அத்தியாயம்: 44, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4391

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ وَهْبٍ، حَدَّثَنَا عَمِّي عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ، أَخْبَرَنِي عَمْرُو بْنُ الْحَارِثِ، أَنَّ أَبَا يُونُسَ، مَوْلَى أَبِي هُرَيْرَةَ حَدَّثَهُ عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنْ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم قَالَ ‏ “‏ بَيْنَا أَنَا نَائِمٌ أُرِيتُ أَنِّي أَنْزِعُ عَلَى حَوْضِي أَسْقِي النَّاسَ فَجَاءَنِي أَبُو بَكْرٍ فَأَخَذَ الدَّلْوَ مِنْ يَدِي لِيُرَوِّحَنِي فَنَزَعَ دَلْوَيْنِ وَفِي نَزْعِهِ ضُعْفٌ وَاللَّهُ يَغْفِرُ لَهُ فَجَاءَ ابْنُ الْخَطَّابِ فَأَخَذَ مِنْهُ فَلَمْ أَرَ نَزْعَ رَجُلٍ قَطُّ أَقْوَى مِنْهُ حَتَّى تَوَلَّى النَّاسُ وَالْحَوْضُ مَلآنُ يَتَفَجَّرُ ‏”‏

“நான் உறங்கிக்கொண்டிருக்கையில் (கனவில்) ஒரு நீர்த் தடாகத்தின் அருகில் நான் இருந்துகொண்டு, நீர் இறைத்து மக்களுக்குப் புகட்டிக்கொண்டிருக்கக் கண்டேன். அப்போது அபூபக்ரு என்னிடம் வந்து எனக்கு ஓய்வளிப்பதற்காக என் கரத்திலிருந்த அந்த வாளியை வாங்கி, இரண்டு வாளிகள் நீர் இறைத்தார். அவர் இறைத்தபோது அவருக்குச் (சற்று) சோர்வு தென்பட்டது. – அவருக்கு அல்லாஹ் மன்னிப்பு அருள்வானாக –

பிறகு கத்தாபின் மகன் (உமர்) வந்தார். அவர் அபூபக்ரு அவர்களிடமிருந்து (அந்த வாளியை) வாங்கி, மக்கள் (தாகம் தீரத் தாங்களும் அருந்தி, தம் ஒட்டகங்களுக்கும் புகட்டிவிட்டுத்) திரும்பிச் செல்லும்வரை இறைத்துக்கொண்டேயிருந்தார். தடாகம் நிரம்பி வழிந்துகொண்டிருந்தது. அவரைப் போன்று நீர் இறைக்கின்ற பலசாலியான ஒருவரை நான் ஒருபோதும் பார்த்ததில்லை” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

Share this Hadith:

Leave a Comment