அத்தியாயம்: 44, பாடம்: 2, ஹதீஸ் எண்: 4398

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ :‏

لَمَّا تُوُفِّيَ عَبْدُ اللَّهِ بْنُ أُبَىٍّ ابْنُ سَلُولَ جَاءَ ابْنُهُ عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَسَأَلَهُ أَنْ يُعْطِيَهُ قَمِيصَهُ أَنْ يُكَفِّنَ فِيهِ أَبَاهُ فَأَعْطَاهُ ثُمَّ سَأَلَهُ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم لِيُصَلِّيَ عَلَيْهِ فَقَامَ عُمَرُ فَأَخَذَ بِثَوْبِ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَتُصَلِّي عَلَيْهِ وَقَدْ نَهَاكَ اللَّهُ أَنْ تُصَلِّيَ عَلَيْهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ إِنَّمَا خَيَّرَنِيَ اللَّهُ فَقَالَ ‏{‏ اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً‏}‏ وَسَأَزِيدُ عَلَى سَبْعِينَ ‏”‏ ‏.‏ قَالَ إِنَّهُ مُنَافِقٌ ‏.‏ فَصَلَّى عَلَيْهِ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم وَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ ‏{‏ وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ‏}‏ ‏.‏


وَحَدَّثَنَاهُ مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَعُبَيْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ، قَالاَ حَدَّثَنَا يَحْيَى، – وَهُوَ الْقَطَّانُ – عَنْ عُبَيْدِ اللَّهِ، بِهَذَا الإِسْنَادِ فِي مَعْنَى حَدِيثِ أَبِي أُسَامَةَ وَزَادَ قَالَ فَتَرَكَ الصَّلاَةَ عَلَيْهِمْ ‏

அப்துல்லாஹ் பின் உபை (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) இறந்தபோது, அவருடைய மகன் அப்துல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உபை (ரலி), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தம் தந்தைக்குப் பிரேத ஆடை (கஃபன்) அணிவிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சட்டையைத் தருமாறு கோரினார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தமது சட்டையை அவரிடம் கொடுத்தார்கள். பிறகு அப்துல்லாஹ் (ரலி), தம் தந்தைக்கு இறுதித் தொழுகையை முன்னின்று நடத்தும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வேண்டினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு(ஜனாஸாத் தொழுகை)த் தொழுவிக்க எழுந்தார்கள்.

உடனே உமர் (ரலி) எழுந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ஆடையைப் பிடித்துக்கொண்டு, “அல்லாஹ்வின் தூதரே! (நயவஞ்சகரான) இவருக்குத் தொழுகை நடத்த வேண்டாமென அல்லாஹ் உங்களுக்குத் தடை விதித்திருக்க, இவருக்கா தொழுவிக்கப் போகின்றீர்கள்?” என்று கேட்டார்கள்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “(பாவமன்னிப்புக் கோரவும் கோராமலிருக்கவும்) எனக்கு அல்லாஹ் உரிமையளித்துள்ளான்” என்று கூறிவிட்டு, “(நபியே!) அவர்களுக்காக நீர் பாவமன்னிப்புக் கோரும்! அல்லது அவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோராமல் இரும்! அவர்களுக்காக நீர் எழுபது தடவை பாவமன்னிப்புக் கோரினாலும் அவர்களை அல்லாஹ் ஒருபோதும் மன்னிக்க மாட்டான்’ என்று (9:80 வசனத்தில்) கூறுகின்றான். நான் எழுபது தடவையைவிட அதிகமாக (இவருக்காகப்) பாவமன்னிப்புக் கோருவேன்” என்று சொன்னார்கள்.

உமர் (ரலி), “இவர் நயவஞ்சகராயிற்றே!” என்று சொன்னார்கள். இருந்தும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவருக்கு (ஜனாஸாத்) தொழுகையை முன்னின்று நடத்தினார்கள்.

அப்போது வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் “அவர்களில் இறந்துவிட்ட எவருக்காகவும் ஒருபோதும் நீர் தொழுகை நடத்தாதீர்! அவரது சமாதி அருகிலும் நிற்காதீர்” (எனும் 9:84) வசனத்தை அருளினான்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)


குறிப்பு :

யஹ்யா அல் கத்தான் (ரஹ்) வழி அறிவிப்பில், “… ஆகவே, அவர்களுக்காக ஜனாஸாத் தொழுவிப்பதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) விட்டுவிட்டார்கள்” என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment