அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 821

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَفَّانُ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏حَمَّادُ بْنُ سَلَمَةَ ‏ ‏عَنْ ‏ ‏ثَابِتٍ ‏ ‏عَنْ ‏ ‏أَنَسٍ ‏

‏أَنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏كَانَ ‏ ‏يُصَلِّي نَحْوَ ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏فَنَزَلَتْ “‏قَدْ نَرَى ‏ ‏تَقَلُّبَ ‏ ‏وَجْهِكَ فِي السَّمَاءِ ‏ ‏فَلَنُوَلِّيَنَّكَ ‏ ‏قِبْلَةً تَرْضَاهَا ‏ ‏فَوَلِّ ‏ ‏وَجْهَكَ ‏ ‏شَطْرَ ‏ ‏الْمَسْجِدِ الْحَرَامِ” ‏فَمَرَّ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ ‏ ‏بَنِي سَلِمَةَ ‏ ‏وَهُمْ رُكُوعٌ فِي صَلَاةِ الْفَجْرِ وَقَدْ صَلَّوْا رَكْعَةً فَنَادَى أَلَا إِنَّ الْقِبْلَةَ قَدْ حُوِّلَتْ فَمَالُوا كَمَا هُمْ نَحْوَ الْقِبْلَةِ ‏

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது, “(நபியே!) உங்கள் முகம் (அடிக்கடி) வானத்தின் பக்கம் திரும்புவதை நாம் காண்கிறோம். எனவே, நீங்கள் விரும்புகின்ற கிப்லா(வாகிய கஅபா)வின் பக்கம் நிச்சயமாக (இதோ) உங்களை நாம் திரும்பச் செய்கிறோம். ஆகவே, உங்கள் முகத்தை மஸ்ஜிதுல் ஹராம் (புனிதப் பள்ளிவாசலை) நோக்கித் திருப்புங்கள்” எனும் (2:144ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது. பனூஸலிமா குலத்தைச் சேர்ந்த ஒருவர் (எங்களுடன் தொழுதுவிட்டுத்) தமது குலத்தாரிடம் சென்றார். அப்போது அவர்கள் ஃபஜ்ருத் தொழுகையின் முதல் ரக்அத்தைத் தொழுதுவிட்டு (இரண்டாவது ரக்அத்தின்) ருகூஉவில் இருந்தபோது, “அறிந்து கொள்ளுங்கள்! இந்தக் கிப்லா மாற்றப்பட்டுவிட்டது” என்று உரத்த குரலில் அவர் அறிவித்தார். உடனே அம்மக்கள் தொழுகையிலிருந்தவாறு அப்படியே (கஅபா எனும் தற்போதைய) இந்தக் கிப்லாவை நோக்கித் திரும்பிக் கொண்டனர்.

அறிவிப்பாளர் : அனஸ் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 820

حَدَّثَنَا ‏ ‏شَيْبَانُ بْنُ فَرُّوخَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ الْعَزِيزِ بْنُ مُسْلِمٍ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏عَبْدُ اللَّهِ بْنُ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏ح ‏ ‏و حَدَّثَنَا ‏ ‏قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ ‏ ‏وَاللَّفْظُ لَهُ ‏ ‏عَنْ ‏ ‏مَالِكِ بْنِ أَنَسٍ ‏ ‏عَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ

بَيْنَمَا النَّاسُ فِي صَلَاةِ الصُّبْحِ ‏ ‏بِقُبَاءٍ ‏ ‏إِذْ جَاءَهُمْ ‏ ‏آتٍ ‏ ‏فَقَالَ إِنَّ رَسُولَ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏قَدْ أُنْزِلَ عَلَيْهِ اللَّيْلَةَ وَقَدْ أُمِرَ أَنْ يَسْتَقْبِلَ ‏ ‏الْكَعْبَةَ ‏ ‏فَاسْتَقْبَلُوهَا وَكَانَتْ وُجُوهُهُمْ إِلَى ‏ ‏الشَّامِ ‏ ‏فَاسْتَدَارُوا إِلَى ‏ ‏الْكَعْبَةِ ‏

‏حَدَّثَنِي ‏ ‏سُوَيْدُ بْنُ سَعِيدٍ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏حَفْصُ بْنُ مَيْسَرَةَ ‏ ‏عَنْ ‏ ‏مُوسَى بْنِ عُقْبَةَ ‏ ‏عَنْ ‏ ‏نَافِعٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏وَعَنْ ‏ ‏عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ ‏ ‏عَنْ ‏ ‏ابْنِ عُمَرَ ‏ ‏قَالَ ‏ ‏بَيْنَمَا النَّاسُ فِي صَلَاةِ ‏ ‏الْغَدَاةِ ‏ ‏إِذْ جَاءَهُمْ رَجُلٌ بِمِثْلِ حَدِيثِ ‏ ‏مَالِكٍ ‏

மக்கள் குபாவில் சுப்ஹுத் தொழுது கொண்டிருந்தபோது அவர்களிடம் ஒருவர் வந்து, “நேற்றிரா அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவசனம் அருளப்பெற்றுள்ளார்கள். (அதில் தொழுகைக்கு) இனிமேல் இறையில்லம் கஅபாவை முன்னோக்க வேண்டுமென்று அவர்களுக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. ஆகவே, நீங்கள் கஅபாவை முன்னோக்கித் தொழுங்கள்” என்று அறிவித்தார். அப்போது மக்களின் முகம் (பைத்துல் மக்திஸ் திசையான) ஷாம் நாட்டை நோக்கியிருந்தது. உடனே மக்கள் தங்கள் முகங்களை (அப்படியே) கஅபாவின் பக்கம் திருப்பிக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் : இபுனு உமர் (ரலி)

அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 819

حَدَّثَنَا ‏ ‏مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى ‏ ‏وَأَبُو بَكْرِ بْنُ خَلَّادٍ ‏ ‏جَمِيعًا ‏ ‏عَنْ ‏ ‏يَحْيَى ‏ ‏قَالَ ‏ ‏ابْنُ الْمُثَنَّى ‏ ‏حَدَّثَنَا ‏ ‏يَحْيَى بْنُ سَعِيدٍ ‏ ‏عَنْ ‏ ‏سُفْيَانَ ‏ ‏حَدَّثَنِي ‏ ‏أَبُو إِسْحَقَ ‏ ‏قَالَ سَمِعْتُ ‏ ‏الْبَرَاءَ ‏ ‏يَقُولُا ‏

صَلَّيْنَا مَعَ رَسُولِ اللَّهِ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏نَحْوَ ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏سِتَّةَ عَشَرَ شَهْرًا أَوْ سَبْعَةَ عَشَرَ شَهْرًا ثُمَّ صُرِفْنَا نَحْوَ ‏ ‏الْكَعْبَةِ

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு/பதினேழு மாதங்கள் தொழுதோம். பிறகு நாங்கள் கஅபா திசை நோக்கித் திருப்பப்பட்டோம்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாக அபூ இஸ்ஹாக் (ரஹ்)

அத்தியாயம்: 5, பாடம்: 03, ஹதீஸ் எண்: 818

حَدَّثَنَا ‏ ‏أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ ‏ ‏حَدَّثَنَا ‏ ‏أَبُو الْأَحْوَصِ ‏ ‏عَنْ ‏ ‏أَبِي إِسْحَقَ ‏ ‏عَنْ ‏ ‏الْبَرَاءِ بْنِ عَازِبٍ ‏ ‏قَالَ ‏
‏صَلَّيْتُ مَعَ النَّبِيِّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏إِلَى ‏ ‏بَيْتِ الْمَقْدِسِ ‏ ‏سِتَّةَ عَشَرَ شَهْرًا حَتَّى نَزَلَتْ الْآيَةُ الَّتِي فِي ‏ ‏الْبَقَرَةِ ‏” ‏وَحَيْثُ مَا كُنْتُمْ فَوَلُّوا وُجُوهَكُمْ ‏ ‏شَطْرَهُ “‏

‏فَنَزَلَتْ بَعْدَمَا صَلَّى النَّبِيُّ ‏ ‏صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ‏ ‏فَانْطَلَقَ ‏ ‏رَجُلٌ ‏ ‏مِنْ الْقَوْمِ فَمَرَّ بِنَاسٍ مِنْ ‏ ‏الْأَنْصَارِ ‏ ‏وَهُمْ يُصَلُّونَ فَحَدَّثَهُمْ ‏ ‏فَوَلَّوْا ‏ ‏وُجُوهَهُمْ ‏ ‏قِبَلَ ‏ ‏الْبَيْتِ ‏

“நீங்கள் எங்கிருந்தாலும் உங்கள் முகங்களை (தொழுகையின்போது கஅபா) அதன் பக்கமே திருப்புங்கள்” எனும் அல்பகரா அத்தியாயத்திலுள்ள (2:144ஆவது) வசனம் அருளப்பெறும்வரை நபி (ஸல்) அவர்களுடன் நான் பைத்துல் மக்திஸை நோக்கிப் பதினாறு மாதங்கள் தொழுதிருக்கிறேன். நபி (ஸல்) அவர்கள் (ஒரு) தொழுகையை முடித்த பின்னர்தான் இவ்வசனம் அருளப்பெற்றது. (எங்களுடன் தொழுத) மக்களில் ஒருவர், (பைத்துல் மக்திஸை நோக்கித் தொழுது கொண்டிருந்த) அன்சாரிகளில் சிலரைக் கடந்து சென்று (தொழும் திசை மாற்றப்பட்ட செய்தியை) அவர்களிடம் தெரிவித்தார். உடனே அவர்கள் (தொழுகையிலிருந்தவாறே) தம் முகங்களை இறையில்லம் (கஅபாவை) நோக்கித் திருப்பிக் கொண்டனர்.

அறிவிப்பாளர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)