அத்தியாயம்: 44, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4427

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، وَابْنُ بَشَّارٍ – وَاللَّفْظُ لاِبْنِ الْمُثَنَّى – قَالاَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ حَدَّثَنَا شُعْبَةُ، قَالَ سَمِعْتُ أَبَا إِسْحَاقَ، يُحَدِّثُ عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، عَنْ حُذَيْفَةَ قَالَ :‏ ‏

جَاءَ أَهْلُ نَجْرَانَ إِلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا يَا رَسُولَ اللَّهِ ابْعَثْ إِلَيْنَا رَجُلاً أَمِينًا ‏.‏ فَقَالَ ‏ “‏ لأَبْعَثَنَّ إِلَيْكُمْ رَجُلاً أَمِينًا حَقَّ أَمِينٍ حَقَّ أَمِينٍ ‏”‏ ‏.‏ قَالَ فَاسْتَشْرَفَ لَهَا النَّاسُ – قَالَ – فَبَعَثَ أَبَا عُبَيْدَةَ بْنَ الْجَرَّاحِ ‏


حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، أَخْبَرَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ أَبِي إِسْحَاقَ، بِهَذَا الإِسْنَادِ نَحْوَهُ

நஜ்ரான் (யமன்)வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “அல்லாஹ்வின்  தூதரே! நம்பிக்கைக்குரிய ஒருவரை எங்களுடன் அனுப்பிவையுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “நம்பகத் தன்மையில் மிகவும் முறையோடு நடந்துகொள்ளும் நம்பிக்கையாளர் (அமீன்) ஒருவரை உங்களுடன் நான் உறுதியாக அனுப்புவேன்” என்று சொன்னார்கள். அப்போது மக்களில் பலர் (அந்த ‘அமீன்’ எனும் பெயருடன் அழைப்பாளராய்ச் செல்லும் சிறப்பு, தமக்குக் கிட்டாதா என) தலையை உயர்த்தி (ஆர்வம்) காட்டினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் (ரலி) அவர்களை அனுப்பிவைத்தார்கள்.

அறிவிப்பாளர் : ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4426

حَدَّثَنِي عَمْرٌو النَّاقِدُ، حَدَّثَنَا عَفَّانُ، حَدَّثَنَا حَمَّادٌ، – وَهُوَ ابْنُ سَلَمَةَ – عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ :‏ ‏

أَنَّ أَهْلَ الْيَمَنِ، قَدِمُوا عَلَى رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فَقَالُوا ابْعَثْ مَعَنَا رَجُلاً يُعَلِّمْنَا السُّنَّةَ وَالإِسْلاَمَ ‏.‏ قَالَ فَأَخَذَ بِيَدِ أَبِي عُبَيْدَةَ فَقَالَ ‏ “‏ هَذَا أَمِينُ هَذِهِ الأُمَّةِ ‏”‏

யமன் வாசிகள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, “எங்களுக்கு இஸ்லாத்தையும் நபிவழியையும் கற்றுக்கொடுப்பதற்காக எங்களுடன் ஒருவரை அனுப்பிவையுங்கள்” என்று கேட்டுக்கொண்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அபூஉபைதா (ரலி) அவர்களின் கையைப் பிடித்து, “இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் ஆவார். (இவரை அழைத்துச் செல்லுங்கள்)” என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 7, ஹதீஸ் எண்: 4425

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، عَنْ خَالِدٍ، ح وَحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ ابْنُ عُلَيَّةَ، أَخْبَرَنَا خَالِدٌ، عَنْ أَبِي قِلاَبَةَ، قَالَ قَالَ أَنَسٌ :‏ ‏

قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏ “‏ إِنَّ لِكُلِّ أُمَّةٍ أَمِينًا وَإِنَّ أَمِينَنَا أَيَّتُهَا الأُمَّةُ أَبُو عُبَيْدَةَ بْنُ الْجَرَّاحِ ‏”‏ ‏

“ஒவ்வொரு சமுதாயத்துக்கும் (அதன்) நம்பிக்கைக்குரியவர் ஒருவர் உண்டு. சமுதாயமே! நமது நம்பிக்கைக்குரியவர் அபூஉபைதா பின் அல்ஜர்ராஹ் அவர்கள்தாம்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)