அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 589

حَدَّثَنِي ‏ ‏أَبُو كَامِلٍ الْجَحْدَرِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو عَوَانَةَ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَصْرِ بْنِ عَاصِمٍ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ ‏
‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا كَبَّرَ رَفَعَ يَدَيْهِ حَتَّى ‏ ‏يُحَاذِيَ ‏ ‏بِهِمَا أُذُنَيْهِ وَإِذَا رَكَعَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ بِهِمَا أُذُنَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ فَقَالَ ‏ ‏سَمِعَ اللَّهُ لِمَنْ حَمِدَهُ فَعَلَ مِثْلَ ذَلِكَ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏ابْنُ أَبِي عَدِيٍّ ‏ ‏عَنْ ‏ ‏سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏قَتَادَةَ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ ‏ ‏أَنَّهُ رَأَى نَبِيَّ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏وَقَالَ حَتَّى يُحَاذِيَ بِهِمَا فُرُوعَ أُذُنَيْهِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தொழுகையின் தொடக்க) தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறும்போதும் ருகூச் செய்யும்போதும் தம் இருகைகளையும் தம் காதுகளுக்கு நேராக உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, “ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்” என்று கூறும்போதும் அவ்வாறே (கைகளை உயர்த்துவார்கள்).

அறிவிப்பாளர் : மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி)

குறிப்பு :

இந்த ஹதீஸ் ஸயீத் (ரஹ்) வழியில் அறிவிக்கப் படும்போது, “நபி (ஸல்) அவர்கள் தம் இருகாதுச் சோனைகளுக்கு நேராக இரு கைகளையும் உயர்த்தியதை நான் கண்டேன்” என அறிவிப்பாளர் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 588

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏خَالِدُ بْنُ عَبْدِ اللَّهِ ‏ ‏عَنْ ‏ ‏خَالِدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي قِلَابَةَ ‏ ‏أَنَّهُ رَأَى ‏ ‏مَالِكَ بْنَ الْحُوَيْرِثِ ‏
‏إِذَا صَلَّى كَبَّرَ ثُمَّ رَفَعَ يَدَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ وَإِذَا رَفَعَ رَأْسَهُ مِنْ الرُّكُوعِ رَفَعَ يَدَيْهِ وَحَدَّثَ أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ يَفْعَلُ هَكَذَا

மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) அவர்கள் தொழுதால் தக்பீர் கூறி, தம்மிரு கைகளை உயர்த்தித் தொடங்குவதையும் ருகூச் செய்யவேண்டும்போது தம்மிரு கைகளை உயர்த்துவதையும் ருகூவிலிருந்து தலையை உயர்த்தும்போது தம்மிரு கைகளை உயர்த்துவதையும் நான் கண்டிருக்கிறேன். அத்தோடு, “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறுதான் செய்பவர்களாக இருந்தார்கள்” என்று கூறியதையும் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : மாலிக் பின் அல்ஹுவைரிஸ் (ரலி) வழியாக அப்துல்லாஹ் பின் ஸைத் (அபூகிலாபா – ரஹ்).

அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 587

حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الرَّزَّاقِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏ابْنُ شِهَابٍ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ ‏ ‏أَنَّ ‏ ‏ابْنَ عُمَرَ ‏ ‏قَالَ ‏
‏كَانَ رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا ‏ ‏حَذْوَ ‏ ‏مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ فَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَإِذَا رَفَعَ مِنْ الرُّكُوعِ فَعَلَ مِثْلَ ذَلِكَ وَلَا يَفْعَلُهُ حِينَ يَرْفَعُ رَأْسَهُ مِنْ السُّجُودِ ‏
‏حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ رَافِعٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حُجَيْنٌ وَهُوَ ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏اللَّيْثُ ‏ ‏عَنْ ‏ ‏عُقَيْلٍ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سَلَمَةُ بْنُ سُلَيْمَانَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏يُونُسُ ‏ ‏كِلَاهُمَا ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏بِهَذَا الْإِسْنَادِ كَمَا ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏كَانَ رَسُولُ اللَّهِ إِذَا قَامَ لِلصَّلَاةِ رَفَعَ يَدَيْهِ حَتَّى تَكُونَا ‏ ‏حَذْوَ ‏ ‏مَنْكِبَيْهِ ثُمَّ كَبَّرَ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக இருக்குமாறு உயர்த்தி, பின்னர் (தொழுகையின் தொடக்க) தக்பீர் (அல்லாஹு அக்பர்) கூறுவார்கள். ருகூச் செய்ய வேண்டியபோதும் அவ்வாறு கைகளை உயர்த்துவார்கள். ருகூவிலிருந்து நிமிரும்போதும் அவ்வாறே (கைகளை உயர்த்துவார்கள்). சஜ்தாவிலிருந்து தலையை உயர்த்தும்போது அவ்வாறு செய்யமாட்டார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இபுனு உமர் (ரலி)

குறிப்பு :

மேற்கண்ட ஹதீஸ், உக்கைல் (ரஹ்) வழியாகவும் யூனுஸ் (ரஹ்) வழியாகவும் அறிவிக்கப் பட்டுள்ளது. அதிலும், “அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகைக்காக நின்றால் தம் இருகைகளையும் தம் இருதோள்களுக்கு நேராக இருக்குமாறு உயர்த்தி, பின்னர் தக்பீர் கூறுவார்கள்” என்று இபுனு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அறிவித்ததாகக் குறிப்பிடப் படுகின்றது.

அத்தியாயம்: 4, பாடம்: 09, ஹதீஸ் எண்: 586

حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ ‏ ‏وَسَعِيدُ بْنُ مَنْصُورٍ ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَعَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏وَابْنُ نُمَيْرٍ ‏ ‏كُلُّهُمْ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ بْنِ عُيَيْنَةَ ‏ ‏وَاللَّفْظُ ‏ ‏لِيَحْيَى ‏ ‏قَالَ أَخْبَرَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏عَنْ ‏ ‏الزُّهْرِيِّ ‏ ‏عَنْ ‏ ‏سَالِمٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِيهِ ‏ ‏قَالَ ‏
‏رَأَيْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِذَا افْتَتَحَ الصَّلَاةَ رَفَعَ يَدَيْهِ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَقَبْلَ أَنْ يَرْكَعَ وَإِذَا رَفَعَ مِنْ الرُّكُوعِ وَلَا يَرْفَعُهُمَا بَيْنَ السَّجْدَتَيْنِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையைத் தொடங்கும்போதும் ருகூச் செய்யும் முன்னும் ருகூவிலிருந்து நிமிரும்போதும் தம் இருகைகளையும் தம் இரு தோள்கள்வரை உயர்த்துவதையும் இரண்டு சஜ்தாக்களுக்கு இடையில் உயர்த்தாததையும் நான் கண்டிருக்கிறேன்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இபுனு உமர் (ரலி)