அத்தியாயம்: 44, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4428

حَدَّثَنِي أَحْمَدُ بْنُ حَنْبَلٍ، حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ :‏

عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم أَنَّهُ قَالَ لِحَسَنٍ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحْبِبْ مَنْ يُحِبُّهُ ‏”‏ ‏

நபி (ஸல்), (தம் பேரர்) ஹஸன் (ரலி) குறித்து, “இறைவா! நான் இவரை நேசிக்கின்றேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4432

حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ الرُّومِيِّ الْيَمَامِيُّ، وَعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ الْعَنْبَرِيُّ، قَالاَ حَدَّثَنَا النَّضْرُ بْنُ مُحَمَّدٍ، حَدَّثَنَا عِكْرِمَةُ، – وَهُوَ ابْنُ عَمَّارٍ – حَدَّثَنَا إِيَاسٌ، عَنْ أَبِيهِ قَالَ :‏

لَقَدْ قُدْتُ بِنَبِيِّ اللَّهِ صلى الله عليه وسلم وَالْحَسَنِ وَالْحُسَيْنِ بَغْلَتَهُ الشَّهْبَاءَ حَتَّى أَدْخَلْتُهُمْ حُجْرَةَ النَّبِيِّ صلى الله عليه وسلم هَذَا قُدَّامَهُ وَهَذَا خَلْفَهُ ‏

நான் நபி (ஸல்) அவர்களையும் (அவர்களுடைய பேரர்களான) ஹஸன், ஹுஸைன் (ரலி) ஆகியோரையும் அவர்களது கறுப்பு வெள்ளைக் கோவேறு கழுதையில் ஏற்றி அழைத்து வந்து, நபி (ஸல்) அவர்களின் இல்லத்திற்குக் கொண்டுவந்து சேர்த்தேன். இவர் (நபிக்கு) முன்பக்கத்திலும் அவர் (நபிக்குப்) பின்பக்கத்திலும் இருந்தனர்.

அறிவிப்பாளர் : ஸலமா பின் அல்அக்வஉ (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4431

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ، وَأَبُو بَكْرِ بْنُ نَافِعٍ قَالَ ابْنُ نَافِعٍ حَدَّثَنَا غُنْدَرٌ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، – وَهُوَ ابْنُ ثَابِتٍ – عَنِ الْبَرَاءِ قَالَ :‏

رَأَيْتُ رَسُولَ اللَّهِ صلى الله عليه وسلم وَاضِعًا الْحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَى عَاتِقِهِ وَهُوَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ ‏”‏ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்), (தம் பேரர்) ஹஸன் பின் அலீ (ரலி) அவர்களைத் தமது தோள்மீது வைத்துக்கொண்டு, “இறைவா! நான் இவரை நேசிக்கின்றேன். நீயும் இவரை நேசிப்பாயாக!” என்று வேண்டிக்கொண்டிருந்ததை நான் கண்டேன்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4430

حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ عَدِيٍّ، – وَهُوَ ابْنُ ثَابِتٍ – حَدَّثَنَا الْبَرَاءُ بْنُ عَازِبٍ قَالَ :‏

رَأَيْتُ الْحَسَنَ بْنَ عَلِيٍّ عَلَى عَاتِقِ النَّبِيِّ صلى الله عليه وسلم وَهُوَ يَقُولُ ‏ “‏ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ ‏”‏

நபி (ஸல்) அவர்களின் தோள்மீது ஹஸன் பின் அலீ (ரலி) அமர்ந்திருப்பதை நான் கண்டேன். “இறைவா! நான் இவரை நேசிக்கின்றேன். நீயும் இவரை நேசிப்பாயாக” என்று நபி (ஸல்) பிரார்த்தித்துக்கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)

அத்தியாயம்: 44, பாடம்: 8, ஹதீஸ் எண்: 4429

حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ، حَدَّثَنَا سُفْيَانُ، عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي يَزِيدَ، عَنْ نَافِعِ بْنِ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ :‏

خَرَجْتُ مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم فِي طَائِفَةٍ مِنَ النَّهَارِ لاَ يُكَلِّمُنِي وَلاَ أُكَلِّمُهُ حَتَّى جَاءَ سُوقَ بَنِي قَيْنُقَاعَ ثُمَّ انْصَرَفَ حَتَّى أَتَى خِبَاءَ فَاطِمَةَ فَقَالَ ‏”‏ أَثَمَّ لُكَعُ أَثَمَّ لُكَعُ ‏”‏ ‏.‏ يَعْنِي حَسَنًا فَظَنَنَّا أَنَّهُ إِنَّمَا تَحْبِسُهُ أُمُّهُ لأَنْ تُغَسِّلَهُ وَتُلْبِسَهُ سِخَابًا فَلَمْ يَلْبَثْ أَنْ جَاءَ يَسْعَى حَتَّى اعْتَنَقَ كُلُّ وَاحِدٍ مِنْهُمَا صَاحِبَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏”‏ اللَّهُمَّ إِنِّي أُحِبُّهُ فَأَحِبَّهُ وَأَحْبِبْ مَنْ يُحِبُّهُ ‏”‏

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஒரு பகல் வேளையில் சென்றுகொண்டிருந்தேன். ‘பனூ கைனுகா’ கடைவீதி வரை அவர்கள் என்னுடன் பேசவில்லை; நானும் அவர்களுடன் பேசவில்லை. (மௌனமாகவே நடந்தோம்).

பிறகு அங்கிருந்து திரும்பி (தம் மகள்) ஃபாத்திமா (ரலி) அவர்களின் குடிசைக்கு வந்து, “இங்கே அந்தப் பொடியன் (ஹஸன்) இருக்கின்றானா? இங்கே அந்தப் பொடியன் இருக்கின்றானா?” என்று கேட்டார்கள்.

ஹஸனின் தாயார், அவரை நீராட்டி நறுமண மாலையை அணிவிப்பதற்காகவே தாமதப்படுத்துகிறார் என்றே நாங்கள் எண்ணினோம். நீண்ட நேரம் கடந்திருக்கவில்லை. அதற்குள் குழந்தை (ஹஸன்) ஓடிவந்தார். உடனே நபியவர்களும் அவரும் ஒருவரையொருவர் கட்டியணைத்துக்கொண்டனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்), “இறைவா! நான் இவரை நேசிக்கின்றேன். இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நீ நேசிப்பாயாக” என்று பிரார்த்தித்தார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)