அத்தியாயம்: 4, பாடம்: 31, ஹதீஸ் எண்: 678

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يَحْيَى بْنُ زَكَرِيَّاءَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ ‏‏وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا ‏ ‏قَالَتْ أُنْزِلَ هَذَا فِي الدُّعَاءِ

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ يَعْنِي ابْنَ زَيْدٍ ‏ ‏ح ‏ ‏قَالَ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏وَوَكِيعٌ ‏ ‏ح ‏ ‏قَالَ ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏مِثْلَهُ

(நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம்; மிகவும் தாழ்த்தவும் வேண்டாம் எனும் (17:110ஆவது) இறைவசனம், பிரார்த்தனை (துஆ) தொடர்பாக அருளப்பெற்றதாகும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா(ரலி) வழியாக உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 31, ஹதீஸ் எண்: 677

حَدَّثَنَا ‏ ‏أَبُو جَعْفَرٍ مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الصَّبَّاحِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدِ بْنِ جُبَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَبَّاسٍ

فِي قَوْلِهِ عَزَّ وَجَلَّ ‏‏وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ وَلَا تُخَافِتْ بِهَا ‏‏قَالَ نَزَلَتْ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُتَوَارٍ ‏ ‏بِمَكَّةَ ‏ ‏فَكَانَ إِذَا صَلَّى بِأَصْحَابِهِ رَفَعَ صَوْتَهُ بِالْقُرْآنِ فَإِذَا سَمِعَ ذَلِكَ الْمُشْرِكُونَ سَبُّوا الْقُرْآنَ وَمَنْ أَنْزَلَهُ وَمَنْ جَاءَ بِهِ فَقَالَ اللَّهُ تَعَالَى لِنَبِيِّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏‏وَلَا تَجْهَرْ بِصَلَاتِكَ ‏ ‏فَيَسْمَعَ الْمُشْرِكُونَ قِرَاءَتَكَ ‏ ‏وَلَا تُخَافِتْ بِهَا ‏ ‏عَنْ أَصْحَابِكَ أَسْمِعْهُمْ الْقُرْآنَ وَلَا تَجْهَرْ ذَلِكَ الْجَهْرَ ‏ ‏وَابْتَغِ بَيْنَ ذَلِكَ سَبِيلًا ‏ ‏يَقُولُ بَيْنَ الْجَهْرِ ‏ ‏وَالْمُخَافَتَةِ

“(நபியே!) உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தவும் வேண்டாம். மிகவும் தாழ்த்தவும் வேண்டாம்” எனும் (17:110ஆவது) இறைவசன விளக்கம் யாதெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இஸ்லாத்தின் ஆரம்பக் காலத்தில் எதிரிகளின் தொல்லைகளைக் கருதி) மக்காவில் அச்ச உணர்வோடு இருந்து வந்தார்கள். தம் தோழர்களுடன் தொழும் வேளைகளில் உரத்துக் குர்ஆனை ஓதிவந்தார்கள். அதை இணைவைப்பாளர்கள் கேட்டுவிட்டால், குர்ஆனையும் அதை அருளிய(இறை)வனையும் அதை (மக்கள் முன்) கொண்டுவந்த(நபிய)வர்களையும் அவர்கள் ஏசுவார்கள். ஆகவே, உயர்ந்தோனாகிய அல்லாஹ் தன் நபியிடம் “நீங்கள் உங்கள் தொழுகையில் குரலை மிகவும் உயர்த்தாதீர்கள். அவ்வாறு செய்தால், நீங்கள் ஓதுவதை இணைவைப்பாளர்கள் செவியுற்று(த் தொல்லைதரத் தொடங்கி) விடுவார்கள். (அன்றியும் உடன் தொழுகின்ற) உங்கள் தோழர்கள் செவியுற முடியாதவாறு (குரலை முழுமையாக) மறைத்து விடாதீர்கள்; அவர்கள் செவியுறுமாறு ஓதுங்கள். மிக உரத்து ஓதாதீர்கள். இவ்விரண்டுக்குமிடையே மிதமான போக்கைக் கைகொள்ளுங்கள்” என்று கூறினான்.

அறிவிப்பாளர் : இபுனு அப்பாஸ் (ரலி)