அத்தியாயம்: 4, பாடம்: 39, ஹதீஸ் எண்: 730

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَهْمٍ الْأَنْطَاكِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدٍ أَبُو إِسْحَقَ الْفَزَارِيُّ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏مُحَارِبِ بْنِ دِثَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ يَزِيدَ ‏ ‏يَقُولُا ‏ ‏عَلَى الْمِنْبَرِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْبَرَاءُ ‏

‏أَنَّهُمْ كَانُوا يُصَلُّونَ مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَإِذَا رَكَعَ رَكَعُوا وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ فَقَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ لَمْ نَزَلْ قِيَامًا حَتَّى ‏ ‏نَرَاهُ قَدْ وَضَعَ وَجْهَهُ فِي الْأَرْضِ ثُمَّ نَتَّبِعُهُ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் தொழுதுவந்தோம். அவர்கள் ருகூஉச் செய்த பிறகுதான் நாங்கள் ருகூஉச் செய்வோம். அவர்கள் ருகூஉவிலிருந்து தலையை உயர்த்தி “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறியபின் அவர்கள் (ஸஜ்தாவிற்குச் சென்று) தமது நெற்றியை பூமியில் வைப்பதைப் பார்க்கும்வரை நின்று கொண்டேயிருப்போம்; பிறகுதான் அவர்களைப் பின்தொடர்வோம்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி)

குறிப்பு:

அப்துல்லாஹ் பின் யஸீத் (ரலி) அவர்களின் ஒரு மேடைச் சொற்பொழிவின்போது இந்த ஹதீஸைக் கேட்டதாக முஹாரிப் பின் திஸார் குறிப்பிடுகிறார்.