அத்தியாயம்: 4, பாடம்: 42, ஹதீஸ் எண்: 750

و حَدَّثَنِي ‏ ‏حَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏قَالَ قُلْتُ ‏ ‏لِعَطَاءٍ ‏ ‏كَيْفَ تَقُولُ أَنْتَ فِي الرُّكُوعِ قَالَ أَمَّا سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ ‏ ‏فَأَخْبَرَنِي ‏ ‏ابْنُ أَبِي مُلَيْكَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

افْتَقَدْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏ذَاتَ لَيْلَةٍ فَظَنَنْتُ أَنَّهُ ذَهَبَ إِلَى بَعْضِ نِسَائِهِ ‏ ‏فَتَحَسَّسْتُ ‏ ‏ثُمَّ رَجَعْتُ فَإِذَا هُوَ رَاكِعٌ أَوْ سَاجِدٌ يَقُولُ ‏ ‏سُبْحَانَكَ وَبِحَمْدِكَ لَا إِلَهَ إِلَّا أَنْتَ فَقُلْتُ بِأَبِي أَنْتَ وَأُمِّي إِنِّي لَفِي شَأْنٍ وَإِنَّكَ لَفِي آخَرَ ‏

நான் ஒரு நாள் இரவில் நபி (ஸல்) அவர்களைக் காணாமல் தேடினேன். அவர்கள் தம் துணைவியருள் எவரிடத்தோ சென்றிருப்பார்கள் என்று எண்ணிக் கொண்டே அவர்களைத் தேடிப் போனேன். (அவர்களை எங்கும் காணாமல்) பின்னர் திரும்பி வந்தேன். அப்போது அவர்கள் (தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள்) ருகூஉவில்/ஸஜ்தாவில், “ஸுப்ஹானக்க, வபி ஹம்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த” (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது நான், “என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும்! நான் வேறு எண்ணத்தில் இருந்தேன். ஆனால் நீங்கள் (அதற்கு மாறான) மற்றோர் எண்ணத்தில் இருக்கிறீர்கள்” என்று கூறினேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

குறிப்பு:

நான், அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்களிடம், “நீங்கள் ருகூஉவில் என்ன ஓதுவீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அவர்கள் “ஸுப்ஹானக்க, வபி ஹம்திக்க, லாயிலாஹ இல்லா அன்த்த (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னைத் தவிர வேறு இறைவனில்லை) என்று ஓதுவேன். ஏனெனில், அன்னை ஆயிஷா (ரலி) வழியாக, இப்னு அபீமுலைக்கா (ரஹ்) அவர்கள் மேற்காணும் ஹதீஸை எனக்கு அறிவித்திருக்கிறார்” என்று அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) கூறியதாக இப்னு ஜுரைஜ் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

Share this Hadith:

Leave a Comment