அத்தியாயம்: 4, பாடம்: 21, ஹதீஸ் எண்: 638

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُسَيْنُ بْنُ عَلِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏زَائِدَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بُرْدَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي مُوسَى ‏ ‏قَالَ

مَرِضَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَاشْتَدَّ مَرَضُهُ فَقَالَ ‏ ‏مُرُوا ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏يَا رَسُولَ اللَّهِ إِنَّ ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏رَجُلٌ رَقِيقٌ مَتَى يَقُمْ مَقَامَكَ لَا يَسْتَطِعْ أَنْ يُصَلِّيَ بِالنَّاسِ فَقَالَ مُرِي ‏ ‏أَبَا بَكْرٍ ‏ ‏فَلْيُصَلِّ بِالنَّاسِ فَإِنَّكُنَّ ‏ ‏صَوَاحِبُ ‏ ‏يُوسُفَ ‏ ‏قَالَ فَصَلَّى بِهِمْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏حَيَاةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நோய்வாய்ப்பட்டு, அவர்களது நோய் கடுமையானபோது, “மக்களுக்குத் தொழுகை நடத்துமாறு அபூபக்ரு அவர்களிடம் கூறுங்கள்!” என்றார்கள். அப்போது ஆயிஷா (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! (என் தந்தை) அபூபக்ரு அவர்கள் இளகிய மனமுடையவர்; உங்களுடைய இடத்தில் நின்று, அவரால் மக்களுக்குத் தொழுவிக்க முடியாது” என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “அபூபக்ரிடம் சொல்லுங்கள்! அவர் மக்களுக்குத் தொழுவிக்கட்டும்!” என்று கூறிவிட்டு, “நீங்களெல்லாம் (நபி) யூசுஃப் (அலை) அவர்களுடைய (வரலாற்றுத்) தோழியரைப் போன்ற(விவரமில்லாத)வர்கள்தாம்” என்று கூறினார்கள். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உயிருடன் இருக்கும்போதே அபூபக்ரு (ரலி) (இமாமாக நின்று) மக்களுக்குத் தொழுகை நடத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அபூமூஸா அல்அஷ்அரீ (ரலி)