அத்தியாயம்: 4, பாடம்: 39, ஹதீஸ் எண்: 729

و حَدَّثَنِي ‏ ‏أَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ الْبَاهِلِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى يَعْنِي ابْنَ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏الْبَرَاءُ ‏ ‏وَهُوَ غَيْرُ كَذُوبٍ ‏ ‏قَالَ ‏

‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ لَمْ يَحْنِ أَحَدٌ مِنَّا ظَهْرَهُ حَتَّى يَقَعَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏سَاجِدًا ثُمَّ نَقَعُ سُجُودًا بَعْدَهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறி, அவர்கள் ஸஜ்தாச் செய்யாதவரை எங்களில் எவரும் எங்கள் முதுகை (ஸஜ்தாவிற்காக) வளைக்க மாட்டோம்; (அவர்கள் ஸஜ்தாச் செய்த) பிறகுதான் நாங்கள் ஸஜ்தாச் செய்வோம்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

குறிப்பு:

“பொய் பேசாதவரான பராஉ பின் ஆஸிப் (ரலி) எனக்கு இதை அறிவித்தார்” என அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) குறிப்பிடுகிறார்.