அத்தியாயம்: 4, பாடம்: 52, ஹதீஸ் எண்: 802

حَدَّثَنَا ‏ ‏أَبُو كُرَيْبٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو أُسَامَةَ ‏ ‏عَنْ ‏ ‏هِشَامِ بْنِ عُرْوَةَ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏أَنَّ ‏ ‏عُمَرَ بْنَ أَبِي سَلَمَةَ ‏ ‏أَخْبَرَهُ قَالَ ‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يُصَلِّي فِي ثَوْبٍ وَاحِدٍ ‏ ‏مُشْتَمِلًا ‏ ‏بِهِ فِي بَيْتِ ‏ ‏أُمِّ سَلَمَةَ ‏ ‏وَاضِعًا طَرَفَيْهِ عَلَى عَاتِقَيْهِ ‏

حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏عَنْ ‏ ‏وَكِيعٍ ‏ ‏قَالَ حَدَّثَنَا ‏ ‏هِشَامُ بْنُ عُرْوَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ غَيْرَ أَنَّهُ قَالَ ‏ ‏مُتَوَشِّحًا ‏ ‏وَلَمْ يَقُلْ ‏ ‏مُشْتَمِلًا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்முசலமா (ரலி) அவர்களது இல்லத்தில் ஒரே ஆடையை அணிந்து கொண்டு தொழுததை நான் பார்த்தேன். அந்த ஆடையின் இரு முனைகளைத் தம் தோள்கள்மீது மாற்றிப் போட்டுக் கொண்டு தொழுததை நான் பார்த்தேன்.

அறிவிப்பாளர் : உமர் பின் அபூஸலமா (ரலி)

குறிப்பு:

ஹிஷாம் பின் உர்வா (ரஹ்) வழி அறிவிப்பில், ஒரு நீண்ட ஆடையின் இரு முனைகளை மார்பின் குறுக்காக இரு தோள்களின்மீது போட்டுக் கொள்வதற்கான அரபுச்சொல், “முஷ்தமிலன்” என்பது “முதவஷ்ஷிஹன்” என இடம்பெற்றுள்ளது. அது, ஒருபொருள் இருசொல் வகையைச் சேர்ந்ததாகும்.

Share this Hadith:

Leave a Comment