அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 749

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏عَبْدُ الْأَعْلَى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏دَاوُدُ ‏ ‏عَنْ ‏ ‏عَامِرٍ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُكْثِرُ مِنْ قَوْلِ ‏ ‏سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ قَالَتْ فَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَرَاكَ تُكْثِرُ مِنْ قَوْلِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فَقَالَ خَبَّرَنِي رَبِّي أَنِّي ‏ ‏سَأَرَى عَلَامَةً فِي أُمَّتِي فَإِذَا رَأَيْتُهَا أَكْثَرْتُ مِنْ قَوْلِ سُبْحَانَ اللَّهِ وَبِحَمْدِهِ أَسْتَغْفِرُ اللَّهَ وَأَتُوبُ إِلَيْهِ فَقَدْ رَأَيْتُهَا ‏‏إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ ‏فَتْحُ ‏ ‏مَكَّةَ ‏وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ ‏ ‏أَفْوَاجًا ‏ ‏فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது தொழுகையில்) மிகுதியாக, “ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி, அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி” (அல்லாஹ் மிகத் தூயவன்! அவனைப் புகழ்ந்து துதிக்கிறேன். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக்கோரி அவனிடமே மீளுகிறேன்) என்று கூறிவந்தார்கள். நான், “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் ஸுப்ஹானல்லாஹி வபி ஹம்திஹி அஸ்தஃக்ஃபிருல்லாஹ வ அதூபு இலைஹி என்று மிகுதியாகக் கூறிவருவதை நான் காண்கிறேன் (இதற்கு என்ன காரணம்?)” என்று கேட்டேன். அதற்கு, “என் சமுதாயத்தாரைக் குறிக்கும் ஓர் அடையாளத்தை நான் காண்பேன் என்றும், அதைக் காணும்போது இந்தத் தஸ்பீஹை நான் அதிகமாக ஓத வேண்டும் என்றும் என் இறைவன் எனக்கு அறிவித்திருந்தான். அந்த அடையாளத்தை நான் கண்டுகொண்டேன்”; “அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து சேரும்போது, அல்லாஹ்வின் மார்க்க(மான இஸ்லா)த்தில் அணியணியாய் மக்கள் வந்து இணைவதைக் காணும்போது, (நபியே!) உமதிறைவனின் புகழுக்கொப்ப அவனைப் புகழ்ந்து போற்றுவீராக! மேலும் அவனிடம் அதிகம் மன்னிப்புக் கோருவீராக! அவன் மிக்க மன்னிப்பவனாவான் (110:1-3) இதில் வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரலி)