அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 798

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالَ ‏ ‏زُهَيْرٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏طَلْحَةُ بْنُ يَحْيَى ‏ ‏عَنْ ‏ ‏عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ سَمِعْتُهُ عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ وَأَنَا إِلَى جَنْبِهِ وَأَنَا حَائِضٌ وَعَلَيَّ ‏ ‏مِرْطٌ ‏ ‏وَعَلَيْهِ بَعْضُهُ إِلَى جَنْبِهِ ‏

நபி (ஸல்) அவர்கள் இரவுத் தொழுகை தொழுது கொண்டிருப்பார்கள். மாதவிடாய் ஏற்பட்ட நிலையில் நான் அவர்கள் பக்கத்தில் (படுத்துக் கொண்டு) இருப்பேன். என்மீது கிடக்கும் போர்வையின் ஒரு பகுதி அவர்கள்மீதும் படும்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 797

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبَّادُ بْنُ الْعَوَّامِ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏الشَّيْبَانِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ شَدَّادِ بْنِ الْهَادِ ‏ ‏قَالَ حَدَّثَتْنِي ‏ ‏مَيْمُونَةُ زَوْجُ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي وَأَنَا ‏ ‏حِذَاءَهُ ‏ ‏وَأَنَا حَائِضٌ وَرُبَّمَا أَصَابَنِي ثَوْبُهُ إِذَا سَجَدَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது கொண்டிருக்கும்போது நான் மாதவிடாய்க்காரியாக அவர்களுக்கு எதிரில் இருந்திருக்கிறேன். அவர்கள் ஸஜ்தாச் செய்யும் போது அவர்களது ஆடை சிலவேளை என்மீது படும்.

அறிவிப்பாளர் : அன்னை மைமூனா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 796

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏قَالَ قَرَأْتُ عَلَى ‏ ‏مَالِكٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي النَّضْرِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كُنْتُ أَنَامُ بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَرِجْلَايَ فِي قِبْلَتِهِ فَإِذَا سَجَدَ غَمَزَنِي فَقَبَضْتُ رِجْلَيَّ وَإِذَا قَامَ بَسَطْتُهُمَا قَالَتْ وَالْبُيُوتُ يَوْمَئِذٍ لَيْسَ فِيهَا مَصَابِيحُ ‏

நான் (இரவில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (படுத்து) உறங்கிக் கொண்டிருப்பேன். அப்போது என் கால்கள் அவர்களது கிப்லாவில் (ஸஜ்தாச் செய்யுமிடத்தில்) இருக்கும். அவர்கள் ஸஜ்தாவுக்காக வரும்போது என்னைத் தமது விரலால் தொட்டுணர்த்துவார்கள். உடனே நான் என் கால்களை மடக்கிக் கொள்வேன். அவர்கள் மீண்டும் நிலைக்குச் சென்றுவிட்டால் நான் (மறுபடியும்) கால்களை நீட்டிக் கொள்வேன். அந்த நாள்களில் (எங்கள்) வீடுகளில் விளக்குகள் இருந்ததில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 795

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

عَدَلْتُمُونَا ‏ ‏بِالْكِلَابِ وَالْحُمُرِ لَقَدْ رَأَيْتُنِي مُضْطَجِعَةً عَلَى السَّرِيرِ فَيَجِيءُ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَيَتَوَسَّطُ السَّرِيرَ فَيُصَلِّي فَأَكْرَهُ أَنْ ‏ ‏أَسْنَحَهُ ‏ ‏فَأَنْسَلُّ مِنْ قِبَلِ رِجْلَيْ السَّرِيرِ حَتَّى أَنْسَلَّ مِنْ لِحَافِي ‏

“நாய்கள், கழுதைகள், பெண்கள் ஆகியோர் தொழுபவருக்குக் குறுக்கே சென்றால் தொழுகை முறிந்துவிடும்” என்று கூறிய ஒருவரிடம் ஆயிஷா (ரலி) அவர்கள், “எங்களை நாய்களுக்கும் கழுதைகளுக்கும் சமமாக்கி விட்டீர்களே! நான் கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருப்பேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து கட்டிலின் நடுப்பகுதிக்கு நேராக (நின்று) தொழுவார்கள் (ஏதேனும் தேவை ஏற்பட்டால்) அவர்களது பார்வையில் படும்விதமாக எழுந்து உட்கார விரும்பாமல் எனது போர்வையிலிருந்து விலகி, கட்டிலின் இரு கால்களினூடே மெல்ல நழுவிச் சென்றுவிடுவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அஸ்வத் பின் யஸீத் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 794

حَدَّثَنَا ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ ‏ ‏قَالَا حَدَّثَنَا ‏ ‏حَفْصُ بْنُ غِيَاثٍ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبِي ‏ ‏حَدَّثَنَا ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏إِبْرَاهِيمُ ‏ ‏عَنْ ‏ ‏الْأَسْوَدِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏ح ‏ ‏قَالَ ‏ ‏الْأَعْمَشُ ‏ ‏وَحَدَّثَنِي ‏ ‏مُسْلِمٌ ‏ ‏عَنْ ‏ ‏مَسْرُوقٍ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

وَذُكِرَ عِنْدَهَا مَا يَقْطَعُ الصَّلَاةَ الْكَلْبُ وَالْحِمَارُ وَالْمَرْأَةُ فَقَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏ ‏قَدْ شَبَّهْتُمُونَا بِالْحَمِيرِ وَالْكِلَابِ وَاللَّهِ لَقَدْ رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي وَإِنِّي عَلَى السَّرِيرِ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ مُضْطَجِعَةً فَتَبْدُو لِي الْحَاجَةُ فَأَكْرَهُ أَنْ أَجْلِسَ فَأُوذِيَ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَأَنْسَلُّ مِنْ عِنْدِ رِجْلَيْهِ ‏

“நாயும் கழுதையும் பெண்ணும் (தொழுபவருக்குக் குறுக்கே செல்வது) தொழுகையை முறித்துவிடும்” என்பதாக ஆயிஷா (ரலி) அவர்கள் காதுபடப் பேசப்பட்டது. அதைக்கேட்ட ஆயிஷா (ரலி) அவர்கள், “(பெண்களாகிய) எங்களைக் கழுதைகளுக்கும் நாய்களுக்கும் ஒப்பாக்கிவிட்டீர்களே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்குமிடையே (குறுக்குவாட்டில்) கட்டிலில் ஒருக்களித்துப் படுத்துக் கொண்டிருப்பேன்; அவர்கள் தொழுதுகொண்டிருப்பார்கள். அப்போது எனக்கு ஏதேனும் தேவையேற்பட்டால் நபி (ஸல்) அவர்களுக்கு முன்னால் (எழுந்து) உட்கார்ந்து அவர்களுக்கு இடையூறு ஏற்படுத்த விரும்பாமல் கட்டிலின் இரு கால்கள் வழியாக நான் நழுவிச்சென்றுவிடுவேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 793

و حَدَّثَنِي ‏ ‏عَمْرُو بْنُ عَلِيٍّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏شُعْبَةُ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ ‏ ‏قَالَ قَالَتْ ‏ ‏عَائِشَةُ ‏

مَا يَقْطَعُ الصَّلَاةَ قَالَ فَقُلْنَا الْمَرْأَةُ وَالْحِمَارُ فَقَالَتْ إِنَّ الْمَرْأَةَ لَدَابَّةُ سَوْءٍ لَقَدْ رَأَيْتُنِي بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مُعْتَرِضَةً كَاعْتِرَاضِ الْجَنَازَةِ وَهُوَ ‏ ‏يُصَلِّي ‏

ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), “தொழுகையை முறிக்கக் கூடியவை எவை?” என்று கேட்டார்கள். நாங்கள், “பெண்களும் கழுதைகளும் (குறுக்கே செல்வது)” என்று பதிலளித்தோம். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “பெண்கள் என்ன தீய பிராணிகளா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதுகொண்டிருக்கும்போது அவர்களுக்கு முன்னால் நான் ஜனாஸாவைப் போன்று குறுக்குவாக்கில் படுத்துக் கொண்டிருப்பேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி) வழியாக அன்னாரின் சகோதரி மகன் உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்)

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 792

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏وَكِيعٌ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏ ‏قَالَتْ ‏

كَانَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي صَلَاتَهُ مِنْ اللَّيْلِ كُلَّهَا وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ أَيْقَظَنِي فَأَوْتَرْتُ ‏

நபி (ஸல்) அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே நான் குறுக்குவாக்கில் படுத்து(உறங்கி)க் கொண்டிருக்கும் நிலையில் அவர்கள் இரவுத் தொழுகையை முழுமையாகத் தொழுது முடிப்பார்கள். இறுதியில் வித்ருத் தொழ எண்ணும்போது என்னை எழுப்பி விடுவார்கள். நான் (எழுந்து) வித்ருத் தொழுவேன்.

அத்தியாயம்: 4, பாடம்: 51, ஹதீஸ் எண்: 791

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏قَالُوا حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏عَائِشَةَ ‏

أَنَّ النَّبِيَّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي مِنْ اللَّيْلِ وَأَنَا مُعْتَرِضَةٌ بَيْنَهُ وَبَيْنَ الْقِبْلَةِ كَاعْتِرَاضِ الْجَنَازَةِ ‏

நபி (ஸல்) அவர்கள் (என் இல்லத்தில்) இரவுத் தொழுகை தொழுது கொண்டிருக்கும்போது, நான் ஜனாஸாவைப் போன்று அவர்களுக்கும் கிப்லாவுக்கும் இடையே குறுக்குவாக்கில் படுத்திருப்பேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)