அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 692

و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ ‏ ‏عَنْ ‏ ‏رَبِيعَةَ ‏ ‏قَالَ حَدَّثَنِي ‏ ‏قَزْعَةُ ‏ ‏قَالَ

أَتَيْتُ ‏ ‏أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ ‏ ‏وَهُوَ ‏ ‏مَكْثُورٌ عَلَيْهِ ‏ ‏فَلَمَّا تَفَرَّقَ النَّاسُ عَنْهُ قُلْتُ إِنِّي لَا أَسْأَلُكَ عَمَّا يَسْأَلُكَ هَؤُلَاءِ عَنْهُ قُلْتُ أَسْأَلُكَ عَنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ‏ ‏مَا لَكَ فِي ذَاكَ مِنْ خَيْرٍ فَأَعَادَهَا عَلَيْهِ فَقَالَ كَانَتْ صَلَاةُ الظُّهْرِ تُقَامُ فَيَنْطَلِقُ أَحَدُنَا إِلَى ‏ ‏الْبَقِيعِ ‏ ‏فَيَقْضِي حَاجَتَهُ ثُمَّ يَأْتِي أَهْلَهُ فَيَتَوَضَّأُ ثُمَّ يَرْجِعُ إِلَى الْمَسْجِدِ وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الرَّكْعَةِ الْأُولَى

நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களிடம் (ஒருமுறை) சென்றபோது அவர்களைச் சுற்றி நிறையப் பேர் குழுமியிருந்தனர். மக்கள் அனைவரும் கலைந்து சென்றதும் நான், “அவர்கள் உங்களிடம் கேட்டதையெல்லாம் நான் கேட்கமாட்டேன். நான் உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தொழுகையைப் பற்றிக் கேட்கிறேன்” என்று சொன்னேன். அதற்கு அபூஸயீத் (ரலி) அவர்கள், “அதைக் கேட்டு உங்களுக்கு ஆகப் போவதென்ன?” என்று கூறினார்கள். நான் மீண்டும் அதே கேள்வியைக் கேட்டேன். அப்போது அபூஸயீத் (ரலி) அவர்கள் “லுஹ்ருத் தொழுகைக்காக (நபியவர்களது காலத்தில்) இகாமத் சொல்லப்படும். அப்போது எங்களில் ஒருவர் (ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள) பகீஉல் ஃகர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றுவார். பிறகு தமது இல்லத்திற்குச் சென்று ஒளுச் செய்துவிட்டுப் பள்ளிவாசலுக்குத் திரும்பிவருவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்திலேயே இருந்துகொண்டிருப்பார்கள்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) வழியாக கஸ்ஆ பின் யஹ்யா (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 691

حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ بْنُ رُشَيْدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْوَلِيدُ يَعْنِي ابْنَ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ وَهُوَ ابْنُ عَبْدِ العَزِيزِ ‏ ‏عَنْ ‏ ‏عَطِيَّةَ بْنِ قَيْسٍ ‏ ‏عَنْ ‏ ‏قَزْعَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ

لَقَدْ كَانَتْ صَلَاةُ الظُّهْرِ تُقَامُ فَيَذْهَبُ الذَّاهِبُ إِلَى ‏ ‏الْبَقِيعِ ‏ ‏فَيَقْضِي حَاجَتَهُ ثُمَّ يَتَوَضَّأُ ثُمَّ يَأْتِي وَرَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الرَّكْعَةِ الْأُولَى مِمَّا يُطَوِّلُهَا

லுஹ்ருத் தொழுகைக்காக (நபியவர்களது காலத்தில்) இகாமத் சொல்லப்படும். அப்போது ஒருவர் (ஊருக்கு ஒதுக்குப் புறத்திலுள்ள) பகீஉல் ஃகர்கத் பகுதிக்குச் சென்று இயற்கைக் கடனை நிறைவேற்றி, ஒளுச் செய்துவிட்டுத் திரும்பிவந்து விடுவார். அப்போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதல் ரக்அத்திலேயே நீட்டித்துக் கொண்டிருப்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 690

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي عَوْنٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏جَابِرَ بْنَ سَمُرَةَ ‏ ‏قَالَ

قَالَ ‏ ‏عُمَرُ ‏ ‏لِسَعْدٍ ‏ ‏قَدْ شَكَوْكَ فِي كُلِّ شَيْءٍ حَتَّى فِي الصَّلَاةِ قَالَ ‏ ‏أَمَّا أَنَا فَأَمُدُّ فِي الْأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ وَمَا ‏ ‏آلُو ‏ ‏مَا اقْتَدَيْتُ بِهِ مِنْ صَلَاةِ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ ‏ ‏أَوْ ذَاكَ ظَنِّي بِكَ

و حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏مِسْعَرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ ‏ ‏وَأَبِي عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِهِمْ وَزَادَ فَقَالَ تُعَلِّمُنِي الْأَعْرَابُ بِالصَّلَاةِ

உமர் (ரலி) அவர்கள் ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், “நீங்கள் தொழுகை நடத்துவது உட்பட எல்லா விஷயங்களிலும் உங்களைப் பற்றி (கூஃபா நகர) மக்கள் (என்னிடம்) முறையிட்டுள்ளனர் (உங்கள் விளக்கம் என்ன?)” என்று கேட்டார்கள். அதற்கு ஸஅத் (ரலி) அவர்கள், “நான் (தொழுகையின்) முதல் இரண்டு ரக்அத்களில் நீளமாக ஓதுகிறேன். பின் இரண்டு ரக்அத்களில் சுருக்கமாக ஓதுகிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவித்துக் காட்டிய முறையைப் பின்பற்றுவதில் எந்தக் குறையும் நான் செய்யவில்லை” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “உங்களைப் பற்றி (நமது) எண்ணமும்” அல்லது “உங்களைப் பற்றி எனது எண்ணமும் அதுவே” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

குறிப்பு :

மிஸ்அர் (ரஹ்) வழி அறிவிப்பில், “நாட்டுப் புறத்து மக்கள் எனக்குத் தொழுகையைக் கற்றுத்தருகிறார்களா?” என்று (ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கேட்டதாக) அதிகப்படியாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 689

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏عَنْ ‏ ‏جَابِرِ بْنِ سَمُرَةَ

أَنَّ أَهْلَ ‏ ‏الْكُوفَةِ ‏ ‏شَكَوْا ‏ ‏سَعْدًا ‏ ‏إِلَى ‏ ‏عُمَرَ بْنِ الْخَطَّابِ ‏ ‏فَذَكَرُوا مِنْ صَلَاتِهِ فَأَرْسَلَ إِلَيْهِ ‏ ‏عُمَرُ ‏ ‏فَقَدِمَ عَلَيْهِ فَذَكَرَ لَهُ مَا عَابُوهُ بِهِ مِنْ أَمْرِ الصَّلَاةِ فَقَالَ ‏ ‏إِنِّي لَأُصَلِّي بِهِمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مَا ‏ ‏أَخْرِمُ ‏ ‏عَنْهَا إِنِّي لَأَرْكُدُ بِهِمْ فِي الْأُولَيَيْنِ وَأَحْذِفُ فِي الْأُخْرَيَيْنِ فَقَالَ ذَاكَ الظَّنُّ بِكَ ‏ ‏أَبَا إِسْحَقَ

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏جَرِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الْمَلِكِ بْنِ عُمَيْرٍ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ

கூஃபாவாசிகள் (தம் ஆளுநரான) ஸஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களைப் பற்றி (கலீஃபா) உமர் இபினில் கத்தாப் (ரலி) அவர்களிடம் புகார் கூறினர். ஸஅத் அவர்கள் தொழுவிப்பது குறித்து அவர்கள் (குறை) கூறினர். இதையொட்டி உமர் (ரலி) அவர்கள் ஸஅத் (ரலி) அவர்களிடம் ஆளனுப்பித் தம்மிடம் வருமாறு கூறினார்கள். அவ்வாறே ஸஅத் (ரலி) அவர்களும் வந்தார்கள். அப்போது ஸஅத் (ரலி) அவர்களிடம் உமர் (ரலி) அவர்கள் தொழுகை தொடர்பாக மக்கள் கூறிய குற்றச்சாட்டை எடுத்துரைத்தார்கள். அதற்கு ஸஅத் (ரலி) அவர்கள், “நிச்சயமாக நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே அவர்களுக்குத் தொழுவித்து வருகிறேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்துவிடவில்லை. நான் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் நீளமாக ஓதியும் பிந்திய இரு ரக்அத்களில் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்” என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், “உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே, அபூஇஸ்ஹாக்!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஜாபிர் பின் ஸமுரா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 688

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ أَبِي بِشْرٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الصِّدِّيقِ النَّاجِيِّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ فِي صَلَاةِ الظُّهْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ قَدْرَ ثَلَاثِينَ آيَةً وَفِي الْأُخْرَيَيْنِ قَدْرَ خَمْسَ عَشْرَةَ آيَةً ‏ ‏أَوْ قَالَ نِصْفَ ذَلِكَ ‏ ‏وَفِي الْعَصْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ فِي كُلِّ رَكْعَةٍ قَدْرَ قِرَاءَةِ خَمْسَ عَشْرَةَ آيَةً وَفِي الْأُخْرَيَيْنِ قَدْرَ نِصْفِ ذَلِكَ

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ருத் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் முப்பது வசனங்கள் அளவும், அதன் பிந்திய இரு ரக்அத்களில் அதில்பாதி/பதினைந்து வசனங்கள் அளவும் ஓதுவார்கள். அஸ்ருத் தொழுகையின் முந்திய இரு ரக்அத்களில் பதினைந்து வசனங்கள் அளவும், அதன் பிந்திய இரு ரக்அத்களில் அதில் பாதியளவும் ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 687

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏هُشَيْمٍ ‏ ‏قَالَ ‏ ‏يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هُشَيْمٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْوَلِيدِ بْنِ مُسْلِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي الصِّدِّيقِ

عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏ ‏قَالَ ‏ ‏كُنَّا ‏ ‏نَحْزِرُ ‏ ‏قِيَامَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الظُّهْرِ وَالْعَصْرِ ‏ ‏فَحَزَرْنَا ‏ ‏قِيَامَهُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ الظُّهْرِ قَدْرَ قِرَاءَةِ ‏ ‏الم تَنْزِيلُ السَّجْدَةِ ‏ ‏وَحَزَرْنَا ‏ ‏قِيَامَهُ فِي الْأُخْرَيَيْنِ قَدْرَ النِّصْفِ مِنْ ذَلِكَ ‏ ‏وَحَزَرْنَا ‏ ‏قِيَامَهُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ الْعَصْرِ عَلَى قَدْرِ قِيَامِهِ فِي الْأُخْرَيَيْنِ مِنْ الظُّهْرِ وَفِي الْأُخْرَيَيْنِ مِنْ الْعَصْرِ عَلَى النِّصْفِ مِنْ ذَلِكَ

وَلَمْ يَذْكُرْ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏فِي رِوَايَتِهِ ‏ ‏الم تَنْزِيلُ ‏ ‏وَقَالَ قَدْرَ ثَلَاثِينَ آيَةً

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளில் எவ்வளவு நேரம் நிலையில் நின்றார்கள் என்பதை நாங்கள் மதிப்பிட்டுவந்தோம்.

லுஹ்ருத் தொழுகையின் முன்னிரு ரக்அத்களில் (முப்பது வசனங்களைக் கொண்ட) அலிஃப், லாம், மீம் தன்ஸீல் அஸ்ஸஜ்தா (எனும் 32ஆவது) அத்தியாயம் ஓதும் அளவுக்கும், அதன் பின்னிரு ரக்அத்களில் அதில் பாதியளவுக்கும் நிற்பார்கள். அஸ்ருத் தொழுகையின் முன்னிரு ரக்அத்களில் லுஹ்ருத் தொழுகையின் பின்னிரு ரக்அத்கள் அளவுக்கும், அதன் பின்னிரு ரக்அத்களில் அதில் பாதியளவுக்கும் நிற்பார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)

குறிப்பு :

அபூபக்ர் பின் அபீஷைபா (ரஹ்) வழி அறிவிப்பில் “அலிஃப், லாம், மீம் தன்ஸீல்” என்பதற்குப் பதிலாக “முப்பது வசனங்கள் ஓதும் அளவுக்கு (நிற்பார்கள்)” என்று இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 686

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏هَمَّامٌ ‏ ‏وَأَبَانُ بْنُ يَزِيدَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ مِنْ الظُّهْرِ وَالْعَصْرِ ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ ‏ ‏وَسُورَةٍ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا وَيَقْرَأُ فِي الرَّكْعَتَيْنِ الْأُخْرَيَيْنِ ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ

நபி (ஸல்) அவர்கள் லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல் ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தையும் மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை நாங்கள் செவியுறும்படி ஓதுவார்கள். பிந்திய இரு ரக்அத்களிலும் அல்ஃபாத்திஹா அத்தியாயத்தை (மட்டும்) ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 34, ஹதீஸ் எண்: 685

و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏الْحَجَّاجِ يَعْنِي الصَّوَّافَ ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى وَهُوَ ابْنُ أَبِي كَثِيرٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ أَبِي قَتَادَةَ ‏ ‏وَأَبِي سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قَتَادَةَ ‏ ‏قَالَ

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي بِنَا فَيَقْرَأُ فِي الظُّهْرِ وَالْعَصْرِ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ ‏ ‏بِفَاتِحَةِ الْكِتَابِ ‏ ‏وَسُورَتَيْنِ وَيُسْمِعُنَا الْآيَةَ أَحْيَانًا وَكَانَ يُطَوِّلُ الرَّكْعَةَ الْأُولَى مِنْ الظُّهْرِ وَيُقَصِّرُ الثَّانِيَةَ وَكَذَلِكَ فِي الصُّبْحِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்குத் தொழுகை நடத்தும்போது லுஹ்ரு, அஸ்ருத் தொழுகைகளின் முதலிரண்டு ரக்அத்களில் அல்ஃபாத்திஹா (அல்ஹம்து) அத்தியாயத்தையும் (அதனுடன் ஒவ்வொரு ரக்அத்திலும் ஓர் அத்தியாயம் என) இரு அத்தியாயங்களையும் ஓதுவார்கள். சில நேரங்களில் சில வசனங்களை நாங்கள் செவியுறும்படி ஓதுவார்கள். லுஹ்ருத் தொழுகையின் முதல் ரக்அத்தில் நீளமாகவும் இரண்டாவது ரக்அத்தில் (அதைவிடக்) குறைவாகவும் ஓதுவார்கள். ஸுப்ஹுத் தொழுகையிலும் இவ்வாறே (கூட்டி-குறைத்து) ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : அபூகத்தாதா (ரலி)