அத்தியாயம்: 5, பாடம்: 27, ஹதீஸ் எண்: 933

حَدَّثَنَا ‏ ‏إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏جَرِيرٌ ‏ ‏عَنْ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏عَنْ ‏ ‏الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ ‏
‏كَتَبَ ‏ ‏الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ ‏ ‏إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ إِذَا فَرَغَ مِنْ الصَّلَاةِ وَسَلَّمَ قَالَ ‏ ‏لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ اللَّهُمَّ لَا مَانِعَ لِمَا أَعْطَيْتَ وَلَا مُعْطِيَ لِمَا مَنَعْتَ وَلَا يَنْفَعُ ‏ ‏ذَا الْجَدِّ ‏ ‏مِنْكَ ‏ ‏الْجَدُّ ‏
‏و حَدَّثَنَاه ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏وَأَحْمَدُ بْنُ سِنَانٍ ‏ ‏قَالُوا ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو مُعَاوِيَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْأَعْمَشِ ‏ ‏عَنْ ‏ ‏الْمُسَيَّبِ بْنِ رَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏عَنْ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏مِثْلَهُ ‏ ‏قَالَ ‏ ‏أَبُو بَكْرٍ ‏ ‏وَأَبُو كُرَيْبٍ ‏ ‏فِي رِوَايَتِهِمَا قَالَ فَأَمْلَاهَا عَلَيَّ ‏ ‏الْمُغِيرَةُ ‏ ‏وَكَتَبْتُ بِهَا إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏و حَدَّثَنِي ‏ ‏مُحَمَّدُ بْنُ حَاتِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ بَكْرٍ ‏ ‏أَخْبَرَنَا ‏ ‏ابْنُ جُرَيْجٍ ‏ ‏أَخْبَرَنِي ‏ ‏عَبْدَةُ بْنُ أَبِي لُبَابَةَ ‏ ‏أَنَّ ‏ ‏وَرَّادًا ‏ ‏مَوْلَى ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ كَتَبَ ‏ ‏الْمُغِيرَةُ بْنُ شُعْبَةَ ‏ ‏إِلَى ‏ ‏مُعَاوِيَةَ ‏ ‏كَتَبَ ذَلِكَ الْكِتَابَ لَهُ ‏ ‏وَرَّادٌ ‏ ‏إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏يَقُولُ حِينَ سَلَّمَ ‏ ‏بِمِثْلِ حَدِيثِهِمَا إِلَّا قَوْلَهُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ فَإِنَّهُ لَمْ يَذْكُرْ ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏حَامِدُ بْنُ عُمَرَ الْبَكْرَاوِيُّ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏بِشْرٌ يَعْنِي ابْنَ الْمُفَضَّلِ ‏ ‏قَالَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَزْهَرُ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عَوْنٍ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏وَرَّادٍ ‏ ‏كَاتِبِ ‏ ‏الْمُغِيرَةِ بْنِ شُعْبَةَ ‏ ‏قَالَ كَتَبَ ‏ ‏مُعَاوِيَةُ ‏ ‏إِلَى ‏ ‏الْمُغِيرَةِ ‏ ‏بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَنْصُورٍ ‏ ‏وَالْأَعْمَشِ

முஃகீரா பின் ஷுஅபா (ரலி), முஆவியா பின் அபீஸுஃப்யான் (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள். அதில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்தவுடன், “லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹூ லா ஷரீக்க லஹூ; லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து; வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லா மானிஅ லிமா அஃதைத்த; வலா முஃத்திய லிமா மனஃத்த; வலா யன்ஃபஉ தல்ஜத்தி மின்க்கல் ஜத் (வணங்குதற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறில்லை; அவன் தனித்தவன்; அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்கே உரியது. எல்லாப் புகழும் அவனுக்கே உரியது. அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா, நீ கொடுத்ததைத் தடுப்பவர் எவருமிலர். நீ தடுத்ததைக் கொடுப்பவர் எவருமிலர். செலவந்தரின் செல்வம் எதுவும் உன்னிடமிருந்து காத்துக் கொள்ள அவருக்குப் பயனளிக்காது)” என்று கூறுவார்கள் என்று எழுதப்பட்டிருந்தது.

அறிவிப்பாளர் : முஃகீரா பின் ஷுஅபா (ரலி) வழியாக அவர்களின் (முன்னாள்) அடிமை வர்ராது (ரஹ்)

குறிப்பு :

அபூபக்ரு (ரஹ்), அபூகுரைப் (ரஹ்) ஆகிய இருவர் வழி அறிவிப்பில், “முஃகீரா (ரலி) என்னை எழுதப் பணித்ததன்பேரில், முஆவியா (ரலி) அவர்களுக்கு அதை நான் எழுதினேன்” என்று வர்ராது (ரஹ்) குறிப்பிடுகிறார்.

இபுனு ஜுரைஜ் (ரஹ்) வழி அறிவிப்பு, “முஃகீரா பின் ஷுஅபா (ரலி), முஆவியா (ரலி) அவர்களுக்குக் கடிதம் எழுதினார்கள் … அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தொழுகையை முடித்து விட்டால் …” என்று தொடங்கி, “லா இலாஹ இல்லல்லாஹு … ” எனத் தொடர்ந்து, “… என்று கூற நான் செவியேற்றிருக்கிறேன்” என முஃகீரா (ரலி) கூறியதாக முடிகிறது. ஆனால் அதில், “… வஹுவ அலா குல்லி ஷையின் கதீர் (அவன் அனைத்தின் மீதும் ஆற்றலுள்ளவன்)” எனும் சொற்கள் இடம்பெறாமல் (விடுபட்டு) உள்ளன.

இபுனு அவ்னு (ரஹ்) வழி அறிவிப்பில், “முஆவியா (ரலி), முஃகீரா (ரலி) அவர்களுக்கு விளக்கம் கேட்டு எழுதியதாகவும் அதற்கு மறுமொழியாக, முஃகீரா (ரலி) இந்த ஹதீஸை(க்கூற, வர்ராது-ரஹ்) எழுதியதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.