அத்தியாயம்: 4, பாடம்: 46, ஹதீஸ் எண்: 764

حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بَكْرٌ وَهُوَ ابْنُ مُضَرَ ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْرَجِ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ مَالِكٍ ابْنِ بُحَيْنَةَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏إِذَا صَلَّى ‏ ‏فَرَّجَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ حَتَّى يَبْدُوَ بَيَاضُ إِبْطَيْهِ

حَدَّثَنَا ‏ ‏عَمْرُو بْنُ سَوَّادٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَمْرُو بْنُ الْحَارِثِ ‏ ‏وَاللَّيْثُ بْنُ سَعْدٍ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏جَعْفَرِ بْنِ رَبِيعَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏عَمْرِو بْنِ الْحَارِثِ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا سَجَدَ ‏ ‏يُجَنِّحُ ‏ ‏فِي سُجُودِهِ حَتَّى يُرَى وَضَحُ إِبْطَيْهِ ‏ ‏وَفِي رِوَايَةِ ‏ ‏اللَّيْثِ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا سَجَدَ ‏ ‏فَرَّجَ ‏ ‏يَدَيْهِ عَنْ إِبْطَيْهِ حَتَّى إِنِّي لَأَرَى بَيَاضَ إِبْطَيْهِ ‏

அல்லாஹ்வின்தூதர் (ஸல்) தொழும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்கு இரு கைகளையும் விரித்துவைப்பார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி)

குறிப்பு :

அம்ரு பின் அல்ஹாரிஸ் (ரஹ்) வழி அறிவிப்பில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸஜ்தாச் செய்யும்போது தம்மிரு அக்குள்களின் வெண்மை தென்படும் அளவுக்குத் தம் கைகளை (விலாப்புறத்திலிருந்து) அகற்றிவைப்பார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

லைஸ் பின் ஸஅத் (ரஹ்) வழி அறிவிப்பில், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஸஜ்தாச் செய்யும்போது தம்மிரு கைகளையும் நான் அவர்களுடைய அக்குள்களின் வெண்மையைப் பார்க்கும் அளவுக்கு அக்குள் ஒட்டாமல் விரித்து வைப்பார்கள்” என்று அப்துல்லாஹ் பின் மாலிக் பின் புஹைனா (ரலி) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.