அத்தியாயம்: 5, பாடம்: 20, ஹதீஸ் எண்: 896

‏حَدَّثَنِي ‏ ‏عَمْرٌو النَّاقِدُ ‏ ‏وَزُهَيْرُ بْنُ حَرْبٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُيَيْنَةَ ‏ ‏قَالَ ‏ ‏عَمْرٌو ‏ ‏حَدَّثَنَا ‏ ‏سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏مُحَمَّدَ بْنَ سِيرِينَ ‏ ‏يَقُولُ سَمِعْتُ ‏ ‏أَبَا هُرَيْرَةَ ‏ ‏يَقُولُا ‏

‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِحْدَى صَلَاتَيْ ‏ ‏الْعَشِيِّ ‏ ‏إِمَّا الظُّهْرَ وَإِمَّا الْعَصْرَ فَسَلَّمَ فِي رَكْعَتَيْنِ ثُمَّ أَتَى ‏ ‏جِذْعًا ‏ ‏فِي قِبْلَةِ الْمَسْجِدِ فَاسْتَنَدَ إِلَيْهَا مُغْضَبًا وَفِي الْقَوْمِ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَعُمَرَ ‏ ‏فَهَابَا أَنْ يَتَكَلَّمَا وَخَرَجَ سَرَعَانُ النَّاسِ قُصِرَتْ الصَّلَاةُ فَقَامَ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَقُصِرَتْ الصَّلَاةُ أَمْ نَسِيتَ فَنَظَرَ النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَمِينًا وَشِمَالًا فَقَالَ مَا يَقُولُ ‏ ‏ذُو الْيَدَيْنِ ‏ ‏قَالُوا صَدَقَ لَمْ تُصَلِّ إِلَّا رَكْعَتَيْنِ ‏ ‏فَصَلَّى رَكْعَتَيْنِ وَسَلَّمَ ثُمَّ كَبَّرَ ثُمَّ سَجَدَ ثُمَّ كَبَّرَ فَرَفَعَ ثُمَّ كَبَّرَ وَسَجَدَ ثُمَّ كَبَّرَ وَرَفَعَ

‏قَالَ ‏ ‏وَأُخْبِرْتُ ‏ ‏عَنْ ‏ ‏عِمْرَانَ بْنِ حُصَيْنٍ ‏ ‏أَنَّهُ قَالَ ‏ ‏وَسَلَّمَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الرَّبِيعِ الزَّهْرَانِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادٌ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَيُّوبُ ‏ ‏عَنْ ‏ ‏مُحَمَّدٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي هُرَيْرَةَ ‏ ‏قَالَ ‏ ‏صَلَّى بِنَا رَسُولُ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِحْدَى صَلَاتَيْ ‏ ‏الْعَشِيِّ ‏ ‏بِمَعْنَى حَدِيثِ ‏ ‏سُفْيَانَ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு மதியத் தொழுகைகளில் ஒன்றான லுஹ்ரையோ அஸ்ரையோ தொழுவிக்கும்போது இரண்டு ரக்அத் முடிந்த உடனே ஸலாம் கொடுத்துவிட்டார்கள். பிறகு பள்ளிவாசலின் கிப்லாத் திசையிலிருந்த ஓர் ஈச்சமரக் கட்டைக்கு வந்து அதன்மீது சாய்ந்து கொண்டார்கள். அப்போது அவர்கள் ஏதோ கோபத்தில் இருந்தார்கள். மக்களிடையேயிருந்த அபூபக்ரு (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் நபியவர்களிடம் பேச்சுக்கொடுக்க அஞ்சினர். மக்களில் தொழுதுவிட்டு விரைந்து செல்பவர்கள் தொழுகை குறைக்கப்பட்டுவிட்டது என்று புறப்பட்டுச் சென்றும்விட்டனர்.

இந்நிலையில் துல்யதைன் (கிர்பாக் பின் அம்ரு) என்பவர் எழுந்து, “அல்லாஹ்வின் தூதரே! தொழுகை குறைக்கப்பட்டுவிட்டதா? அல்லது தாங்கள் மறந்துவிட்டீர்களா” என்று கேட்டார். உடனே நபி (ஸல்) வலப்பக்கமும் இடப்பக்கமும் (திரும்பிப்) பார்த்தார்கள். பிறகு, “துல்யதைன் என்ன சொல்கிறார்?” என்று கேட்டார்கள். மக்கள், “(ஆம்) அவர் சொல்வது உண்மைதான். தாங்கள் இரு ரக்அத்கள்தாம் தொழுவித்தீர்கள்” என்று கூறினர். உடனே நபி (ஸல்) மேலும் இரு ரக்அத்கள் தொழுவித்துவிட்டு ஸலாம் கொடுத்தார்கள். பிறகு தக்பீர் சொல்லி மற்றொரு ஸஜ்தாச் செய்தார்கள். பிறகு தக்பீர் சொல்லிவிட்டு எழுந்துவிட்டார்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)

குறிப்பு :

இம்ரான் பின் ஹுஸொய்ன் (ரலி) வழி அறிவிப்பில், “(இறுதியில்) ஸலாம் கொடுத்தார்கள்” எனக் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

Share this Hadith:

Leave a Comment