَ ‏ ‏عَبَّاسِ بْنِ عَبْدِ الْمُطَّلِبِ ‏ ‏وَبَيْنَ رَجُلٍ آخَرَ ‏
‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فَأَخْبَرْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ ‏ ‏بِالَّذِي قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏فَقَالَ لِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ عَبَّاسٍ ‏ ‏هَلْ تَدْرِي مَنْ الرَّجُلُ الْآخَرُ الَّذِي لَمْ تُسَمِّ ‏ ‏عَائِشَةُ ‏ ‏قَالَ قُلْتُ لَا قَالَ ‏ ‏ابْنُ عَبَّاسٍ ‏ ‏هُوَ ‏ ‏عَلِيٌّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையாகி வேதனை அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தம் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் மற்றொருவருக்குமிடையே தொங்கியபடி (எனது வீட்டிற்கு) வந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

“ஆயிஷா (ரலி) அறிவித்த இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் எடுத்துரைத்தேன். அப்போது அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) என்னிடம், ‘ஆயிஷா (ரலி) பெயர் குறிப்பிடாத அந்த மற்றொருவர் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?’ என்று கேட்டார்கள். நான் ‘இல்லை (தெரியாது)’ என்று பதிலளித்தேன். அதற்கு அவர், ‘அலீ (ரலி)’ என்று கூறினார்கள்” என்பதாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 630

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِابْنِ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏قَالَ قَالَ ‏ ‏الزُّهْرِيُّ ‏ ‏وَأَخْبَرَنِي ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ ‏ ‏أَنَّ ‏ ‏عَائِشَةَ ‏ ‏أَخْبَرَتْهُ قَالَتْ ‏
‏أَوَّلُ مَا ‏ ‏اشْتَكَى ‏ ‏رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي بَيْتِ ‏ ‏مَيْمُونَةَ ‏ ‏فَاسْتَأْذَنَ أَزْوَاجَهُ أَنْ يُمَرَّضَ فِي بَيْتِهَا وَأَذِنَّ لَهُ قَالَتْ فَخَرَجَ وَيَدٌ لَهُ عَلَى ‏ ‏الْفَضْلِ بْنِ عَبَّاسٍ ‏ ‏وَيَدٌ لَهُ عَلَى رَجُلٍ آخَرَ وَهُوَ ‏ ‏يَخُطُّ ‏ ‏بِرِجْلَيْهِ فِي الْأَرْضِ ‏
‏فَقَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فَحَدَّثْتُ بِهِ ‏ ‏ابْنَ عَبَّاسٍ ‏ ‏فَقَالَ ‏ ‏أَتَدْرِي مَنْ الرَّجُلُ الَّذِي لَمْ تُسَمِّ ‏ ‏عَائِشَةُ ‏ ‏هُوَ ‏ ‏عَلِيٌّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (தம் துணைவியார்) மைமூனா (ரலி) அவர்களின் இல்லத்தில் இருந்தபோதுதான் முதலில் உடல் நலம் குன்றியது. அப்போது எனது வீட்டில் தங்கி, சிகிச்சை பெறுவதற்காகத் தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதியளித்தனர். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது ஒரு கையை ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்களின் (தோள்)மீதும் மற்றொரு கையை மற்றொருவரின் (தோள்)மீதும் வைத்து(த் தொங்கி)க்கொண்டு, தம் கால்கள் பூமியில் இழுபட (எனது வீட்டிற்கு) வந்தார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு :

“இந்த ஹதீஸை நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் தெரிவித்தபோது அவர்கள், ‘ஆயிஷா (ரலி) பெயர் குறிப்பிடாத அந்த மற்றொருவர் யார் தெரியுமா? அவர்தாம் அலீ (ரலி)’ என்றார்கள்” என்பதாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) குறிப்பிடுகிறார்கள்.

அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 629

حَدَّثَنَا ‏ ‏أَحْمَدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يُونُسَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏زَائِدَةُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُوسَى بْنُ أَبِي عَائِشَةَ ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏
‏دَخَلْتُ عَلَى ‏ ‏عَائِشَةَ ‏ ‏فَقُلْتُ لَهَا أَلَا تُحَدِّثِينِي عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ بَلَى ‏ ‏ثَقُلَ ‏ ‏النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏أَصَلَّى النَّاسُ قُلْنَا لَا وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ ضَعُوا لِي مَاءً فِي ‏ ‏الْمِخْضَبِ ‏ ‏فَفَعَلْنَا فَاغْتَسَلَ ثُمَّ ذَهَبَ ‏ ‏لِيَنُوءَ ‏ ‏فَأُغْمِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَقَالَ أَصَلَّى النَّاسُ قُلْنَا لَا وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ضَعُوا لِي مَاءً فِي ‏ ‏الْمِخْضَبِ ‏ ‏فَفَعَلْنَا فَاغْتَسَلَ ثُمَّ ذَهَبَ ‏ ‏لِيَنُوءَ ‏ ‏فَأُغْمِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَقَالَ أَصَلَّى النَّاسُ قُلْنَا لَا وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ ضَعُوا لِي مَاءً فِي ‏ ‏الْمِخْضَبِ ‏ ‏فَفَعَلْنَا فَاغْتَسَلَ ثُمَّ ذَهَبَ ‏ ‏لِيَنُوءَ ‏ ‏فَأُغْمِيَ عَلَيْهِ ثُمَّ أَفَاقَ فَقَالَ أَصَلَّى النَّاسُ فَقُلْنَا لَا وَهُمْ يَنْتَظِرُونَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَتْ وَالنَّاسُ ‏ ‏عُكُوفٌ ‏ ‏فِي الْمَسْجِدِ يَنْتَظِرُونَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لِصَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ قَالَتْ فَأَرْسَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَأَتَاهُ الرَّسُولُ فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَأْمُرُكَ أَنْ تُصَلِّيَ بِالنَّاسِ فَقَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَكَانَ رَجُلًا رَقِيقًا يَا ‏ ‏عُمَرُ ‏ ‏صَلِّ بِالنَّاسِ قَالَ فَقَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏أَنْتَ أَحَقُّ بِذَلِكَ قَالَتْ فَصَلَّى بِهِمْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏تِلْكَ الْأَيَّامَ ثُمَّ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَجَدَ مِنْ نَفْسِهِ خِفَّةً فَخَرَجَ بَيْنَ رَجُلَيْنِ أَحَدُهُمَا ‏ ‏الْعَبَّاسُ ‏ ‏لِصَلَاةِ الظُّهْرِ ‏ ‏وَأَبُو بَكْرٍ ‏ ‏يُصَلِّي بِالنَّاسِ فَلَمَّا رَآهُ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏ذَهَبَ لِيَتَأَخَّرَ ‏ ‏فَأَوْمَأَ ‏ ‏إِلَيْهِ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنْ لَا يَتَأَخَّرَ وَقَالَ لَهُمَا أَجْلِسَانِي إِلَى جَنْبِهِ فَأَجْلَسَاهُ إِلَى جَنْبِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَكَانَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏يُصَلِّي وَهُوَ قَائِمٌ بِصَلَاةِ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَالنَّاسُ يُصَلُّونَ بِصَلَاةِ ‏ ‏أَبِي بَكْرٍ ‏ ‏وَالنَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَاعِدٌ ‏
‏قَالَ ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏فَدَخَلْتُ عَلَى ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عَبَّاسٍ ‏ ‏فَقُلْتُ لَهُ أَلَا أَعْرِضُ عَلَيْكَ مَا حَدَّثَتْنِي ‏ ‏عَائِشَةُ ‏ ‏عَنْ مَرَضِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ هَاتِ فَعَرَضْتُ حَدِيثَهَا عَلَيْهِ فَمَا أَنْكَرَ مِنْهُ شَيْئًا غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏أَسَمَّتْ لَكَ الرَّجُلَ الَّذِي كَانَ مَعَ ‏ ‏الْعَبَّاسِ ‏ ‏قُلْتُ لَا قَالَ هُوَ ‏ ‏عَلِيٌّ

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (இறுதி நாட்களில்) நோய்வாய்ப்பட்டிருந்தது பற்றி எனக்கு நீங்கள் அறிவிப்பீர்களா?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், “ஆம் (அறிவிக்கிறேன்)” என்று சொல்லிவிட்டு,

“நபி (ஸல்) அவர்களுக்கு நோய் கடுமையானது. அந்த (இஷா) நேரத்தில், ‘மக்கள் தொழுதுவிட்டனரா?’ என்று நபியவர்கள் கேட்டார்கள். நாங்கள், ‘இல்லை, அல்லாஹ்வின் தூதரே! மக்கள் உங்களுக்காகக் காத்திருகின்றனர்’ என்று கூறினோம். அப்போது, ‘நீர்த் தொட்டியில் எனக்காக நீரிடுங்கள்’ என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் (அதில்) குளித்துவிட்டு எழ முயன்றார்கள். ஆனால், (எழ முடியாமல்) மயக்கமுற்று விட்டார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது ‘மக்கள் தொழுதுவிட்டனரா?’ என்று கேட்டார்கள். நாங்கள், ‘இல்லை; அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர், அல்லாஹ்வின் தூதரே!’ என்று சொன்னோம். அப்போது, ‘நீர்த் தொட்டியில் எனக்காக நீரிடுங்கள்’ என்றார்கள். அவ்வாறே நாங்கள் செய்தோம். அவர்கள் குளித்துவிட்டு எழ முற்பட்டார்கள். ஆனால், (எழ முடியாமல் மீண்டும்) மயக்கமுற்று விட்டார்கள். பின்னர் மயக்கம் தெளிந்தபோது, ‘மக்கள் தொழுதுவிட்டனரா?’ என்று (மீண்டும்) கேட்டார்கள். நாங்கள், ‘இல்லை; அவர்கள் உங்களுக்காகக் காத்திருக்கின்றனர், அல்லாஹ்வின் தூதரே!’ என்றோம்.

அப்போது மக்கள் இஷாத் தொழுகைக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர்பார்த்தபடி பள்ளிவாசலில் காத்திருந்தனர்.

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு கூறினார்கள். அந்தத் தூதுவர் அபூபக்ரு (ரலி) அவர்களிடம் சென்று, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு உங்களைப் பணிக்கிறார்கள்” என்று சொன்னார். அதற்கு இளகிய மனமுடையவரான அபூபக்ரு (ரலி) (உமர் ரலி இடம்) “உமரே! நீங்கள் மக்களுக்குத் தொழுகை நடத்துங்கள்” என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி), “இதற்கு நீங்கள்தாம் (என்னைவிடத்) தகுதியுடையவர்” என்று கூறிவிட்டார்கள். ஆகவே அபூபக்ரு (ரலி) (நபியவர்கள் நோயுற்றிருந்த) அந்த நாட்களில் (மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழுகை நடத்தினார்கள்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது நோய் சற்றுக் குறைந்திருப்பதை அறிந்து, இரண்டு பேருக்கிடையே (கைத்தாங்கலாக) லுஹ்ருத் தொழுகைக்காகப் புறப்பட்டு வந்தார்கள். அவ்விருவரில் அப்பாஸ் (ரலி) ஒருவராவார்கள். அப்போது அபூபக்ரு (ரலி) மக்களுக்கு (இமாமாக நின்று) தொழுகை நடத்திக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்டதும் அபூபக்ரு (ரலி) பின்வாங்க முயன்றார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பின்வாங்க வேண்டாமென அபூபக்ரு (ரலி) அவர்களுக்கு சைகை செய்தார்கள். (தம்மைத் தாங்கி வந்த) இருவரிடமும், ‘என்னை அபூபக்ரு அவர்களுக்குப் பக்கத்தில் உட்கார வையுங்கள்’ என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அபூபக்ரு (ரலி) அவர்களுக்குப் பக்கவாட்டில் அமர்த்தினர். அப்போது நபி (ஸல்) அமர்ந்து தொழ, அவர்களைப் பின்பற்றி அபூபக்ரு (ரலி) நின்று தொழுதார்கள். மக்கள் அபூபக்ரைப் பின்பற்றித் தொழலானார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

குறிப்பு :

“நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று, ‘அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோய்வாய்ப்பட்டிருந்தது குறித்து ஆயிஷா (ரலி) என்னிடம் கூறியதை நான் உங்களிடம் எடுத்துரைக்கட்டுமா?’ என்று கேட்டேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), ‘ஆகட்டும் (சொல்லுங்கள்)’ என்றார்கள். ஆகவே, நான் ஆயிஷா (ரலி) அறிவித்த ஹதீஸை அவர்களிடம் எடுத்துரைத்தேன். அதில் எதையும் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) மறுக்கவில்லை. ஆயினும், ‘அப்பாஸ் (ரலி) அவர்களுடனிருந்த அந்த மற்றொருவரின் பெயரை ஆயிஷா (ரலி) குறிப்பிட்டார்களா?’ என்று கேட்டார்கள். நான், ‘இல்லை’ என்றேன். அதற்கு அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), ‘அவர்தாம் அலீ (ரலி)’ என்று கூறினார்கள்” என்பதாக உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறினார்கள்.