அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 785

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَرْسَلَهُ إِلَى ‏ ‏أَبِي جُهَيْمٍ ‏ ‏يَسْأَلُهُ مَاذَا سَمِعَ مِنْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فِي الْمَارِّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي ‏ ‏قَالَ ‏ ‏أَبُو جُهَيْمٍ ‏

قَالَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏لَوْ يَعْلَمُ الْمَارُّ بَيْنَ يَدَيْ الْمُصَلِّي مَاذَا عَلَيْهِ لَكَانَ أَنْ يَقِفَ أَرْبَعِينَ خَيْرًا لَهُ مِنْ أَنْ يَمُرَّ بَيْنَ يَدَيْهِ قَالَ ‏ ‏أَبُو النَّضْرِ ‏ ‏لَا أَدْرِي قَالَ أَرْبَعِينَ يَوْمًا أَوْ شَهْرًا أَوْ سَنَةً ‏

حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ هَاشِمِ بْنِ حَيَّانَ الْعَبْدِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏بُسْرِ بْنِ سَعِيدٍ ‏ ‏أَنَّ ‏ ‏زَيْدَ بْنَ خَالِدٍ الْجُهَنِيَّ ‏ ‏أَرْسَلَ إِلَى ‏ ‏أَبِي جُهَيْمٍ الْأَنْصَارِيِّ ‏ ‏مَا سَمِعْتُ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ فَذَكَرَ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏

“தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்பவர், அதனால் எத்தகைய பாவம் தம்மீது ஏற்படும் என்பதை அறிந்திருப்பாரானால் அவருக்குக் குறுக்கே கடந்து செல்வதைவிட நாற்பது (நாட்கள்/ மாதங்கள்/ஆண்டுகள் அப்படியே காத்து) நிற்பது அவருக்கு நன்மை பயப்பதாக இருக்கும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஜுஹைம் பின் அல்ஹாரிஸ் (ரலி)

குறிப்பு:

“ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள், (தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்வது பற்றி) அபூஜுஹைம் (ரலி) என்ன செவியுற்றிருக்கிறார்கள் என்று கேட்டு வருமாறு என்னை அனுப்பினார்கள். (நான் சென்று கேட்டபோது) அபூஜுஹைம் (ரலி) அவர்கள் மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள்” என்று புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

“புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) குறிப்பிட்ட நாற்பது என்பது நாள்களா?, மாதங்களா?, ஆண்டுகளா? என்பது எனக்குத் தெரியவில்லை” என்று இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபுந்நள்ரு ஸாலிம் பின் அபீஉமய்யா (ரஹ்) கூறுகின்றார்.

வகீஃ (ரஹ்) வழி அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களிடம் அபூஜுஹைம் அல்அன்ஸாரீ (ரலி), (தொழுது கொண்டிருப்பவருக்குக் குறுக்கே செல்வது பற்றி) என்ன செவியுற்றிருக்கிறார் என்று அறிந்து வருமாறு என்னை ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் அனுப்பினார்கள் என புஸ்ரிப்னு ஸயீத் (ரஹ்) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 784

حَدَّثَنِي ‏ ‏هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏وَمُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ إِسْمَعِيلَ ابْنِ أَبِي فُدَيْكٍ ‏ ‏عَنْ ‏ ‏الضَّحَّاكِ بْنِ عُثْمَانَ ‏ ‏عَنْ ‏ ‏صَدَقَةَ بْنِ يَسَارٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا كَانَ أَحَدُكُمْ ‏ ‏يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّ مَعَهُ الْقَرِينَ ‏

و حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏أَبُو بَكْرٍ الْحَنَفِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الضَّحَّاكُ بْنُ عُثْمَانَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏صَدَقَةُ بْنُ يَسَارٍ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏يَقُولُا ‏ ‏إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏بِمِثْلِهِ ‏

“உங்களில் ஒருவர் தொழும்போது எவரையும் தமக்குக் குறுக்கே கடந்துசெல்ல அனுமதிக்க வேண்டாம். (அவரைத் தடுக்கட்டும்) அவர் (விலகிக்கொள்ள) மறுக்கும்போது சண்டையிட(முடிந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில், அவருடன் கூட்டாளி(யாக ஷைத்தான்) இருக்கிறான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)

குறிப்பு:

“இந்த ஹதீஸை நான் இபுனு உமர் (ரலி) இடமிருந்து செவியுற்றேன்” என்று ஸதக்கதிப்னு யஸார் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 783

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُلَيْمَانُ بْنُ الْمُغِيرَةِ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ هِلَالٍ يَعْنِي حُمَيْدًا ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَمَا أَنَا وَصَاحِبٌ لِي نَتَذَاكَرُ حَدِيثًا إِذْ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو صَالِحٍ السَّمَّانُ ‏

أَنَا أُحَدِّثُكَ مَا سَمِعْتُ مِنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏وَرَأَيْتُ مِنْهُ قَالَ بَيْنَمَا أَنَا مَعَ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏يُصَلِّي يَوْمَ الْجُمُعَةِ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ إِذْ جَاءَ رَجُلٌ شَابٌّ مِنْ بَنِي ‏ ‏أَبِي مُعَيْطٍ ‏ ‏أَرَادَ أَنْ ‏ ‏يَجْتَازَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ فَدَفَعَ فِي نَحْرِهِ فَنَظَرَ فَلَمْ يَجِدْ ‏ ‏مَسَاغًا ‏ ‏إِلَّا بَيْنَ يَدَيْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏فَعَادَ فَدَفَعَ فِي نَحْرِهِ أَشَدَّ مِنْ الدَّفْعَةِ الْأُولَى ‏ ‏فَمَثَلَ ‏ ‏قَائِمًا فَنَالَ مِنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏ثُمَّ زَاحَمَ النَّاسَ فَخَرَجَ فَدَخَلَ عَلَى ‏ ‏مَرْوَانَ ‏ ‏فَشَكَا إِلَيْهِ مَا لَقِيَ قَالَ وَدَخَلَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏عَلَى ‏ ‏مَرْوَانَ ‏ ‏فَقَالَ لَهُ ‏ ‏مَرْوَانُ ‏ ‏مَا لَكَ وَلِابْنِ أَخِيكَ جَاءَ ‏ ‏يَشْكُوكَ فَقَالَ ‏ ‏أَبُو سَعِيدٍ ‏ ‏سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ ‏ ‏إِذَا صَلَّى أَحَدُكُمْ إِلَى شَيْءٍ يَسْتُرُهُ مِنْ النَّاسِ فَأَرَادَ أَحَدٌ أَنْ ‏ ‏يَجْتَازَ ‏ ‏بَيْنَ يَدَيْهِ فَلْيَدْفَعْ فِي نَحْرِهِ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ‏

நான் ஒரு வெளிக்கிழமையில் அபூஸயீத் (ரலி) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் மக்களில் யாரும் தமக்கு குறுக்கே சென்றுவிடாமலிருக்கத் தடுப்பொன்றை வைத்து, அதன் எதிரே தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது அபீமுஐத் குலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் அபூஸயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் குறுக்கே கடந்து செல்ல முற்பட்டார். உடனே அபூஸயீத் (ரலி) அவர்கள் தமது கையால் அவரது நெஞ்சில் (கை வைத்துத்) தள்ளினார்கள். அந்த இளைஞர் (சுற்றிலும்) பார்த்தார். அபூஸயீத் (ரலி) அவர்களுக்கு முன்னால் கடந்து செல்வதைத் தவிர வேறுவழியில்லை என்பதைத் தெரிந்து கொண்ட அவர், மீண்டும் அவர்களைக் கடந்து செல்ல முயன்றார். அபூஸயீத் (ரலி) அவர்கள் முதல் தடவையைவிடக் கடுமையாகத் தள்ளினார்கள். அந்த இளைஞர் (விலகாமல்) நின்றுகொண்டு அபூஸயீத் (ரலி) அவர்களைச் சாடினார்.

பிறகு மக்களை விலக்கிக் கொண்டு (ஆளுநர்) மர்வான் பின் ஹகம் (ரலி) இடம் சென்று நடந்ததை முறையிட்டார். அபூஸயீத் (ரலி) அவர்களும் மர்வான் (ரலி) இடம் சென்றார்கள். அப்போது, “உங்களுக்கும் உங்கள் சகோதரர் புதல்வருக்கும் (இடையே) என்ன நேர்ந்தது? அவர் உங்களைப் பற்றி முறையிடுகிறாரே!” என்று அபூஸயீத் (ரலி) அவர்களிடம் மர்வான் (ரலி) கேட்டார். அதற்கு அபூஸயீத் (ரலி) அவர்கள், “மக்களில் எவரும் குறுக்கே செல்லாமலிருக்கத் தமக்கு முன்னே ஒரு தடுப்பை வைத்துக் கொண்டு உங்களில் ஒருவர் தொழும்போது அவருக்கு முன்னால் குறுக்கே செல்ல யாரும் முற்பட்டால் சண்டையிட (முடிந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்! ஏனெனில் அவன் ஷைத்தான்” என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் (ரலி) வழியாக ஸாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்).

குறிப்பு:

நானும் என் தோழர் ஒருவரும் ஒரு ஹதீஸ் குறித்துப் பேசிக் கொண்டிருந்தோம். அப்போது (அங்கு வந்த) சாலிஹ் அஸ்ஸம்மான் (ரஹ்), “நான் அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைக் கண்டதையும் அவர்களிடமிருந்து செவியுற்ற ஒரு ஹதீஸையும் உமக்குக் கூறுகிறேன்” எனக் கூறிவிட்டு, மேற்காணும் ஹதீஸை அறிவித்தார்கள் என்று ஹுமைத் பின் ஹிலால் (ரஹ்) குறிப்பிடுகிறார்.

அத்தியாயம்: 4, பாடம்: 48, ஹதீஸ் எண்: 782

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏زَيْدِ بْنِ أَسْلَمَ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ ‏

أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَ ‏ ‏إِذَا كَانَ أَحَدُكُمْ ‏ ‏يُصَلِّي فَلَا يَدَعْ أَحَدًا يَمُرُّ بَيْنَ يَدَيْهِ ‏ ‏وَلْيَدْرَأْهُ ‏ ‏مَا اسْتَطَاعَ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ ‏

“உங்களில் தொழுது கொண்டிருக்கும் ஒருவர், எவரையும் தமக்குக் குறுக்கே கடந்து செல்ல விடவேண்டாம். இயன்றவரை அவரைத் தடுக்கட்டும். அவர் (விலகிச் செல்ல) மறுத்தால் அவருடன் சண்டையிட(முடிந்தால் சண்டையிட்டுத் தடுக்க)ட்டும்; ஏனெனில் அவன் ஷைத்தான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி).