அத்தியாயம்: 4, பாடம்: 08, ஹதீஸ் எண்: 584

حَدَّثَنِي ‏ ‏أُمَيَّةُ بْنُ بِسْطَامَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَزِيدُ يَعْنِي ابْنَ زُرَيْعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏رَوْحٌ ‏ ‏عَنْ ‏ ‏سُهَيْلٍ ‏ ‏قَالَ ‏
‏أَرْسَلَنِي ‏ ‏أَبِي ‏ ‏إِلَى ‏ ‏بَنِي حَارِثَةَ ‏ ‏قَالَ وَمَعِي غُلَامٌ لَنَا ‏ ‏أَوْ صَاحِبٌ لَنَا ‏ ‏فَنَادَاهُ مُنَادٍ مِنْ حَائِطٍ بِاسْمِهِ قَالَ وَأَشْرَفَ الَّذِي مَعِي عَلَى الْحَائِطِ فَلَمْ يَرَ شَيْئًا فَذَكَرْتُ ذَلِكَ لِأَبِي فَقَالَ لَوْ شَعَرْتُ أَنَّكَ تَلْقَ هَذَا لَمْ أُرْسِلْكَ وَلَكِنْ إِذَا سَمِعْتَ صَوْتًا فَنَادِ بِالصَّلَاةِ فَإِنِّي سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يُحَدِّثُ عَنْ رَسُولِ اللَّهِ أَنَّهُ قَالَ ‏ ‏إِنَّ الشَّيْطَانَ إِذَا نُودِيَ بِالصَّلَاةِ وَلَّى وَلَهُ ‏ ‏حُصَاصٌ ‏

என் தந்தை (அபூ ஸாலிஹ்) என்னை பனூ ஹாரிஸா கூட்டத்தாரிடம் அனுப்பிய ஒருபோது, என்னுடன் எங்களுடைய அடிமை/தோழர் ஒருவரும் வந்திருந்தார். அப்போது என்னுடன் வந்தவரின் பெயரைக் குறிப்பிட்டு ஒரு சுவருக்கு அப்பாலிருந்து ஒருவர் அவரை அழைத்தார். என்னுடன் வந்தவர் அந்தச் சுவரின் மீதேறிப் பார்த்தபோது அங்கு யாரும் தென்படவில்லை. பின்னர் இதைப் பற்றி என் தந்தையிடம் குறிப்பிட்டேன். அப்போது அவர்கள், “இப்படி ஒரு நிலையை நீ சந்திக்க நேரிடும் என்று நான் உணர்ந்திருந்தால் உன்னை நான் அனுப்பியிருக்க மாட்டேன். எனினும் (இது போன்ற) சப்தத்தை நீ செவியுற்றால், தொழுகைக்கு அழைப்பதை(ப்போல்) உரத்துக் கூறு. ஏனெனில், “தொழுகை அழைப்புக் கொடுக்கப் பட்டால் ஷைத்தான் வாயு வெளியேறிய வண்ணம் வெருண்டோடுவான்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னதாக அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்துக் கொண்டிருந்ததை நான் செவியேற்றுள்ளேன்” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள் வழியாக சுஹைல் பின் அபீ ஸாலிஹ் (ரஹ்)