அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 636

حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَحَسَنٌ الْحُلْوَانِيُّ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏قَالَ ‏ ‏عَبْدٌ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏وَقَالَ الْآخَرَانِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَعْقُوبُ وَهُوَ ابْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏أَبِي ‏ ‏عَنْ ‏ ‏صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ

أَنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي لَهُمْ فِي وَجَعِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏الَّذِي تُوُفِّيَ فِيهِ حَتَّى إِذَا كَانَ يَوْمُ ‏ ‏الِاثْنَيْنِ وَهُمْ صُفُوفٌ فِي الصَّلَاةِ كَشَفَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سِتْرَ الْحُجْرَةِ فَنَظَرَ إِلَيْنَا وَهُوَ قَائِمٌ كَأَنَّ وَجْهَهُ وَرَقَةُ مُصْحَفٍ ثُمَّ تَبَسَّمَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ضَاحِكًا قَالَ فَبُهِتْنَا وَنَحْنُ فِي الصَّلَاةِ مِنْ فَرَحٍ بِخُرُوجِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَنَكَصَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏عَلَى عَقِبَيْهِ لِيَصِلَ الصَّفَّ وَظَنَّ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏خَارِجٌ لِلصَّلَاةِ فَأَشَارَ إِلَيْهِمْ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏بِيَدِهِ أَنْ أَتِمُّوا صَلَاتَكُمْ قَالَ ثُمَّ دَخَلَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَرْخَى السِّتْرَ قَالَ فَتُوُفِّيَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِنْ يَوْمِهِ ذَلِكَ

و حَدَّثَنِيهِ ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏ ‏قَالَ آخِرُ نَظْرَةٍ نَظَرْتُهَا إِلَى رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَشَفَ السِّتَارَةَ يَوْمَ ‏ ‏الِاثْنَيْنِ بِهَذِهِ الْقِصَّةِ ‏ ‏وَحَدِيثُ ‏ ‏صَالِحٍ ‏ ‏أَتَمُّ وَأَشْبَعُ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏وَعَبْدُ بْنُ حُمَيْدٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏مَعْمَرٌ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏أَنَسُ بْنُ مَالِكٍ ‏ ‏قَالَ ‏ ‏لَمَّا كَانَ يَوْمُ ‏ ‏الِاثْنَيْنِ بِنَحْوِ حَدِيثِهِمَا

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறப்பதற்கு முன் அவர்களைப் பீடித்த நோயின்போது அபூபக்ரு (ரலி) மக்களுக்குத் தொழுவித்து வந்தார்கள். இவ்வாறிருக்க, (ஒரு) திங்கள் கிழமையன்று மக்கள் தொழுகை வரிசையில் நின்றுகொண்டிருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (ஆயிஷா (ரலி) அவர்களது) அறையின் திரைச் சீலையை விலக்கி நின்றுகொண்டு எங்களைப் பார்த்தார்கள். அப்போது அவர்களுடைய முகம் இறைமறையின் ஏடுபோன்று (தெளிவாக) இருந்தது. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களைப் பார்த்து (மகிழ்ச்சியோடு) புன்னகைத்தார்கள். நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (நோயிலிருந்து விடுபட்டு) வெளியே வந்ததைக் கண்டு மகிழ்ச்சியால் தொழுகையிலிருக்கும்போதே (இன்ப) அதிர்ச்சியடைந்தோம்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகைக்காகப் புறப்பட்டு வரப்போகிறார்கள் என்று நினைத்து, அபூபக்ரு (ரலி), பின்வரிசையி(ன் நடுவி)ல் சேர்ந்து கொள்வதற்காக (இமாம் நிலையிலிருந்து) பின்வாங்கினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) மக்களை நோக்கி ‘உங்கள் தொழுகையை நிறைவுசெய்யுங்கள்’ என்பதுபோல் தமது கையால் சைகை செய்தார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (அறைக்குள்) நுழைந்து திரைச் சீலையைத் தொங்கவிட்டார்கள். அன்றுதான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறந்தார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

குறிப்பு :

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களை அறிவிப்பாளராகக் கொண்டதும் இபுனு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) வழியாக ஸாலிஹ் (ரஹ்) வழி வந்ததுமான மேற்காணும் அறிவிப்பு நிறைவானதாகும்.

ஸுஃப்யான் பின் உஐனா (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) திரைச் சீலையை விலக்கிய அந்தத் திங்கள் கிழமைதான் நான் அவர்களை (உயிருடன்) இறுதியாகப் பார்த்த நாளாகும்” என்று அனஸ் (ரலி) கூறியது இடம்பெற்றுள்ளது.

அன்னை ஆயிஷா (ரல்) அவர்களின் இல்லத்தை ஒட்டியே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பள்ளியான மஸ்ஜிதுந்நபவீ அமைந்திருந்தது.