அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4463

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الدَّارِمِيُّ، أَخْبَرَنَا أَبُو الْيَمَانِ، أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ يَا عَائِشُ هَذَا جِبْرِيلُ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ ‏”‏ ‏.‏ قَالَتْ فَقُلْتُ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ ‏.‏ قَالَتْ وَهُوَ يَرَى مَا لاَ أَرَى ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஒரு நாள் என்னிடம்) “ஆயிஷ்! இதோ (வானவர்) ஜிப்ரீல் உனக்கு ஸலாம் உரைக்கின்றார்” என்று சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் ஸலாம்) சொன்னேன். நான் பார்க்க முடியாததை அவர்கள் பார்க்கின்றார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4462

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا عَبْدُ الرَّحِيمِ بْنُ سُلَيْمَانَ، وَيَعْلَى بْنُ عُبَيْدٍ، عَنْ زَكَرِيَّاءَ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ أَنَّهَا حَدَّثَتْهُ :‏ ‏

أَنَّ النَّبِيَّ صلى الله عليه وسلم قَالَ لَهَا ‏ “‏ إِنَّ جِبْرِيلَ يَقْرَأُ عَلَيْكِ السَّلاَمَ ‏”‏ ‏.‏ قَالَتْ فَقُلْتُ وَعَلَيْهِ السَّلاَمُ وَرَحْمَةُ اللَّهِ ‏


حَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا الْمُلاَئِيُّ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ أَبِي زَائِدَةَ، قَالَ سَمِعْتُ عَامِرًا، يَقُولُ حَدَّثَنِي أَبُو سَلَمَةَ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، أَنَّ عَائِشَةَ، حَدَّثَتْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ لَهَا ‏.‏ بِمِثْلِ حَدِيثِهِمَا ‏

وَحَدَّثَنَاهُ إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَسْبَاطُ بْنُ مُحَمَّدٍ، عَنْ زَكَرِيَّاءَ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

நபி (ஸல்) என்னிடம் (ஒரு நாள்), “(வானவர்) ஜிப்ரீல் உனக்கு ஸலாம் கூறுகின்றார்” என்று சொன்னார்கள். நான் “வ அலைஹிஸ் ஸலாம் வ ரஹ்மத்துல்லாஹி” (அவர்மீதும் சாந்தியும் இறைவனின் கருணையும் உண்டாகட்டும்) என்று (பதில் ஸலாம்) சொன்னேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4461

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ، – يَعْنِي ابْنَ بِلاَلٍ – عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ :‏ ‏

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ ‏ “‏ فَضْلُ عَائِشَةَ عَلَى النِّسَاءِ كَفَضْلِ الثَّرِيدِ عَلَى سَائِرِ الطَّعَامِ ‏”‏ ‏


حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ قَالُوا حَدَّثَنَا إِسْمَاعِيلُ، يَعْنُونَ ابْنَ جَعْفَرٍ ح وَحَدَّثَنَا قُتَيْبَةُ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ، – يَعْنِي ابْنَ مُحَمَّدٍ – كِلاَهُمَا عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم ‏.‏ بِمِثْلِهِ وَلَيْسَ فِي حَدِيثِهِمَا سَمِعْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم ‏.‏ وَفِي حَدِيثِ إِسْمَاعِيلَ أَنَّهُ سَمِعَ أَنَسَ بْنَ مَالِكٍ ‏.‏

“ஆயிஷாவுக்கு (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் இருக்கும் சிறப்பானது, (மற்ற) உணவுகளைக் காட்டிலும் ‘ஸரீத்’ எனும் (தக்கடி) உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4460

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ الْحَنْظَلِيُّ، وَحَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ، كِلاَهُمَا عَنْ أَبِي نُعَيْمٍ، قَالَ عَبْدٌ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا عَبْدُ الْوَاحِدِ بْنُ أَيْمَنَ، حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ، عَنِ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا خَرَجَ أَقْرَعَ بَيْنَ نِسَائِهِ فَطَارَتِ الْقُرْعَةُ عَلَى عَائِشَةَ وَحَفْصَةَ فَخَرَجَتَا مَعَهُ جَمِيعًا وَكَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِذَا كَانَ بِاللَّيْلِ سَارَ مَعَ عَائِشَةَ يَتَحَدَّثُ مَعَهَا فَقَالَتْ حَفْصَةُ لِعَائِشَةَ أَلاَ تَرْكَبِينَ اللَّيْلَةَ بَعِيرِي وَأَرْكَبُ بَعِيرَكِ فَتَنْظُرِينَ وَأَنْظُرُ قَالَتْ بَلَى ‏.‏ فَرَكِبَتْ عَائِشَةُ عَلَى بَعِيرِ حَفْصَةَ وَرَكِبَتْ حَفْصَةُ عَلَى بَعِيرِ عَائِشَةَ فَجَاءَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى جَمَلِ عَائِشَةَ وَعَلَيْهِ حَفْصَةُ فَسَلَّمَ ثُمَّ صَارَ مَعَهَا حَتَّى نَزَلُوا فَافْتَقَدَتْهُ عَائِشَةُ فَغَارَتْ فَلَمَّا نَزَلُوا جَعَلَتْ تَجْعَلُ رِجْلَهَا بَيْنَ الإِذْخِرِ وَتَقُولُ يَا رَبِّ سَلِّطْ عَلَىَّ عَقْرَبًا أَوْ حَيَّةً تَلْدَغُنِي رَسُولُكَ وَلاَ أَسْتَطِيعُ أَنْ أَقُولَ لَهُ شَيْئًا ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பயணம் மேற்கொள்ள விரும்பினால், (தம்முடன் அழைத்துச் செல்வதற்கு) தம் மனைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள்.  (ஒரு முறை) எனது பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருவரும் புறப்பட்டுச் சென்றோம். இரவு நேரப் பயணத்தில் அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) என்னுடன் பேசிக் கொண்டேவருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா என்னிடம், “இன்றிரவு நீங்கள் எனது ஒட்டகத்தில் பயணம் செய்துபாருங்கள்; நான் உங்களது ஒட்டகத்தில் பயணம் செய்துபார்க்கின்றேன்” என்று கேட்டார்கள். நான் “சரி” என்று (ஒப்புதல்) கூறினேன்.

ஆகவே, நான் ஹஃப்ஸாவின் ஒட்டகத்தில் ஏறிக்கொண்டேன்; ஹஃப்ஸா எனது ஒட்டகத்தில் ஏறிக்கொண்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (ஹஃப்ஸா இருந்த) எனது ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். அவருக்கு அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) முகமன் சொன்னார்கள். பிறகு அவருடன் பயணத்தைத் தொடர்ந்தார்கள்.

(பயணத்தின் இடையே) ஓரிடத்தில் இறங்கித் தங்கினார்கள். அப்போது அல்லாஹ்வின்  தூதர் (ஸல்) என்னுடன் இல்லாமலிப்பதை எண்ணி, எனக்குப் பொறாமை பொங்கியது. அவர்கள் இறங்கித் தங்கிய அந்த நேரத்தில் நான் எனது இரு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, என் மீது ஏற்பட்ட கழிவிரக்கத்தால்,“இறைவா! ஒரு தேளையோ பாம்பையோ என்மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று புலம்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4459

حَدَّثَنِي عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ جَدِّي، حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ، قَالَ قَالَ ابْنُ شِهَابٍ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ، وَعُرْوَةُ بْنُ الزُّبَيْرِ، فِي رِجَالٍ مِنْ أَهْلِ الْعِلْمِ أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ :‏ ‏

كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ وَهُوَ صَحِيحٌ ‏”‏ إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ فِي الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرُ ‏”‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَلَمَّا نَزَلَ بِرَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَأْسُهُ عَلَى فَخِذِي غُشِيَ عَلَيْهِ سَاعَةً ثُمَّ أَفَاقَ فَأَشْخَصَ بَصَرَهُ إِلَى السَّقْفِ ثُمَّ قَالَ ‏”‏ اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى ‏”‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ قُلْتُ إِذًا لاَ يَخْتَارُنَا ‏.‏ قَالَتْ عَائِشَةُ وَعَرَفْتُ الْحَدِيثَ الَّذِي كَانَ يُحَدِّثُنَا بِهِ وَهُوَ صَحِيحٌ فِي قَوْلِهِ ‏”‏ إِنَّهُ لَمْ يُقْبَضْ نَبِيٌّ قَطُّ حَتَّى يَرَى مَقْعَدَهُ مِنَ الْجَنَّةِ ثُمَّ يُخَيَّرُ ‏”‏ ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَكَانَتْ تِلْكَ آخِرُ كَلِمَةٍ تَكَلَّمَ بِهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم قَوْلَهُ ‏”‏ اللَّهُمَّ الرَّفِيقَ الأَعْلَى ‏”‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உடல் நலத்துடன் இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடம் காட்டப்பட்டு, பிறகு (மேலும் சில காலம் உயிர்வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று கூறுவார்கள்.

பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, தமது தலையை எனது மடிமீது வைத்திருந்த நிலையில் சிறிது நேரம் மயக்கமுற்றார்கள். பிறகு அவர்களுக்கு மயக்கம் தெளிந்தபோது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலைகுத்தி நின்றது. பிறகு, “இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்!)” என்று வேண்டினார்கள். அப்போது நான், “அவர்கள் (இப்போது) நம்முடன் சேர்ந்திருப்பதை தேர்ந்துகொள்ளவில்லை” என்று (மனத்திற்குள்) கூறிக்கொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) உடல் நலத்துடன் இருந்தபோது, “சொர்க்கத்தில் தமது இருப்பிடம் காட்டப்பட்டு, பிறகு (மேலும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப்படாத வரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று அவர்களின் கூற்று இதுதான் என நான் புரிந்துகொண்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) பேசிய இறுதி வார்த்தை “அல்லாஹும்மர் ரஃபீக்கல் அஃலா’ (இறைவா! உயர்ந்த தோழர்களுடன் என்னையும் சேர்த்தருள்!) என்பதாகவே இருந்தது.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

இந்த ஹதீஸை, அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவையில் ஸயீத் பின் அல்முஸய்யப், உர்வா பின் அஸ்ஸுபைர் (ரஹ்) ஆகியோர் அறிவித்தனர்.

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4458

وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، عَنْ عُرْوَةَ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

كُنْتُ أَسْمَعُ أَنَّهُ لَنْ يَمُوتَ نَبِيٌّ حَتَّى يُخَيَّرَ بَيْنَ الدُّنْيَا وَالآخِرَةِ – قَالَتْ – فَسَمِعْتُ النَّبِيَّ صلى الله عليه وسلم فِي مَرَضِهِ الَّذِي مَاتَ فِيهِ وَأَخَذَتْهُ بُحَّةٌ يَقُولُ ‏{‏ مَعَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ وَالصِّدِّيقِينَ وَالشُّهَدَاءِ وَالصَّالِحِينَ وَحَسُنَ أُولَئِكَ رَفِيقًا‏}‏ قَالَتْ فَظَنَنْتُهُ خُيِّرَ حِينَئِذٍ ‏


حَدَّثَنَاهُ أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا وَكِيعٌ، ح وَحَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي قَالاَ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سَعْدٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ ‏

“உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில் தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று (நபி (ஸல்) கூறுவதை) நான் செவியுறுபவளாக இருந்தேன்.

நபி (ஸல்) இறந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்டிக்கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), “அல்லாஹ்வின் அருள் பெற்ற இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த் தியாகிகள், நல்லவர்கள் ஆகியோருடன் இருப்பார்கள். அவர்கள்தாம் மிகச் சிறந்த நண்பர்கள் ஆவர்” (4:69) எனும் இறைவசனத்தைக் கூறுவதை நான் கேட்டேன்.

ஆகவே “இம்மை மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு இப்போது அவர்களுக்கும் வழங்கப்பட்டுவிட்டது” என்று நான் எண்ணிக்கொண்டேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4457

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ، عَنْ عَبَّادِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ، عَنْ عَائِشَةَ أَنَّهَا أَخْبَرَتْهُ :‏

‏أَنَّهَا سَمِعَتْ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم يَقُولُ قَبْلَ أَنْ يَمُوتَ وَهُوَ مُسْنِدٌ إِلَى صَدْرِهَا وَأَصْغَتْ إِلَيْهِ وَهُوَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ اغْفِرْ لِي وَارْحَمْنِي وَأَلْحِقْنِي بِالرَّفِيقِ ‏”‏


حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَأَبُو كُرَيْبٍ قَالاَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، ح وَحَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي ح، وَحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ، كُلُّهُمْ عَنْ هِشَامٍ، بِهَذَا الإِسْنَادِ مِثْلَهُ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) இறப்பதற்கு முன்பு அவர்கள் என் நெஞ்சின் மீது தம்மைச் சாய்த்தபடி இருக்க, அவர்கள் (வாய்) பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக்கொண்டிருந்தபோது, அவர்கள், “இறைவா! என்னை மன்னித்து, எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக” என்று பிரார்த்தித்ததை நான் செவியுற்றேன்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4456

وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ وَجَدْتُ فِي كِتَابِي عَنْ أَبِي أُسَامَةَ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ قَالَتْ :‏ ‏

إِنْ كَانَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لَيَتَفَقَّدُ يَقُولُ ‏ “‏ أَيْنَ أَنَا الْيَوْمَ أَيْنَ أَنَا غَدًا ‏”‏ ‏.‏ اسْتِبْطَاءً لِيَوْمِ عَائِشَةَ ‏.‏ قَالَتْ فَلَمَّا كَانَ يَوْمِي قَبَضَهُ اللَّهُ بَيْنَ سَحْرِي وَنَحْرِي ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (மரணப் படுக்கையில் இருந்தபோது) என்னிடம் தங்குகின்ற முறைநாள் தள்ளிப்போவதாக எண்ணிக் கொண்டு, “இன்று நான் எங்கிருப்பேன்? நாளை நான் எங்கிருப்பேன்?” என்று கேட்டுக்கொண்டிருந்தார்கள். எனது முறைநாளில் எனது கழுத்துக்கும் எனது மார்புக்கும் நடுவில் (அவர்கள் தலை சாய்ந்திருந்த நிலையில்) அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றினான்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4455

حَدَّثَنِي الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ النَّضْرِ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ حَدَّثَنِي وَقَالَ الآخَرَانِ، حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ سَعْدٍ، حَدَّثَنِي أَبِي، عَنْ صَالِحٍ، عَنِ ابْنِ شِهَابٍ أَخْبَرَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ، أَنَّ عَائِشَةَ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَتْ :‏ ‏

أَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم فَاطِمَةَ بِنْتَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَاسْتَأْذَنَتْ عَلَيْهِ وَهُوَ مُضْطَجِعٌ مَعِي فِي مِرْطِي فَأَذِنَ لَهَا فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَزْوَاجَكَ أَرْسَلْنَنِي إِلَيْكَ يَسْأَلْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ وَأَنَا سَاكِتَةٌ – قَالَتْ – فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ أَىْ بُنَيَّةُ أَلَسْتِ تُحِبِّينَ مَا أُحِبُّ ‏”‏ ‏.‏ فَقَالَتْ بَلَى ‏.‏ قَالَ ‏”‏ فَأَحِبِّي هَذِهِ ‏”‏ ‏.‏ قَالَتْ فَقَامَتْ فَاطِمَةُ حِينَ سَمِعَتْ ذَلِكَ مِنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَرَجَعَتْ إِلَى أَزْوَاجِ النَّبِيِّ صلى الله عليه وسلم فَأَخْبَرَتْهُنَّ بِالَّذِي قَالَتْ وَبِالَّذِي قَالَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقُلْنَ لَهَا مَا نُرَاكِ أَغْنَيْتِ عَنَّا مِنْ شَىْءٍ فَارْجِعِي إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقُولِي لَهُ إِنَّ أَزْوَاجَكَ يَنْشُدْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ ‏.‏ فَقَالَتْ فَاطِمَةُ وَاللَّهِ لاَ أُكَلِّمُهُ فِيهَا أَبَدًا ‏.‏ قَالَتْ عَائِشَةُ فَأَرْسَلَ أَزْوَاجُ النَّبِيِّ صلى الله عليه وسلم زَيْنَبَ بِنْتَ جَحْشٍ زَوْجَ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهِيَ الَّتِي كَانَتْ تُسَامِينِي مِنْهُنَّ فِي الْمَنْزِلَةِ عِنْدَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَلَمْ أَرَ امْرَأَةً قَطُّ خَيْرًا فِي الدِّينِ مِنْ زَيْنَبَ وَأَتْقَى لِلَّهِ وَأَصْدَقَ حَدِيثًا وَأَوْصَلَ لِلرَّحِمِ وَأَعْظَمَ صَدَقَةً وَأَشَدَّ ابْتِذَالاً لِنَفْسِهَا فِي الْعَمَلِ الَّذِي تَصَدَّقُ بِهِ وَتَقَرَّبُ بِهِ إِلَى اللَّهِ تَعَالَى مَا عَدَا سَوْرَةً مِنْ حَدٍّ كَانَتْ فِيهَا تُسْرِعُ مِنْهَا الْفَيْئَةَ قَالَتْ فَاسْتَأْذَنَتْ عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم وَرَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم مَعَ عَائِشَةَ فِي مِرْطِهَا عَلَى الْحَالَةِ الَّتِي دَخَلَتْ فَاطِمَةُ عَلَيْهَا وَهُوَ بِهَا فَأَذِنَ لَهَا رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَزْوَاجَكَ أَرْسَلْنَنِي إِلَيْكَ يَسْأَلْنَكَ الْعَدْلَ فِي ابْنَةِ أَبِي قُحَافَةَ ‏.‏ قَالَتْ ثُمَّ وَقَعَتْ بِي فَاسْتَطَالَتْ عَلَىَّ وَأَنَا أَرْقُبُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَأَرْقُبُ طَرْفَهُ هَلْ يَأْذَنُ لِي فِيهَا – قَالَتْ – فَلَمْ تَبْرَحْ زَيْنَبُ حَتَّى عَرَفْتُ أَنَّ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم لاَ يَكْرَهُ أَنْ أَنْتَصِرَ – قَالَتْ – فَلَمَّا وَقَعْتُ بِهَا لَمْ أَنْشَبْهَا حِينَ أَنْحَيْتُ عَلَيْهَا – قَالَتْ – فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَتَبَسَّمَ ‏”‏ إِنَّهَا ابْنَةُ أَبِي بَكْرٍ ‏”‏ ‏


حَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ قُهْزَاذَ، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُثْمَانَ حَدَّثَنِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْمُبَارَكِ عَنْ يُونُسَ، عَنِ الزُّهْرِيِّ، بِهَذَا الإِسْنَادِ ‏.‏ مِثْلَهُ فِي الْمَعْنَى غَيْرَ أَنَّهُ قَالَ فَلَمَّا وَقَعْتُ بِهَا لَمْ أَنْشَبْهَا أَنْ أَثْخَنْتُهَا غَلَبَةً ‏‏

நபி (ஸல்) அவர்களின் மனைவியர், நபியவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை (ஒரு முறை) நபியவர்களிடம் அனுப்பிவைத்தார்கள். ஃபாத்திமா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, உள்ளே வர அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) என்னுடன் எனது போர்வைக்குள் படுத்திருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு உள்ளே வர அனுமதியளித்தார்கள்.

ஃபாத்திமா (ரலி) (உள்ளே வந்து), “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் மனைவியர் அபூகுஹாஃபாவின் (மகன் அபூபக்ரு உடைய) மகள் (ஆயிஷா) விஷயத்தில் (நீங்கள் காட்டுவதைப் போன்றே பிற மனைவியரிடமும் வாஞ்சை காட்டி) சமநீதியுடன் நடந்துகொள்ளும்படி கேட்குமாறு என்னை உங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்” என்று கூறினார்.

நான் அமைதியாக இருந்தேன்.

நபி (ஸல்), “என் அன்பு மகளே! நான் நேசம் கொள்வதை / கொள்பவரை நீயும் நேசிப்பாய் அல்லவா?” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “ஆம்!” என்று கூறினார்கள். நபி (ஸல்) (என்னைக் காட்டி) “அப்படியானால், இவரை நேசிப்பாயாக!” என்று கூறினார்கள்.

நபி (ஸல்) இவ்வாறு கூறியதைக் கேட்டவுடன் ஃபாத்திமா (ரலி) எழுந்து, நபி (ஸல்) அவர்களின் மனைவியரிடம் திரும்பிச் சென்று, தாம் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னதையும் அதற்கு நபி (ஸல்) அளித்த பதிலையும் தெரிவித்தார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்களின் மனைவியர், எங்களுக்கு நீங்கள் (இப்போது) எந்த நன்மையும் செய்துவிடவில்லை என்று கருதுகின்றோம். ஆகவே, (மீண்டும்) நபி (ஸல்) அவர்களிடம் திரும்பிச் சென்று, “உங்கள் மனைவி அபூகுஹாஃபாவின் (மகன் அபூபக்ரு உடைய) மகள் (ஆயிஷா) விஷயத்தில் (நீங்கள் காட்டுவதைப் போன்றே பிற மனைவியரிடமும் வாஞ்சை காட்டி) சமநீதியுடன் நடந்துகொள்ளும்படி கேட்குமாறு என்னை உங்களிடம் அனுப்பிவைத்துள்ளார்கள்” என்று கூறுமாறு வேண்டினார்கள்.

அதற்கு ஃபாத்திமா (ரலி), “அல்லாஹ்வின் மீதாணையாக! (இனி) ஆயிஷா (ரலி) தொடர்பாக நான் நபியவர்களிடம் ஒருபோதும் பேசமுடியாது” என்று கூறி (மறுத்து) விட்டார்கள்.

ஆகவே, நபி (ஸல்) அவர்களின் மனைவியருள் ஒருவரான ஸைனப் பின்த்தி ஜஹ்ஷு (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள். ஸைனப் அவர்கள் நபியவர்களின் மனைவியருள் நபியவர்களிடம் அந்தஸ்து பெற்றிருந்த விஷயத்தில் எனக்குப் போட்டியாக இருந்தவராவார். மார்க்க ஈடுபாட்டிலும் இறைவனை அஞ்சி நடப்பதிலும் உண்மை பேசுவதிலும் உறவுகளை அனுசரிப்பதிலும் தாராளமாகத் தானம் வழங்குவதிலும் இறைநெருக்கத்தையும் வாய்மையையும் தரும் நற்செயல்களில் தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக்கொள்வதிலும் ஸைனப் அவர்களைவிடச் சிறந்த ஒரு பெண்ணை நான் ஒருபோதும் கண்டதில்லை. ஆயினும், அவர் முன்கோபக்காரராக இருந்தார். அதே வேகத்தில் கோபம் தணியக்கூடியவராகவும் இருந்தார்.

அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து உள்ளே நுழைய அனுமதி கேட்டார். அப்போது நபி (ஸல்) போர்வைக்குள் என்னுடன் இருந்தார்கள். ஃபாத்திமா (ரலி) தம்மிடம் வந்தபோது இருந்த நிலையிலேயே அப்போதும் நபியவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) ஸைனப் (ரலி) அவர்களுக்கு உள்ளேவர அனுமதியளித்தார்கள்.

ஸைனப் (ரலி), “அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் அபூகுஹாஃபாவின் (மகன் அபூபக்ரு உடைய) மகள் (ஆயிஷா) விஷயத்தில் (அவரிடம் அன்பு காட்டுவதைப் போன்றே பிற மனைவியரிடமும் அன்புகாட்டி) சமநீதியுடன் நடந்துகொள்ளுமாறு கேட்டு என்னை உங்களிடம் உங்களுடைய மனைவியர் அனுப்பியுள்ளார்கள்” என்று கூறினார்.

பிறகு ஸைனப் (என்ன நினைத்தாரோ), என்னை எல்லைமீறி ஏசத் தொடங்கினார். நான் (அவருக்குப் பதில் சொல்ல) நபி (ஸல்) எனக்கு அனுமதியளிப்பார்களா? கண் சாடையாவது காட்டுவார்களா? என்று எதிர்பார்த்தேன். ஆனால், ஸைனப் தொடர்ந்து ஏசிக்கொண்டேபோக, அவருக்கு நான் பதிலடி கொடுப்பதை நபி (ஸல்) வெறுக்கமாட்டார்கள் என நான் அறிந்து கொண்டேன்.

நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, அவரை வாயடைக்கச் செய்ய எனக்கு நீண்ட நேரம் பிடிக்கவில்லை. அப்போது நபி (ஸல்) புன்னகைத்தபடியே “இவள் அபூபக்ரின் மகளாயிற்றே!” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)


குறிப்பு :

அப்துல்லாஹ் பின் அல்முபாரக் (ரஹ்) வழி அறிவிப்பில், “நான் அவருக்குப் பதில் சொல்ல ஆரம்பித்து, வெகுவிரைவிலேயே அவரை முற்றாக அடக்கிவிட்டேன்” என்று ஆயிஷா (ரலி) கூறியதாக இடம்பெற்றுள்ளது.

அத்தியாயம்: 44, பாடம்: 13, ஹதீஸ் எண்: 4454

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، حَدَّثَنَا عَبْدَةُ، عَنْ هِشَامٍ، عَنْ أَبِيهِ، عَنْ عَائِشَةَ :‏ ‏

أَنَّ النَّاسَ كَانُوا يَتَحَرَّوْنَ بِهَدَايَاهُمْ يَوْمَ عَائِشَةَ يَبْتَغُونَ بِذَلِكَ مَرْضَاةَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) என் வீட்டில் தங்கும் முறைநாளையே மக்கள் தம்முடைய அன்பளிப்புகளை (அவர்களுக்கு) வழங்குவதற்காகத் தேர்ந்தெடுத்துவந்தார்கள். அதன் மூலம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உவப்பைப் பெற விரும்பியே அப்படிச் செய்தனர்.

அறிவிப்பாளர் : அன்னை ஆயிஷா (ரலி)