அத்தியாயம்: 4, பாடம்: 40, ஹதீஸ் எண்: 735

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَابْنُ بَشَّارٍ ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏مَجْزَأَةَ بْنِ زَاهِرٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏عَبْدَ اللَّهِ بْنَ أَبِي أَوْفَى ‏ ‏يُحَدِّثُ ‏

عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏أَنَّهُ كَانَ يَقُولُ ‏ ‏اللَّهُمَّ لَكَ الْحَمْدُ مِلْءُ السَّمَاءِ وَمِلْءُ الْأَرْضِ وَمِلْءُ مَا شِئْتَ مِنْ شَيْءٍ بَعْدُ اللَّهُمَّ طَهِّرْنِي بِالثَّلْجِ وَالْبَرَدِ وَالْمَاءِ الْبَارِدِ اللَّهُمَّ طَهِّرْنِي مِنْ الذُّنُوبِ وَالْخَطَايَا كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الْوَسَخِ ‏

حَدَّثَنَا ‏ ‏عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏زُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ بْنُ هَارُونَ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏شُعْبَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏فِي رِوَايَةِ ‏ ‏مُعَاذٍ ‏ ‏كَمَا يُنَقَّى الثَّوْبُ الْأَبْيَضُ مِنْ الدَّرَنِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏يَزِيدَ ‏ ‏مِنْ ‏ ‏الدَّنَسِ ‏

நபி(ஸல்) அவர்கள் (ருகூவிலிருந்து நிமிர்ந்ததும்), “அல்லாஹும்ம ல(க்)கல் ஹம்து மில்அஸ்ஸமாவாத்தி வ அமில்அல் அர்ளி, வ மில்அ மா ஷிஃத்த மின் ஷையின் பஃது; அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ பிஸ்ஸல்ஜி வல்பரதி வல்மாயில் பாரித்; அல்லாஹும்ம தஹ்ஹிர்னீ மினத் துனூபி வல்கத்தாயா கமாயுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினல் வஸக்” (பொருள் : இறைவா! வானங்கள் நிரம்ப, பூமி நிரம்ப அவற்றுக்குப் பின் நீ நாடிய இன்ன பிறவும் நிரம்ப, புகழனைத்தும் உனக்கே உரியது! இறைவா, (உனது கனிவு எனும்) பனிக்கட்டியாலும் (அருள் எனும்) ஆலங்கட்டியாலும் (பிழை பொறுத்தல் எனும்) குளிர்ந்த நீராலும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! இறைவா, அழுக்கிலிருந்து வெண்மையான ஆடை தூய்மைப்படுவதைப் போன்று பாவங்களிலிருந்தும் தவறுகளிலிருந்தும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக!).

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி)

குறிப்பு :

முஆத் (ரஹ்) வழி அறிவிப்பில், (“வஸக்” எனும் சொல்லுக்குப் பகரமாக) “தரன்” எனும் சொல் இடம்பெற்றுள்ளது. யஸீத் பின் ஹாரூன் (ரஹ்) வழி அறிவிப்பில் “தனஸ்” எனும் சொல் இடம் பெற்றுள்ளது. (மூன்று சொற்களுக்கும் “அழுக்கு” என்பதே பொருளாகும்).

Share this Hadith:

Leave a Comment