அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 676

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏أَنَّهَا سَمِعَتْ ‏ ‏عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏تَقُولُ

لَوْ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏رَأَى مَا أَحْدَثَ النِّسَاءُ لَمَنَعَهُنَّ الْمَسْجِدَ كَمَا مُنِعَتْ نِسَاءُ ‏ ‏بَنِي إِسْرَائِيلَ ‏ ‏قَالَ فَقُلْتُ ‏ ‏لِعَمْرَةَ ‏ ‏أَنِسَاءُ ‏ ‏بَنِي إِسْرَائِيلَ ‏ ‏مُنِعْنَ الْمَسْجِدَ قَالَتْ نَعَمْ

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْوَهَّابِ يَعْنِي الثَّقَفِيَّ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو خَالِدٍ الْأَحْمَرُ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ سَعِيدٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

பெண்கள் உருவாக்கியுள்ள புதுமையான(உடல் அலங்கார உத்திகள் போன்ற)வற்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பார்த்திருப்பார்களேயானால் பனூஇஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டதைப் போன்று இவர்களையும் தடுத்திருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு:

“நான் (இந்த ஹதீஸை எனக்கு அறிவித்த) அம்ரா பின்த் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களிடம், ‘பனூஇரஸ்ராயீல் சமுதாயப் பெண்கள் பள்ளிவாசலுக்குச் செல்லக் கூடாதெனத் தடுக்கப்பட்டவர்களா?’ என்று கேட்டேன். அதற்கு அம்ரா (ரஹ்)அவர்கள் ‘ஆம்’ என்று பதிலளித்தார்கள்” என்று யஹ்யா பின் ஸயீத் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 675

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي فَرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏يَزِيدَ بْنِ خُصَيْفَةَ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ

“நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 674

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ الْقَطَّانُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدِ بْنِ عَجْلَانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏بُكَيْرُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ الْأَشَجِّ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْنَبَ ‏ ‏امْرَأَةِ ‏ ‏عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَتْ

قَالَ لَنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا

“நீங்கள் (கூட்டுத் தொழுகையில் கலந்து கொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும்போது நறுமணம் பூசிக் கொள்ள வேண்டாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) எங்களிடம் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் பின்த் முஆவியா அஸ்ஸகஃபிய்யா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 673

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏مَخْرَمَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْنَبَ الثَّقَفِيَّةَ

كَانَتْ تُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْعِشَاءَ فَلَا تَطَيَّبْ تِلْكَ اللَّيْلَةَ

“நீங்கள் இஷாத் தொழுகையில் கலந்துகொள்ள பள்ளிவாசலுக்குச் செல்லும்போது அந்த இரவில் நறுமணம் பூசிச் செல்லாதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பெண்களுக்கு அறிவுறுத்தினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் பின்த் முஆவியா அஸ்ஸகஃபிய்யா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 672

حَدَّثَنَا ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ الْمُقْرِئُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي أَيُّوبَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏كَعْبُ بْنُ عَلْقَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏بِلَالِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَمْنَعُوا النِّسَاءَ حُظُوظَهُنَّ مِنْ الْمَسَاجِدِ إِذَا اسْتَأْذَنُوكُمْ

فَقَالَ ‏ ‏بِلَالٌ ‏ ‏وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ فَقَالَ لَهُ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ أَنْتَ لَنَمْنَعُهُنَّ

“பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதற்காக உங்களிடம் அனுமதி கேட்டால் பள்ளிவாசலில் அவர்களுக்குரிய உரிமையைத் தடுக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு :

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய புதல்வர் பிலால் (ரஹ்), “அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம்” என்று கூறினார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னார்கள் என்று நான் கூறுகிறேன். ஆனால், நீயோ அவர்களைத் தடுப்போம் என்று கூறுகிறாயே!” என்று கண்டித்தார்கள்.

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 671

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏وَابْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏شَبَابَةُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏وَرْقَاءُ ‏ ‏عَنْ ‏ ‏عَمْرٍو ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ائْذَنُوا لِلنِّسَاءِ بِاللَّيْلِ إِلَى الْمَسَاجِدِ

فَقَالَ ابْنٌ لَهُ يُقَالُ لَهُ ‏ ‏وَاقِدٌ ‏ ‏إِذَنْ يَتَّخِذْنَهُ ‏ ‏دَغَلًا ‏ ‏قَالَ فَضَرَبَ فِي صَدْرِهِ وَقَالَ أُحَدِّثُكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ لَا

“பெண்கள் இரவு நேரத்தில் பள்ளிவாசல்களுக்குச் செல்ல நீங்கள் அனுமதியளியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தெரிவித்தார்கள்.
‘வாகித்’ என அழைக்கப்பட்ட, அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய புதல்வர், “அவ்வாறு அனுமதி கொடுத்தால் அவர்கள் அதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள்” என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தம் புதல்வருடைய நெஞ்சில் அடித்து, “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) சொன்னதை உனக்கு அறிவிக்கிறேன். ஆனால் நீ முடியாது என்று மறுக்கிறாய்?” என்று (கடிந்து) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 670

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏مُجَاهِدٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَا تَمْنَعُوا النِّسَاءَ مِنْ الْخُرُوجِ إِلَى الْمَسَاجِدِ بِاللَّيْلِ

فَقَالَ ‏ ‏ابْنٌ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏ ‏لَا نَدَعُهُنَّ يَخْرُجْنَ فَيَتَّخِذْنَهُ ‏ ‏دَغَلًا ‏ ‏قَالَ فَزَبَرَهُ ‏ ‏ابْنُ عُمَرَ ‏ ‏وَقَالَ أَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ لَا نَدَعُهُنَّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَلِيُّ بْنُ خَشْرَمٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عِيسَى بْنُ يُونُسَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

“பெண்கள் இரவில் பள்ளிவாசல்களுக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) தெரிவித்தார்கள். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய புதல்வர்களில் ஒருவர், “பெண்களை வெளியே செல்ல நாங்கள் விடமாட்டோம். (பெண்கள் வெளியே செல்ல) இதையே ஒரு சாக்காக ஆக்கிவிடுவார்கள்” என்று கூறினார். அப்போது அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), “நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள் என்று கூறுகிறேன். ஆனால் நீ அவர்களை நாங்கள் விடமாட்டோம் என்று கூறுகிறாயா?” என்று கூறி தம் புதல்வரைக் கண்டித்தார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக முஜாஹித் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 669

حَدَّثَنَا ‏ ‏ابْنُ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَنْظَلَةُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏سَالِمًا ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُا

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا اسْتَأْذَنَكُمْ نِسَاؤُكُمْ إِلَى الْمَسَاجِدِ فَأْذَنُوا لَهُنَّ

“உங்கள் துணைவியர் பள்ளிவாசல்களுக்குச் செல்ல உங்களிடம் அனுமதி கோரினால் அவர்களுக்கு அனுமதி அளியுங்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை நான் செவியுற்றிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 668

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏وَابْنُ إِدْرِيسَ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ

“அல்லாஹ்வின் பெண் அடியார்கள் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 30, ஹதீஸ் எண்: 667

حَدَّثَنِي ‏ ‏حَرْمَلَةُ بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏يُونُسُ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ شِهَابٍ ‏ ‏قَالَ أَخْبَرَنِي ‏ ‏سَالِمُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ عُمَرَ ‏ ‏قَالَ

سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏لَا تَمْنَعُوا نِسَاءَكُمْ الْمَسَاجِدَ إِذَا اسْتَأْذَنَّكُمْ إِلَيْهَا

قَالَ فَقَالَ ‏ ‏بِلَالُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ قَالَ فَأَقْبَلَ عَلَيْهِ ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏فَسَبَّهُ سَبًّا سَيِّئًا مَا سَمِعْتُهُ سَبَّهُ مِثْلَهُ قَطُّ وَقَالَ أُخْبِرُكَ عَنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَتَقُولُ وَاللَّهِ لَنَمْنَعُهُنَّ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “உங்கள் மனைவியர் உங்களிடம் (தொழுவதற்காகப்) பள்ளிவாசல்களுக்குச் செல்ல அனுமதி கோரினால் அவர்களை நீங்கள் தடுக்காதீர்கள்” என்று கூறுவதை நான் கேட்டுள்ளேன் என்று (என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) வழியாக அவர் மகன் ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்)

குறிப்பு :

“இந்த ஹதீஸை என் தந்தை அறிவித்தபோது (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ் (ரஹ்), ‘அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் அவர்களைத் தடுப்போம்’ என்று கூறினார். உடனே (என் என் தந்தை) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) (என் சகோதரர்) பிலால் பின் அப்தில்லாஹ்வை நோக்கி மிகக் கடுமையாக ஏசினார்கன். அதைப் போன்று அவர்கள் ஏசியதை நான் கேட்டதே இல்லை. பிறகு, ‘நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறியதை உனக்கு அறிவிக்கிறேன். ஆனால், நீயோ அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களை நாங்கள் தடுப்போம் என்று கூறுகிறாயே?’ என்றார்கள்” என்பதாக ஸாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) கூறியதும் பதிவாகியுள்ளது.