அத்தியாயம்: 43, பாடம்: 42, ஹதீஸ் எண்: 4361

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، حَدَّثَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ قَالَ هَذَا مَا حَدَّثَنَا أَبُو هُرَيْرَةَ:‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ فَذَكَرَ أَحَادِيثَ مِنْهَا وَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ جَاءَ مَلَكُ الْمَوْتِ إِلَى مُوسَى عَلَيْهِ السَّلاَمُ فَقَالَ لَهُ أَجِبْ رَبَّكَ – قَالَ – فَلَطَمَ مُوسَى عَلَيْهِ السَّلاَمُ عَيْنَ مَلَكِ الْمَوْتِ فَفَقَأَهَا – قَالَ – فَرَجَعَ الْمَلَكُ إِلَى اللَّهِ تَعَالَى فَقَالَ إِنَّكَ أَرْسَلْتَنِي إِلَى عَبْدٍ لَكَ لاَ يُرِيدُ الْمَوْتَ وَقَدْ فَقَأَ عَيْنِي – قَالَ – فَرَدَّ اللَّهُ إِلَيْهِ عَيْنَهُ وَقَالَ ارْجِعْ إِلَى عَبْدِي فَقُلِ الْحَيَاةَ تُرِيدُ فَإِنْ كُنْتَ تُرِيدُ الْحَيَاةَ فَضَعْ يَدَكَ عَلَى مَتْنِ ثَوْرٍ فَمَا تَوَارَتْ يَدُكَ مِنْ شَعْرَةٍ فَإِنَّكَ تَعِيشُ بِهَا سَنَةً قَالَ ثُمَّ مَهْ قَالَ ثُمَّ تَمُوتُ ‏.‏ قَالَ فَالآنَ مِنْ قَرِيبٍ رَبِّ أَمِتْنِي مِنَ الأَرْضِ الْمُقَدَّسَةِ رَمْيَةً بِحَجَرٍ ‏.‏ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ وَاللَّهِ لَوْ أَنِّي عِنْدَهُ لأَرَيْتُكُمْ قَبْرَهُ إِلَى جَانِبِ الطَّرِيقِ عِنْدَ الْكَثِيبِ الأَحْمَرِ ‏”‏


قَالَ أَبُو إِسْحَاقَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى، حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ، أَخْبَرَنَا مَعْمَرٌ، بِمِثْلِ هَذَا الْحَدِيثِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

மலக்குல் மவ்த்து (உயிரை எடுத்துச்செல்ல வரும் வானவர்) மூஸா (அலை) அவர்களிடம் வந்து, “உங்கள் இறைவன் (உங்கள் உயிரை எடுத்து வருமாறு உத்தரவிட்டுள்ளான். அவனது) உத்தரவுக்குப் பணியுங்கள்” என்று கூறினார்.

உடனே மூஸா (அலை) வானவரை (முகத்தில்) அறைந்து, அவரது கண்ணைப் பெயர்த்துவிட்டார்கள். அந்த வானவர் இறைவனிடம் திரும்பிச் சென்று, “மரணத்தை விரும்பாத உன் அடியார் ஒருவரிடம் என்னை நீ அனுப்பிவிட்டாய்! அவர் எனது கண்ணைப் பறித்துவிட்டார்” என்று கூறினார்.

அவருக்கு மீண்டும் கண்ணை வழங்கிய இறைவன், “நீர் என் அடியாரிடம் திரும்பிச் சென்று, நீங்கள் உயிர்வாழத்தானே விரும்புகின்றீர்கள்? அவ்வாறு நீங்கள் (நீண்ட காலம்) உயிர்வாழ விரும்பினால், ஒரு காளை மாட்டின் முதுகின்மேல் கையை வையுங்கள்; (அதன் முதுகிலுள்ள முடிகளில்) உங்களது கை மறைக்கும் அளவுக்கு ஒவ்வொரு முடிக்குப் பகரமாக ஓர் ஆண்டு (இந்த உலகில்) நீங்கள் வாழலாம் என்று சொல்வீராக!” என்று கூறினான்.

(அவ்வாறே அந்த வானவர் திரும்பி வந்து மூஸா (அலை) அவர்களிடம் கூறியபோது) மூஸா (அலை), “பிறகு என்ன நடக்கும்?” என்று கேட்டார்கள். வானவர், “பிறகு நீங்கள் மரணிக்கத்தான் வேண்டும்” என்றார்.

மூஸா (அலை), “அப்படியானால் இப்போதே விரைவாக (என் உயிரை எடுத்துக்கொள்!) இறைவா! பைத்துல் மக்திஸ் எனும் புனித பூமியிலிருந்து கல்லெறி தூரத்தில் என்னை இறக்கச் செய்து (அங்கேயே அடக்கம் செய்து)விடு” என்று வேண்டினார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நான் (இப்போது) அந்த இடத்தில் இருந்தால், செம்மணற்குன்றின் கீழே சாலையோரமாக அவர் அடக்கப்பட்டிருக்கும் இடத்தை உங்களுக்குக் காட்டியிருப்பேன்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி) வழியாக, ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்)


குறிப்பு :

“அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) எங்களுக்கு அறிவித்த ஹதீஸ்களுள் இதுவும் ஒன்றாகும்” என்று அறிவிப்பாளர் ஹம்மாம் பின் முனப்பிஹ் (ரஹ்) குறிப்பிடுகின்றார்.

ஹதீஸ் எண் 4360இன் பின்குறிப்பையும் காண்க.

Share this Hadith:

Leave a Comment